Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் “அதை” பொருட்படுத்தவில்லை!” – நடிகை தமன்னா

தெலுங்கில் பிசியாக நடிக்கும் நடிகை தமன்னா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:–

நான் ஓய்வில்லாமல் நடிக்கிறேன். இந்த வருடம் மட்டும் நான் நடி த்து 4, 5 படங்கள் வருகின்றன. கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தமிழி லும் படமொன்று வந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்திப் படத்திலும் நடி க்கிறேன்.

நான் நடித்த படங்கள் எல்லாமே கமர்ஷியல் படங்கள். கலை படங் களில் நடிக்க மாட்டீர்களா என்று கேட்கிறீர்கள். அது போன்ற படங் கள் இதுவரை அமைய வில்லை. நல்ல கதைகள் வந்தால் நடிப் பேன்.

சினிமா என்பது ரசிகர்களுக்கானது. அவர்க ளுக்கு பிடித்த படங்களில் நடி ப்பது முக்கியம் கமர்ஷியல் படங்களைதான் ரசிகர்கள் அதிக ம் விரும்புகிறார்கள். எனவே கமர்சியல் படங் களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். இதுபோன்ற படங்களில் கலைப்படங்களை போல் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வா ய்ப்புகள் இருக்காது. அதை பொருட்ப டுத்தவில்லை. ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் கொஞ்சநேரம் நடித்தா லே போதுமானது.

படங்களில் கதாநாயகிகளைவிட கதா நாயகர்களுக்கே முக்கியத்துவம் அளி க்கின்றனர். கதாநாயகிகளும் முக்கிய ம்தான் அவர்களும் திறமையாகத்தான் நடிக்கிறார்கள். நடிகைக ளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு தமன்னா கூறினார்.

Leave a Reply