Tuesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம்புவுடன் காதலா? அதுவும் நானா? – கொதித்தெழும் ஹன்சிகா

தமிழகத்தின் முன்ன‍ணி நடிகைகளில் முதல் இடத்தில் இருப்ப‍வர் நடிகை ஹன்சிகா, இவரது கைவசம் நிறை ய படங்கள் வைத்திருக் கிறார். மேலும் அண்மையில் வெளியான  சிங்கம்–2, தீயா வேலை செய்யனும் குமாரு ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றுள்ள‍ ன•

வேட்டை, மன்னன் மற்றும் வாலு ஆகிய மூன்று சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா தான். இதனால், இவர்கள் இருவருக்கும் அதிக‌ நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக கிசுகிசு தீயாய் பரவியது.

இதுகுறித்து சிம்புவின் தந்தை, டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, சிம்பு, ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் நான் எதி ர்க்கமாட்டேன் அவர்களது திருமணத்தை நானே முன்னின்று நடத்தி வைப்பேன் என்று கூறி இருந்தார். இந்த செய்தியை ஆந்திர தொலைக் காட்சி சேனல்கள் போட்டி போட்டு ஒளி பரப்பின.

ஐதராபாத்தில் இருந்த ஹன்சிகாவு க்கு  இச்செய்தியை கேட்ட‍தும் சிம்புவு டன் காதலா? அதுவும் நானா? ,என்று அதிர்ச்சி அடைந்து ள்ளார். இதையடு த்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் . . .

நானும் சிம்புவுன்  காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திரும ணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகளால் நான் மிகுந்த வருத்தம் அடைந்துள் ளேன். எங்களுக்குள் காதல் இல் லை. நண்பர்களாத்தான் பழகுகி றோம். இரண்டு படங் களில் சேர்ந்து நடித்ததால் காதல் என்று வதந்தி பரப்பி உள்ளனர். என்னுடன் நடித்த மற்ற கதாநாயகர் களுடன் நான் எப்படி பழகுகிறோனோ. அப் படித்தான் சிம்புடனும் பழங்குகி றேன். சிம்புவை மணக்கப் போவதாக வெளியான செய்தியால் என்னை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்களும், தயாரிப் பாளர்களும் கவலை அடைந்து ள்ளனர். நான் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அதற்கு நிறைய காலம் இருக்கிறது. எனது திருமணம் குடும்பத்தினர் விருப்பப் படித்தான் நடக்கும். பெற்றோர் பார்க்கும் மாப்பி ள்ளையைத் தான் மணப்பேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Leave a Reply