Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுமணத் தம்பதியரே! உங்களது மணவாழ்வு சிறக்க‍ நீங்கள் செய்ய‍ வேண்டிய 5 முக்கிய கடமைகள்

திருமணம் என்றதும் மணப்பெண், மணமகன் இருவருக்குமே ஒரு படபடப்பு ஒட்டிக்கொள்ளும் என்பார்கள்.  தற்காலத்திய இளைஞர் களிடம் அப்படியொரு நிலையைப் பார்க்க முடிவதி ல்லை. அவர்களி டம் பதற்றம் கிடையாது. நிச்சயதா ர்த்தம் முடிந்தவுடனே இருவரும் கை கோர்த்து விடுகிறார்கள்.(காதல் திரு மணம் என்றால் இந்தக் கைகோ ர்ப்பு பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.) தவிர, தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து தீர்க்கமாக சிந்திக்கிறார்கள். திட்டமிடுகிறார் கள்.

ஒருவருக்கொருவர் முன்னதாகவே அறிமுகம் ஆகிக்கொள்வதா ல் திருமணத்தின்போது தேவையற்ற டென்ஷன் மணமக்களி டையே இல்லாமல் போகிறது.

ஆனால் திருமணத்திற்குப் பின் புது வாழ்க்கை அமைத்துக் கொள்ளு ம் தம்பதிகளுக்கு வேறு மாதிரியா ன சமூக, குடும்பக் கடமைகள் உண்டு. அது அவர்களின் திருமண வாழ்க்கை சிறக்க காரணமானது. அவற்றி ல் 5 முக்கிய கடமைகள் இங்கே:

1. சமூக பொறுப்பு:

காதல் திருமணமோ , பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திரும ணமோ எது வென்றாலும் அதற்கேற்ப சமூகம் உங்களை கண்கா ணிக்கத் தொடங்கி விடுகிறது. நீங்கள் ஒரு குடும் பத்தினருக்கும் மட்டும் உரியவர் அல்ல. இரண்டு குடும்பத்திற்கும் இணைப்பு பால மாக எவ்வாறு செயல்படப் போகிறீர்கள் என்பதை உங்களைச் சுற் றியுள்ளவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். உங்களின் நிறை, குறைகள் அலசப்படும். அது உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமா கவோ அமைய லாம்.

உங்கள் குடும்பம் மட்டுமின்றி அக்கம் பக்கம் வசிப்பவர்கள், உங்க ளது நண்பர்கள், தோழிகள் என்று உங்களுக்குத் தெரிந்த அனைவ ருமே உங்களை கண்காணிக்கக் கூடியவர்களாகவும் எடைபோட க் கூடியவர்களாகவும் மாறிவிடு வார்கள்.

இவ்வளவு ஏன், அன்றாடம் தெரு வில் வரும் காய்கறிக்காரர் முதற் கொண்டு கியாஸ் சிலிண்டர் சப் ளை செய்பவர் வரை உங்களைப் பற்றிய குணாதி சயங்கள் பேசப்படும். இதனால் உங்களுக்கு சமூக த்தில் பொறுப்புகள் நிறைய இருக்கின்றன என்பதை உணர வேண் டும்.

கல்யாணமாகி சில மாதங்கள் வரை உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இரண்டு வீட்டாரும் தருவார்கள்.அதன் பின் உங்களுக்கு மதிப்பு குறைவதும் கூடுவதும் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தினைப் பொறுத்துத்தான் அமையும்.

2. தாம்பத்ய உறவு:

திருமணத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக கற்ப னை செய்து வைத்துக் கொண்டிருக்கும் விஷயம் இது. சினிமாவில் கதா நாயகனும், கதாநாயகியும் கட்டிப் பிடித்து ஓடியாடி மரங் களுக்குப் பின் டூயட் பாடுவது, படுக்கை அறையில் சந்தோஷமாக இருப்பது போன்ற காட்சிகளைப் பார்ப்பதன் மூலம் இரு பாலரின் உடலிலும் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்கனவே நிகழ்ந் திருக்கும்.

இதனால் முதல் நாள் இரவின்போதே தான் பார்த்தையெல்லாம் நிஜமாக்கிவிட நினைக்கும் துடிப் பும் முழுமையான தாம்பத்ய சுகம் கிடைத்திடவேண்டும் என்ற எதிர் பார்ப்பும் இன்றைய மணமகன் களுக்கு நிறையவே இருக்கிறது. மணப்பெண்ணுக்கோ இனம் புரி யாத ஒரு எதிர்பார்ப்பு. முதல் இரவு எவ்வாறு இருக்குமோ என்று ஓர் பதற்றம்.
 
ஆனால் இவர்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை மறந்து விடு கிறார்கள்.கல்யாணம் ஆன அன்றே தங்களது முழு விருப்பமும் நிறை வேறிடவேண்டும் என்று நினைப்பது தவறு. ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மணமக் கள் மனரீதியாக மட்டுமே தயா ராகி இருப்பார்கள். அவர்களை தாம்பத்ய பந்தம்தான் உடல் ரீதி யாகவும் இணைக்கிறது.

அதனால் கூடியவரை புதுமணத் தம்பதிகள் உடனடி வேகம் காட்ட வேண்டிய அவசியமில்லை. தங்களது உணர்வுகளை மெல்ல மெல்ல பக்குவமாக வெளிப்படுத்தி அரங் கேற்றிக் கொண்டால் இருவருக்குமே இல்லற சுகம் இனிக்கும்.

3. முடிவெடுத்தல்:

திருமணம் செய்து கொண்ட அடுத்த வினாடியே நீங்கள் பல விஷயங் களுக்கு அதிபதியாகி விடுகிறீர்கள். பணம், நகை, உடை, சொந்த பந்தங்கள் இவற்றில் முக்கியமான வை. இதை விட மிகவும் முக்கி யமானது, உங்களது வாழ்க்கைத் துணை என்பதை மறந்து விட வேண் டாம்.
 
ஆம், இனி உங்களுடன் ஆயுள் முழுக்க இன்ப துன்பங்களில் பங் கேற்பவர் அவர்தானே?… இதனால் ஒரு நல்ல தாயாக, ஒரு சிறந்த தந்தையாக அல்லது உங்களது குழந்தைகளுக்கு நல்ல பெற்றோ ராக என்று பல விஷயங்களில் நீங்கள் பிரகாசிக்க வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு உங்களுக்கு அவசியம் தேவை.

எனவே தினமும் காலையில் எழுந் ததும் இருவரில் யாராவது ஒருவர் நெற்றியில் முத்தம் கொ டுப்பதன் மூலம் அன்றைய பொ ழுதினை நல்லவிதமாக தொட ங்கலாம். இன்னும் ஆழமான அன்பைக் காட்டவேண்டும் என்றால் மார்பிலோ அல்லது உதட்டிலோ முத்தம் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணைவர் நல்ல குஷி மூடில் இருந்தால் செல்ல மாக காதைப் பிடித்து திருகக் கூடச் செய்யலாம்.
 
உங்களின் கனவுகள், வாழ்க்கை யில் பட்ட கஷ்டங்கள் ஆகியவற் றை மனம் விட்டு பேசுங்கள். அப் போதுதான் மனச் சுமை பாதியாக குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

நல்ல விஷயமோ, கெட்டதோ எந்தவொரு பிரச்சினைக்கும் தன்னி ச்சையாக முடிவை எடுக்க வேண் டாம். உங்களின் துணைவரோடு கலந்து ஆலோசியுங்கள். அவர் சொல்வதில் உள்ள நன்மை, தீமை களை அமைதியாக அலசுங்கள். பின்னர் முடிவெடுங்கள். பிரச்சி னையை ஏற்படுத்தக் கூடிய முடிவு கள் என்றால் சற்று தாமதமாக நிதானமாக யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை.

4. குழந்தைகளை திட்டமிடல்:

உங்களுக்கு ஒரு குழந்தை போதுமா, இரண்டு குழந்தைகள் வேண் டுமா? என்பதை திட்டமிட்டுக் கொள் ளுங்கள். முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே இதில் நீங்கள் தீர்மானமாக இருக்க வேண்டும்.

இரண்டு குழந்தைகளைப்பெற்றால் எதிர் காலத்தில் அவர்களது கல்விச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றை உங் களது வருமானத்தின் மூலம் ஈடுகட்ட முடியுமா? என்பதை நன்கு ஆலோசித் துக் கொள்ளுங்கள். பெரும்பாலானவர் கள் முதல் குழந்தையை வேகமாக பெற்றெடுத்து விடுவார்கள். அவர்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்குள் இரண்டாவது குழந் தையும் பிறந்து விடும்.

இதுமாதிரியான நிலைமை ஏற்படா மல் தடுக்க முதல் குழந்தை பெறு வதற்கு முன்பாகவே புதுமணத் தம் பதிகள் இதைப் பற்றி ஒரு தெளிவா ன முடிவை எடுப்பது அவசியம்.

இதற்காக இருவரும் வெட்கமோ, சங்கடமோ படத்தேவையில்லை . குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் மட்டும் மற்றவர்களின் ஆலோ சனையைக் கேட்டு நடக்காமல் நீங்கள் இருவரும் ஒருமித் ததொரு முடிவிற்கு வாருங்கள்.

5. பணம், சொத்து சேமிப்பு:

ஆடம்பரமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைத் தொடங்கும் பெரும்பாலான தம்பதிகள் கடைசிவரை தங்களது வாழ்க்கை சொகுசாகவும் பகட் டாகவும் இருக்க வேண்டும் என்று நினைக் கிறார்கள்.
 
ஆனால் குடும்பத்தை நடத்து வதற்கு முதல் காரணியாக இருப்பது பணம் தான் என்ப தை தம்பதிகள் உணரவேண்டும். பணத்தை சரியான முறையில் கையாண்டால் மட்டு மே உங்களால் சொத்து சேர் ப்பது பற்றி சிந்திக்க முடியும். குறுகிய காலம் ஆடம்பர மாக வாழ் ந்து பணத்தை இழப்பதை விட சிக்கனமாக வாழ்ந்து ஆயுள் காலம் வரை நிம்மதியாக வாழ்வது எவ்வளவோ மேல்.

வங்கி கணக்கு, இன்சூரன்ஸ் பாலிசிகள், ஆபரணச் சேர்க்கை, நிலம் – வீடு வாங்குதல் எல்லாமே உங்களின் சேமிப்பைப் பொறு த்த விஷயம்.

குடும்ப நிர்வாகத்தில் பணத்தை செலவிடும்போதும், சேமிக்கும் போதும் ஒருவரே தன்னிச்சை யாக முடிவுகளை மேற்கொள்வ தைத் தவிர்க்கவேண்டும். அன்றா டம் எவ்வளவு செலவு குடும்ப த்திற்கு எற்படுகிறது, இன்னும் என்னென்ன மாதிரியான செலவு கள் வரலாம் அவற்றைச் சமாளி ப்பது எப்படி என்பதையெல்லாம் புதுமணத் தம்பதிகள் மனம் விட்டுப் பேசிடவேண்டும்.
 
வங்கியில் பணத்தைச் சேமிக்கும்போது வாழ்க்கைத் துணைவரது பெயரையும் இணைத்துக் கொ ள்ளும் பழக்கம் இன்று வேக மாக பரவிவருகிறது. இதுவும் ஒரு நல்ல அம்சம்தான்.

இந்த 5 முக்கிய கடமைகளை யும் புதுமணத் தம்பதிகள் புறக் கணிக்காமல் கடைபிடித்து நடந்து வந்தால் நடந்தால் உங்களது வாழ்க்கை முறை மற்றவர் களால் போற்றப்படுவது நிச்சயம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: