Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்

இந்துத்திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண் டு செய்யப்படுபவை. அவை யாவும் அர் த்தமுள்ளவை. திருமணங்களில் சொ ல்லப்படும் மந்திரங்களில் பெரும்பான் மை மந்திரங்கள் தேவர்களைப் பணிவ தாகவும், மேன்மையான செய்திகளை க்கொண்டதாகவும்  தனிமனித உறுதி மொழிகளாகவும் இருக்கின்றன. திரு மணம் என்ற சடங்கில் சொல்லப்படும் மந்திரங்கள் மணமக்களுக்குப் புரியாமல் இருப்பது வருத்தத்திற்கு ரிய விஷயமே. அதை விட அதிக வருத்தத்திற்குரிய விஷயம் இந்த சமஸ்கிருத மந்திரங்களை ஓதுபவர்கள் கூட அர்த்தம் புரியாமல் எந்திரத் தனமாக வேகமாகச்சொல்லிக்கொண்டே போவது தான். சொல்பவருக்கும் புரிவதில்லை, யாருக்காக சொல்லப்படுகிறதோ அவர்க ளுக்கும் புரிவதில்லை. வெறும் சத்தங்க ளும், சடங்குகளு மாகத்திருமணம் நடந் து முடிப்பது வேதனையாகவே இருக்கின் றது.
 
சில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த் தம் என்று பார்ப்போம். முதற்கடவுளாகிய வினாயகரைத் துதித்து, பின் நவக்கிரகங்களைப் பூஜித்து மணமக னிற்கும், மணப் பெண்ணிற்கும் கையில் காப்பு கட்டி அக்னியைத் தொழுது சங்கல்பம் செய்வதில் ஆரம்பிக்கிறது திருமணம்.
 
நோக்கம் என்ன என்றுசொல்வ துதான் சங்கல்பம். எதற்காக இதைச் செய்கிறோம் என்றும் இந்த புனித சடங்கை இறைவன் நல்லபடி யாக நடத்திக் கொடுக் கட்டும் என்றும் வேண்டுகிறார் கள்.  இல்லற தர்மத்தை இவர்க ள் இருவரும் சரிவரக் காத்து நன் மக்கள் பெற்று நீடுழி வாழ திருமணம்செய்து கொள்கிறார்கள் என் பதே சங்கல்பம்
 
மணப்பெண்ணின் தந்தை மணமகனை மகா விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடி களைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப் பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப்புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறை யொளியில் தேஜஸுடன் திகழ்வேனாக!’’  மணமகனை அழைத்துக் கொண்டு போய் அமர வைக்கும் மணப்பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசன ம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’
பின் நடக்கும் கன்யாதானத்தில் மணப்பெண்ணின் தந்தை மணமக னிடம் இப்படிச் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்கு கிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவு டையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வ ம், அன்பு அனைத்துக் கும் காவலாக இருப்பாள்…’’ 
 
மணமகன், மணப்பெண்ணை ஏற்று க் கொண்டு மும்முறை உறுதி சொல் கிறான். ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பா லும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’  என்று.
 
மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உம க்கு வழங்குகிறேன். இதன்மூலம் எனது முந்தைய பத்து தலைமுறைகள் மற்று ம் பிந்தைய பத்து தலைமுறைகள் கர்மவினைகளிலிருந்து விடு தலைபெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள்மூல ம் பிறந்த அறவழியில் நிற்கப்போகும் குழந்தைகளின்மூலம் நிகழட்டும்! பூமித் தாயும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் நான்செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டு ம்!’’
பின் அவர் மணமகனிடம், ‘‘பக்தி, செல்வ ம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொ ள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்று கேட்டுக்கொ ள்ள மணமகனும் பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடை யூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறான்.

மணமகன், மணமகள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோத ரியர் மற்றும் மூத்த சுமங்கலிகள் மற்றும் இருமுடிச்சுகளைப் போடு கிறார்கள். மங்கல நாணை அணி விக்கையில் சொல்லும் மந்திரம் சினிமாக்களில் கேட்டாவ து பலருக்கும் தெரிந்திருக்கும்.

மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவித ஹேதுநா |
கண்டே பத்நாமி ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம் ||
இது மணமகன் சொல்வதாக அமைந்த மந்திரம்.  ‘‘உன்னோடு நான் நீடுழி வாழ வே ண்டி இந்த மங்கல நாணை உன் அழகிய கழு த்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளு ம் பெற்று நீ நூறாண்டு நிறை வான வாழ்க் கை வாழ இறைவன் அருள் புரியட்டும்!’’
 
அதன்பின் அக்னியைச் சுற்ற மணமகன் மண மகளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமா ன செயல்களில் என்னைத் தூண்டப் போகும் பெண்ணே! என் வீட்டின் அரசியாக அடியெடுத்து வை!’’
 
இதற்குப் பின் பாணிக்கிரஹண மந் திரம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மண மகன், ‘‘ஓ பண்புள்ள பெண் ணே! கடவுளர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார் கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திரு க்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலை வாயிலில் நுழைகிறேன். இதுவரை உன்னை க் காத்து வந்த சோமன், பகன் மற்றும் அக்னி யின் ஆசிகள் எனக்கு இருக்கட்டும் .’ என்கி றான்
பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுது விட்டு. பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் மணமகன் தொட்டு,  மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்த பதி’ எனப்படுகிறது. ஒவ்வொரு அடியிலும் மணமகன் சொல்வதாக அமையும் மந்திரத்தின் பொருள் இது.  முதல் அடி எடுத்து வைக்கும் போது கணவன் கூறுவது:

மணமகள் மணமகன் வீட்டிற்கு வந்து புத்திரபாக்கியங்களைப் பெற் று குலவிருத்தி செய்து, அனைவரு க்கும் சந்தோஷம் அளிக்க வேண் டும் எனவும், அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவை குறையாமல் இருக்க நாம் இருவரும் மஹா விஷ்ணு வைப் பிரார்த்தனை செய்வோம்.

இரண்டாவது அடியின்போது மனை வியின் தேகவலிமைக்கு வேண்டிக் கொண்டும், அவள் ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கவு ம், அவை பூர்த்தியடையவேண்டியும், அதற்கான உடல், மன வலி மையை அவள் பெற மஹாவிஷ்ணு தரவேண்டும் எனவும் கேட் டுக்கொள்வான்.

மூன்றாம் அடியின்போது இருவ ரும் சேர்ந்து வாழப் போகும் புத்தம் புதிய வாழ்க்கையில் இல்லறத் தை நல்லறமாகச் செய்ய வேண்டி ய கடவுள் ஒத்துழைக்கவேண்டும் எனவும், எடுக்கும் முயற்சிகளிலு ம் இருவருக்கும் நம்பிக்கையும், தர்மத்தை மீறாமலும் இருக்க வே ண்டியும் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வான்.

நான்காம் அடியின் போது கணவன் தானும், தன் மனைவியும் பூவு லக இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிக்க வேண்டும் என்றும் அது முழுமையாகக் கிடை க்க மஹாவிஷ்ணு அருள் செய்ய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வான்.

ஐந்தாம் அடியின் போது தன் மனை வியாய் வந்து இல்லற சுகம் என் பது வெறும் உடல் சுகம் மட்டுமில்லாமல்,  மற்ற சுகங்களான வீடு, வாசல், மற்றச் செல்வங்களுமாக இருக்க அந்த மஹா விஷ்ணு அருள் புரியவேண்டும் என்று அவன் வேண்டிக் கொள்கிறான்.

ஆறாம் அடியின்போது பருவ கால ங்களின் தாக்கங்கள் தங்களைப் பெரிய அளவில் தாக்காதவாறும் அதன்மூலம் இல்வாழ்க்கையின் சுகமோ, சுவையோ குறையாமலும் இருவர் மனங்களும் அதற்கேற்ற வல்லமையோடு இருக்க மஹா விஷ்ணுவைப் பிரார்த்திப்பதாகச் சொல்கிறது.

ஏழாம் அடியின் போது ”இல்வாழ்க்கையில் செய்யப் போகும் வேள் விகள் அனைத்துக்கும் நீ உதவியாகவும் துணையாகவும் இருந்து என் மனதையும், உன் மனதையும் ஆன்மீகத்திலும் செலுத் த வேண்டியும் எல்லாக் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றவும் வேண்டிய பலத்தை உனக்கு அந்த மஹாவிஷ்ணு கொடுக்கட்டும்” என்று மணமகன் கூறுகி றான் 

பிறகு மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல் வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பா யாக! உன்னை எதிர்ப்பவர்க ளை இந்தக் கல்லின் வலிமையுடன் எதிர் கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரி களுடன் கருணையுட னும் நடந்து கொள்வாயாக! ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததி யே சாலச் சிறந்தவள் என்று அறிவித் தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக்கொண்டார்கள். அதே போல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருத ப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கி றான்.
 
இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களி ன் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப் பாற்று!’’
இப்படி சொல்லப்படும் மந்திரங்களி ன் அர்த்தம் புரிகையில் தான் திரும ணம் என்பது உறுதிமொழிகளிலும், ஒப்பந்தங்களிலும், பிரார்த்த னைகளிலும் உருவாகும் புனிதச் சடங்கு என்பது புரிகிறதல்லவா?
 –  தினத்தந்தி

Leave a Reply