Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு திரைப்படத்திற்காக உண்மைக் காதலர்களாகவே மாறிய ஜோடி!

காதல் என்பது கல்லறையோடு முடிந்து விடாமல் அதன்பின்னும் தொடர்கிறது என்ற வரியை மையமாக வை த்து, எடுக்க‍ப்பட்ட‍ என்றென்றும்’ திரைப்படம் இது! இத்திரைப்படத்தை சினிஸ் இயக்குகி றார். தரண் இசையமைத்துள்ளார். இத்திரை ப்படத்தில் ஏற்கென வே ‘வாரணம் ஆயிரம்’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவரும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலக்கிய சதீஷ் கதா நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி யாக நடிகை பிரியங்கா ரெட்டி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சினிமாவிற்காக காதலி க்காமல், இவர்கள் இருவரும் உண்மைக் காதலர்களாக மாறி வாழ்ந்திருக்கிறார்களாம்.

இன்று சென்னை சத்யம் திரையரங்கில் என்றென்றும்’ என்ற திரை ப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விரு ந்தினர்களாக தயாரிப்பாளர் ஞான வேல் ராஜா, இயக்குனர் கௌதம் வாசு தேவ் மேனன், திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் பி.எல்.தேனப்பன், பின்ன ணி பாடகர் நிகில் மேத்யூ, நடிகர் திலீப் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தின் ஆடியோ வை கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட பி.எல். தேனப்பன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், இத்திரைப்ப டத்தின் கதாநாயகனான சதீஷ் திறமை யான நடிகர். நான் இயக்க விருந்த ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படம் ஏதோ சில காரணங் களால் கைவிடப் பட்டது. அந்த படத்தில் சதீஷ் ஒரு முக்கி யமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந் தமா கியிருந்தார். அந்த படம் கை விடப் பட்டபோது அவர் எந்த அளவிற்கு வேத னையடைந்தாரோ, அந்தளவுக்கு நானு ம் வேதனைய டைந்தேன். தமிழ் சினிமா விற்கு தற்போது புதிய இளம் நடிகர்கள் அதிகம் தேவைப்படு கிறார்கள். முக்கியமாக பெண்கள் தமிழ் சினி மாவுக்கு வர முன்வர வேண்டும். அப்பொழுது தான் சினிமா உலகம் ஆரோக்கியமாக இருக்கும். அதே போல் புதிய இயக்குனர்களும் தமிழ் சினிமாவிற்கு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

%d bloggers like this: