Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகையின் கோபத்திற்கு ஆளான தொழிலதிபர்! காவல் நிலையத்தில் நடிகையிடம் மன்னிப்பு கேட்டு சமரசம்!

சென்னை பாண்டி பஜார், இங்கு எப்போது பெருங்கூட்ட‍ம் அலை மோதிக்கொண்டே இருக்கு ம். இதற்கு இங்கு அதிக அள வில் பெரிய பெரிய வணிக வளாக ங்களும், வியாபார ஸ்தலங்க ளும் இருப்ப‍தே காரணம் என்பது அறிந்த ஒன்றே!

நேற்று சென்னை பாண்டி பஜாருக்கு நடிகை சொர்ண மால்யா பொருட்கள் வாங்கி விட்டு, வீடு திரும்ப காரில் ஏறினார், . அப்போது அவரது காரின் மீது இன்னொரு கார் மோதியதால் கடுங் கோபம் கொண்ட நடிகை சொர்ணமால்யா அந்த காரை ஓட்டி வந்தவருடன் கடுமை யாக சண்டை யிட்டார். இதனால் அங்கு போக்குவரத்து நெருக் க‍டி ஏற்படவே அங்கு வந்த பாண்டி பஜார் காவல் துறையினர் இவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.. ஆனால் நடிகை சொர்ண மால்யா அந்த காவலர்களிடம் க‌டும் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். வேறு வழியின்றி, இவர்கள் இருவரையும் பாண்டி பஜார் காவல் நிலைய த்திற்கு அழைத்து சென்றனர். அங்கும் இவர்களது வாக்கு வாதம் நீடிக்க‍வே செய்த‍து.

காவல்துறையின் விசாரணையில் நடி கை சொர்ணமால்யா மீது எந்த தவறும் இல்லை என்பது. அவரது கார்மீது இடித்த காரை ஓட்டி வந்தது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் என்பது தெரிய வந்தது. இறுதியில் சொர்ண மால்யாவின் காரை சரி செய்துத் தருவதாக காவல் துறையினர் முன்னிலையில் தொழில திபர் ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டார். பிற கே சொர்ணமால்யா சமாதானமானார். இந்த சம்பவம் காரணமாக நேற்று காலை பாண்டி பஜாரில் சின்னதாக பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply