Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இது காமராஜர் சொன்ன‍து: – “எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது…. !”

பெருந்தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி நெ. த. சுந்தரவடிவே லும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது. சுந்தர வடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காம ராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத் த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்.

`நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக் கணும். அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான். கிராமவாசி எங்க போவான்? அவ னால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படி யாகாது.

சாதாரண பள்ளிக்கூட படிப்புக் கே அவன் ஆடு, மாடு, கோழியெ ல்லாம் விக்க வேண்டியிருக்கு…! மேல்மட்ட படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க…! ஏழை வீட்டுப் பிள்ளை ங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்…” என் றார் காம ராஜர்.

உடனே அதிகாரி சுந்தரவடிவேலு , இப்போது, கல்லூரிகளில் சேர்ந் து படிப்பவர்களில் நூற்றுக்கு அறு பது பேர், பிற்படுத்தப்பட்ட தாழ்த் தப்பட்ட மாணவர்கள்” என்றார். “அதைத்தானே நாம விரும்பினோ ம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராம மே மேல வந்திடுமில்லையா..

என்றார் காமராஜர். அதற்கு சுந்தர வடிவேலு பதில் அளிக்கையில், நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வளவு க்கும் காரணம் காமராசர் தான்… அவருக்குத்தான் தமிழன் கடன்பட் டிருக்கிறான்…!

அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல் இலேயே நம்ம தலைமுறையை யே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார் என்றார். உடனே காமராஜர், “அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது…. அவர் சொல்றார் நாம செய்யிறோம்! காரணகர்த்தா அவருதானே…?

இது. 1952இல் ஆரம்பிச்ச பிரச்சனை யா என்ன? ஐயாயிரம் வருஷமா இருக்கற தாச்சே. தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலே யும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெ ழுத்துன்னு சொல்லிட்டானே! இத ப்பத்தி யார் கவலைப்பட்டார்?” “பெரி யார் ஒருத்தர்தானே எல்லாத்தையும் தலையில் எடுத்துப் போட்டுகிட்டு பண்ணி கிட்டிருக்கார்.

அவரு மட்டும் இல்லேன்னா நம்ம புள்ளைங்க கதி என்னவாகியிரு க்கும்…? அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக் கிட்டிருப்பான்…! இன்னிக்கு டெபிடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந் திருக்கான்…! நம்மகிட்ட அதி காரம் இருக்கிறதாலே பெரியார் நென ச்ச காரியத்த ஏதோ கொஞ்சம் பண்ணிக் கொடுக் கிறோம்.

அவரு, எந்த அதிகாரத்தையும் கையில வச்சிக்காம ஊர், ஊரா திரிஞ்சி சத்தம் போட்டுக்கிட்டு வராரு.! அவராலேதான் நமக் கெல்லாம் பெருமை…!” என்று உணர்ச்சி பொங்கக் காமராசர் கூறினார்.

“எவ்வளவு பெருந்தன்மை இவருக்கு! தான் செய்கிற எல்லா நலத் திட்டங்களையும் தந்தை பெரியாருக்கே காணிக்கை யாக்குகிற இவரது மேன்மைதான் என்னே?” என்று எண்ணி அதிகாரி சுந்தர வடிவேலு பூரித்துப்போனார்.

நன்றி – மாலைமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: