Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்

ஒருவருக்கொருவர் அன்போடு அணைத்துக் கொள்வது செலவில் லாத மருந்து என்று இன்றைய மரு த்துவ உலகம் தெரிவிக்கிறது. டென்ச னோடு இருப்பவர்களை ஆசையோடு கட்டி அணைத்தால் அவர்களின் கோபத் தையும், டென் சனையும் குறைக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப் போது ஆச்சரியப்படத்தக்க ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
.
அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு குறை வதோடு நினைவாற்றல்அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் உறுதியா கத் தெரிவிக்கின்றனர்.
.
அன்பை வெளிப்படுத்தும் வழி ஆசை யோடு கட்டி அனைப்பதுதான். காதல ர்களோ, தம்பதியர்களோ அணைப்ப து ஒருவகை. தாய் குழந்தையை அணை ப்பது மற்றொரு வகை. இவர்கள் ஆசை யோடு அணைத்துக் கொள்வதன் மூலம் உறவு பலப்படுவதோடு பல நன் மைகள் இருக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
.
வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும்போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார் மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று தெரிய வந்தது.
.
மூளை சுறுசுறுப்பாகும்
.
சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன் ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப் படையு மாம். இதற்குக் காரணம் ஆக்ஸிடா ஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும் போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.
.
மனதளவில் மாறுதல்
.
கட்டி அணைத்தல் என்பது பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது. எனவே யாரை நீங்கள் அனைக்கிறீர் கள் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமா ன நண்பர்களை அணைக்கும் போதே மனதளவிலான மாறுதல் தெரியுமாம்.
.
கையை பிடிச்சாலே போதுமே
.
மனதிற்கு பிடித்தமானவரின்கையை பிடித்தாலும் இதே மனப்பாங் கை அடையலாம். அது நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு மிகவும் நெருக்க மான மனிதராக இருக்க வேண்டும்.
.
மனிதர்களை மென்மையாக்கும்
.
ஒருவரை கட்டி தழுவுவது உங்க ளை மேலும் மென்மையானவராக மாற் றும். வீட்டில் சண்டையோ, சமாதான மோ அடிக்கடி கட்டிப்பிடிங்க இது இருவருக் கிடையே அன்பை மேலும் மேம்படுத்தும்.
.
பரஸ்பர நேசம் முக்கியம்
.
ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூ ட்டும் போது குழந்தைக் கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மன மொழியை போல அன்பானவர்களை கட்டி தழுவும் போதும் ஏற்படும் உண்ர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியு ள்ளது. இது நேர்மறையான விளைவுக ளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இரு வருக்குமான பரஸ்பரம் மிகவும் முக்கியம்.
.
இதயநோய் வராதே
.
கட்டி அணைப்பதன்மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைவதால் இதய ம் பாதுகாப்பாக இருக்கும். அதாவது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வர வாய்ப்பே இல்லையாம்.
.
மன அழுத்தம் போயிரும்
.
மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக் கு அணைப்பு என்பது அருமருந்து. அன்போது கட்டி அணைப்பதன்மூலம் சுரக்கும் ஹார்மோ ன் மன அழுத்தத்தை போக்கி ரிலாக்ஸ் ஆக மாற்றும்.
.
பிடிக்காதவங்களை கட்டிக்கிட்டா
.
அதே போல பிடிக்காதவர்கள் கட்டி கொள்ளும் போது, ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்க ப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக் கும். அத்து டன் இந்த எதிர்மறையான மனப் போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பும் மேம்படாது என்று நரம்புநோய் மருத்துவர் சாண்ட் க்யூளர் தெரிவி த்துள்ளார்.
.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: