Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்கள்: – நோய்களும் அதற்கான தீர்வுகளும் & அழகு குறிப்புகளும் (கண் விரிவான பார்வை)

இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார் வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற் று எடுக்கும்தாய் தந்தையரே முதற் காரணம். அடுத்து சத்துக்குறை வான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பி டுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத் துவரை நாடாமல் அலட்சியமாக விட் டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொ டர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வே று காரணங்களினால் கண்சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.

கண் எவ்வாறு உங்களுக்குப் பார்க்க உதவுகிறது ?

கண் என்பது ஒரு புகைப்படக் கருவி போன்றதாகும். இது மூளையு டன் சேர்ந்து, உங்களைச்சுற்றியுள்ள பொரு ட்களைக்காண உதவுகிறது. கண்ணிலுள்ள வண்ணப் பகுதி விழித்திரைப் படலம் எப்படு கிறது.

அதன் நடுவில் கண்பர்வை எனப்படும் ஒரு வாயில் உள்ளது. இது விழித்திரைப் படலித் திற்குள் ஒரு கரிய வட்டமாகக் காணப்படும். ஒரு பொருளிலிருந்து வெளிவரும் ஒளிக் கற்றைகள் விழிவெண் படலத்தில், கண் பார்வையின் வழியே ஊடுருவிச் செல்கின்றன. கண் பார்வையின் அளவுவரும் ஒளியளவைக் கட்டுப்படுத்துகிறது. கண் பர்வையின் பின் புறம் ஒளிக்கற்றையை அனுப்பும் ‘லென்ஸ்’ உள்ளது. இப்படி செலுத்தப்படும் ஒளிக்கற்றைகள் விழித் திரையின் மீது விழும். விழித்திரையென்பது, புகைப்படக் கருவிக்குள் புகைப் படச்சுருள் இருப் பதைப்போல கண்ணின் பின் புறமுள்ள ஒரு மெல்லிய, உணர்ச்சிமிக்க திரையாகும்.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்பு களில் இரத்தம் உறைதல் காரணமா கப் பார்க்கின்ற பொருட்கள் கலங்க ளாகத் தெரிதல், கண்ணில் நீர்வடித ல், மாலைக்கண், வெ ளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூல மாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள்மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக்கொண்டே போக லாம்.

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?

முதலில் கூறியதுபோல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளை ப்பெறும் பெற்றோர் ஒருகாரண ம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீர ல் பாதிக்கப்பட்டாலும் கண் நோய் கள் வரும். பார்வை நரம்பில் ஏற் படும் இரத்தக்கு றைவு, இரத்த ஓட் டம் தடை படுதல், இரத்த அழுத்தம் குறை வு காரணமாகவும் கண்கோ ளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமி கள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வர லாம்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க…

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இர த்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுக ளுக்கு கேரட், பீட்ரூட், வெண்பூசணி, முள்ளங்கி, வெ ண்டைக் காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணி க் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னா சி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம். அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க…

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்த மல்லி இலைச் சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தே வையான அளவு சுத்தமா ன பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவு ம். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட்சா று, தேங்காய் துருவியது, பனங்கற்கண் டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில் லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இரு வேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண் டும்)

பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங் காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவை யான அளவு பனங்கற்கண்டு, ஏல க்கா ய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல் லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.

கண் பார்வை தெளிவடைய…

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ் தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம் பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவ ற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல் லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற் றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங் கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெ ல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப் பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவு கள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது?

1)வகுப்புப்பாடங்கள் கவனிக்கும்போது தலை வலி அல்லது களைப் பாக இருப்பது.

2)  கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படு வது.

3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.

4)  கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.

5) கண் கட்டி அடிக்கடி வருவது.

6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போ ன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே டாக்ட ரைப் பார்க்க வேண்டும்.  

மாறுகண்ணை சரி செய்ய முடியுமா?  

கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லா மல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை  நோக்கி இருந்தால் அது மாறு கண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார் கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவ றான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய் யாவிட்டால் அந்தக் கண் பார்வை யை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதி ற்குள் இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.. வயதாகியும் சிலர் மாறு கண் ணோடு நன்றாக இருப்பது போல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவ னிப்பதே நல்லது.

கண்களில் பூ விழுவது என்றால் என்ன?

கண்களில் கருவிழியில் வெள்ளையாகத்தெரிவதைத்தான் பூ விழு ந்து விட்டது என்கிறோம். இது வந்தால்  உடனடியாக கண் மரு த்து வரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்க லாம்.

கண்களுக்கு வைட்டமின் `ஏ‘ எந்தெந்த உணவுகளில் அதிகமாக உள்ளது?

முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரை க்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `ஏ‘ போதிய அளவுள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெ ய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றி லும் இச்சத்து உள்ளது.

 மூக்குக் கண்ணாடியை எப்படி செலக்ட் செய்ய வேண்டும்?

கண்ணாடி பிரேம்கள் வலுவுடைய வையாகவும், லென்சுகளை எல் லாப் பக்கங்களிலும் நன்றாகப் பிடி த்திருப்பவையாகவும், மூக்கில் படி யும் பகுதிபிரேமுடன் நன்கு பொரு ந்தியவையாகவும் இருக்க வேண் டும். காண்டாக்ட் லென்ஸ் அணிப வர்கள், மூக்குக் கண்ணாடியும் ஒன்று வைத்திருப்பது நல்லது.

கண்களைப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற லாம்?

இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத் தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண் களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண் டு நம்முடைய கண்களைத் துடைக்கவே கூடாது.

 கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய் ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போ ன்றவற்றைக் கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும் கண்களைக் கெடுத்துவிடும். காலதாமதம் செய்யாமல் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

விழிப்படலம் என்றால் என்ன ?

உங்கள் கண்ணிலுள்ள லென்ஸ் மங்கலாகிப் போவதை விழிப்பட லம் என்பார்கள். சாதாரன கண் லென்ஸ் தெளிவாக இருக்கும். ஆனால் மெல்ல மெல்ல அது, கீழ்க்கண்ட காரணங்க ளால் மங்க லாகிப்போகும்.

1. வயது முதிர்வு.
2. கண்காயம் அல்லது கண்எரிச்சல், வீக்க ம்.
3. சிலவகை மருந்துகள்.
4. நீரழிவு நோய் போன்ற நோய்கள்.

உங்களுக்கு விழிப்படலம் உள்ளது என்பதை எப்படி உணர்வீர்கள் ?

விழிப்படலமானது, மாதக்கணக்கில் மெல்ல மெல்ல உருவாகும். இதனு டைய வளர்ச்சி படிப்படியாக இருப் பதால், உங்கள் பார்வையி ன் மீதான அதன் தாக்கத்தை உங்களால் உணர முடியாமலும் போக லாம்.

விழிப்படலம், கண்களைப் பார்வை செலுத்துவதில் கடினத்தை உண்டாக் குகிறது. விழிப்படலம் உள்ளதைக் கீழ் க்கண்ட அடையா ளங்கள் உணர்த்த வல்லன.

1.கண்ணாடியை அணிந்தபோதும் சரியாகாத பார்வை மங்கல் நிலை.

2.அருகிலும், தூரத்திலும் உள்ள பொருட்க ளை நண்கு பார்க்க முடியாமற் போதல்.

3. சிறிய எழுத்துக்களைப்படிப்பதில் சிக்கல்.

4. பகலிலும் இரவில் கூர்ந்து பார்க்க வேண் டிய தொல்லை.

5.பல்லாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அணுக்கப் பார்வை (கிட்டப்பார்வை) ஏற்படு தல்.

உங்களுக்கு விழிப்படலம் உள்ளதா என்ப தை எவ்வாறு அறிய இயலும் ?

‘ஆப்தாலமாலஜிஸ்ட்’ எனப்படும் கண்மருத் துவ வல்லுநர்கள் ஊடு றுவு விளக்கைப் பயன்பகுத்தி உங்கள் கண்களை நன்கு பரிசோ திக்க வேண்டியிருக்கும். ஆப்தால மோஸ்கோப் எனும் கருவியின் உதவியுடன் உங்கள் கண்களின் உட்புறத்தையும் அவர் ஆராய்வார். இந்த பரிசோதனைகள் உங்களு க்கு விழிப்படலம் உள்ளதா என்பதை உறுதி ப்படுத்தும். உங்களுக்கு கண்விழிவிறைப்பு நோய் (க்ளா கோமா) முதலிய பிற கண் நில மைகள் இருந்தால் அறிவுரைகள் கூறப்படும்.

உங்கள் விழிப்படலத்தை எப்போது அகற்ற வேண்டும் ?

விழிப்படலம், அறுவை மருத்துவத்தால் மட்டுமே அகற்றப்படும். ஒளிக்கற்றைகளை உட்செலுத்தும் பணியைச் செய்வதற்காக, அறுவை மருத்துவத்தின் போது ஒரு செயற் கை லென்ஸ் பெரும் பாலும் அமர்த் தப்படும். இந்தச் செயற்கை லென்ஸ் அமர்த்துதல் இயற்கையான கண் லென்ஸ்ஸைப் போன்றே மிகவும் ஒத்திருக்கும். தற்போது உங்கள் பார் வையைச் சரி செய்ய இம்முறையே பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படு கிறது. எனினும் செயற்கை லென் ஸைப் பாதுகாப்பாக உங்கள் கண்ணில் பொடறுத்த முடியாமற் போகும் சமயங்களும் உள்ளன. இத்தகு விசயங் களில், உங்கள் பார்வைக்கு உதவி சிறப்புக் கண்ணாடிகளையோ, குழைமக் கண்ணா டிவில்லைகளையோ பயன்படுத்த வேண்டி யிருக்கும்.

உங்கள் விழிப்படலத்தை எப்போது அகற்ற வேண்டும் ?

நீங்கள் அறுவை மருத்துவம் செய்து கொள் ளும் ஆற்றல் உடையவ ர்தானா என்பதை உறுதி செய்துகொள்ள, அறுவை மருத்துவ த்திற்கு முன்னர் சில பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டி யிருக்கும். உங்கள் கண்களில் செயற்கை லென்ஸைப் பொருத்து வதற்கு ஏதுவாக உங்கள் கண்களின் வளைவையும், நீளத்தையும் அள்க் க வேண்டியிருக்கும்.

அறுவை மருத்துவத்திற்கு 2-3 நாட்களுக்கு முன்னரிலிருந்தே உங்கள் கண்களில் கண் சொட்டு மருந்துகள் விடப்படும்.

நள்ளிரவுக்குப் பின்னர் உறுவை மருத்துவம் நடைபெறுவதாக இரு ந்தால், அதற்கு முன்னிரவு முதலே நீங்கள் உணவு உள்பதை யோ, நீர் முதலான பானங்களைக் குடிப்பதையோ நிறஉத்தி விட வேண் டும். காலையில் அறுவை மருத்துவம் நடைபெறுவதாக இருந்தால் , நீரிழிவு நோய்ககான மருத்துகளைத் தவிர வேறேதே னும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டி யிருப்பின் சிறிதளவு நிரைமட்டும் பயன் படுத்துங்கள்.

உங்கள் மருத்துவர் வேறேதேனும் கருத்து ரைகள் கூறியிருப்பின் அவற்றையும் நீங்க ள் பின்பற்ற வேண்டும்.

வெளி நோயாளியாக உங்களுக்கு இந்த அறுவை மருத்துவம் செய்யப்படுவதால் நீங்கள் முன்தினமே வந்து மருத்துவமனை யில் தங்க வேண்டிய தேவையில்லை.

அறுவை மருத்துவத்தின் போது என்ன எதிர்பார்க்கப்படும் ?

கண்ணுக்குள்ளே நன்கு பார்ப்பதற்கு வாய்ப்பாகு ஒரு சிறப்பான அறுவை நுண்நோக்கியையும், சின்னஞ்சிறு அறுவை கருவிகளை யும் பயன்படுத்தி கண் மருத்துவ வல்லுநர் கண்களில் அறுவை மரு த்துவம் செய்வார்.

அறுவை மருத்துவத்திற்கு முன்னர், அறு வையின்போது வலி எடுக்காமல் இருப்பத ற்காக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி அழிப்பு (வலி போக்கி) ஊசிகளைப் போடுவார். உங்கள் கவலையைக் குறைப்ப தற்கும் தூக்க கலக்கத்தை உண்டு பண்ண வும் உங்களுக்குச் சில அமைதிப்டுத்தும் மருந்துகள் தரப்படும். கண் மருத்துவர் உங் கள் கண்ணின் உள்ளே நுனுகிப்பார்ப்பதற்கு ஏதுவாக கண்பாவை யை விரிவுபடுத்த (அகலப்படுத்த) உங்கள் கண்களில் சில சொட்டு மருந்துகள் விடப்படும். இந்த மருந்தளிப்பின் விளை வாக உங்கள் கண்பார்வை மங்கலாகும் இதனால் உங்கள் கண் அருகே அறுவை கருவி கள் வருவதை நீங்கள் காணமுடியா மற் போவீர்கள். அறுவை மருத்துவ அறையில் பானியாளர்கள் அறுவை மருத்துவத்திற்கு முன்னர் சுத்தமான போர்வையால் உங்களை மூடுவார்க ள். அறுவை மருத்துவத்தின்போது நீங் கள் கண்கள் இமைக்காமலிருப்பதற் கும், கண்களை அகல திறந்திருப்பதற் காகவும் கண் மருத்துவ வல்லுநர் ‘ரிட்ராக்டர்’ எனும் ஒரு சிறப்புக் கருவியைப் பயன்படுத்து வார்.

அறுவை மருத்துவம் நடைபெறும் போது, மையக்கருவையும், கார் டெக் ஸையும் அகற்றுவதற்கு, கண்ணில் ஒரு கீறல் போடப்படும். செயற்கை லென்ஸைச் செருகி வைப்பதற்கு வசதியாக லென்ஸின் மென்தோல் பொதியுறை விட்டு வைக்கப்படும். அதன் பின்னர் அறுக்கப்பட்ட கீறல் தையல் போட்டு தைக்கப்படும்.

விழிப்படலத்தை அகற்றுதல்

கண்படலத்தை நீக்க கண்மருத்துவ வல்லுநர் இரண்டு முறைக ளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவார் ஒரு முறையில், மற்ற முறையைக் காட்டிலும் சற்று ப்பெரியதாக அறுக்க வேண்டி யிருக் கும். சிறிய சீறல் மூலம் அறுவை செய்வது சற்று செலவோடு கூடிய செயல் என்றா லும் விரைவில் குண மாகும் நன்மையுடை யது.

எக்ஸ்ட்ரா கேப்ஸலர் விழிப் படல அகற்றல்

கண்ணில் விழித்திரைப் படலத்திற்கு மேலுள்ள வெண்மைப் பகுதி யில் ஏறத்தாழ 10 மி.மி. நீளத்திற்கு சீறப்படும். அந்தக சீறலின் வழி யே கண்விழிப்படலம் ஒரே துண்டாக அகற்றப்படும். இந்த முறை யில் லென்ஸின் முன்புற மென் தோல் பொதியுறை அகற்றப்ப டும். ஆனால் லென்ஸின் பின் புற மென்தோல் பொதியுறை அப்படியே அதே இடத்தில் விட் டு வைக்க ப்படும்.
    
பேகோ மெல்சிபிகேஷன்

கண்ணில் 4 முதல் 5 மி.மி. அகளத்திற்கு அறுக்கப்படும். லென்ஸி ல், கதழ் முனையுடைய ஒரு சிறிய குறிகிய சலாகை நுழைக்கப் படும். இந்தச் சலாகையின் வழியே அனுப்பப்படும் கதழ் ஒலியலை யானது விழிப் படலத்தைப் பல சிறு துண்டு களாக உடைக்கிறது. இந்த முறையில் லென்ஸின் மென் தோல் பொதியுறையின் முன் புறமும் அகற்றப்படும். இந்த ச்சிறு துண்டுகள் சிறிய உறி ஞ்சு கருவியின் மூலம் அகற்றப்படும்.

செயற்கை லென்ஸை அமர்த்துதல்

மேலே கூறப்பட்ட இரு முறைக ளில் எந்த முறையில் விழிப்ப டலம் அகற்றப்பட்டாலும், உட னே கண்மருத்துவ வல்லுநர், கண் ணுக்குள் செயற்கை லென் யஸை உள்ளே அமர்த்துவார். இந்தப் புது லென்ஸ் கண்ணுக் குள் நிரந் தரமாக இருக்கும். விழித்திரைப் படலத்துக் கும் பின்புற மென்தோல் பொதியுறைக்கும் இடையே இந்தச் செயற் கை லென்ஸ் அமர்த்தப்படும். சிறப்பான குழிவுக்குள் அதை அமர்த் துவது, லென்ஸின் அமர்த்துவதின் வடிவமைப்பின் நடுபகுதியாகு ம்.

சில அரிய சந்தர்பங்களில், லென்ஸி ன் பின்புற மென்தோல் பொறி யுறை அழிந்திருந்தாலும் அல்லது இல்லா மல் இருந்தாலும் இந்தச் செய்ற்கை லென்ஸ் விழித்திரைப்படலத்தின் முன்பே அமர்த்தப்ப டும்.

அறுவை மருத்துவத்திற்குப்பிறகு

இந்த அறுவை மருத்துவம் முடிவதற்கு ஏறத்தாழ அரைமனிக்கும் மேலாகும். எனினும் அன்று மேலும் சில மணிநேரங்கள், படுக்கைத் தொகுதியிலேயே நீங்கள் தங்க வேண்டியிருக்கும். உங்களுக்கு த் தரப்பட்ட வலி போக்கி, அல்லது அமைதிபடுத்தும் மருந்துகளின் பின் விளைவுகளிலிருந்து நீங்கள் முற்றி லும் மீண்டு விட்டீர்கள் என் பதை உறுதிப்படுத்திக்கொள்ள சில மணி நேரங்கள் அங்கேயே தங்க வேண்டியது இன்றியமையாததாகும். அறுவை மருத்துவம் செய்யப்பட்ட கண்ணின்மீது துணியாலான ஒரு மறைப்புத்துண்டு, கண்பாதுகாப்புக்காக, கட்டப்படும். அறுவை மருத்துவம் செய்து கொண்ட உடனே யே உந்த வண்டியை ஒட்டுதல் கூடாது. இயன்றால் உங்களை வீட்டி ற்கு அழைத்துச் செல்ல யாரையாவ து ஒருவரை ஏற்பாடு செய்துகொ ள்வது நல்லது. மறுநாள் மருத்துவ மனைக்குக் கட்டைப்பிரித்துக் கொ ள்வதற்காக நீங்கள் மீண்டும் வர வேண்டியி ருக்கும்.

அறுவை மருத்துவத்திற்குப் பின்னர் என்ன செய்ய வேண்டும் ?

கண் மருத்துவ வல்லுநர், வலியைப் போக்கு மருந்துகளையும், நோயெதி ர்ப்பு கண்சொட்டு மருந்தையும் எழுதி த்தருவார். நீங்கள் பயன் படுத்தும் பிற மருந்துகள் ஏதேனும் இருப்பின், அவ ற்றோடு இம்மருந் துகள் அனைத்தை யும் பயன்படுத் துங்கள்.

தையல் போட்டுள்ளதால் உங்கள் கண்ணில் சில தொல்லைகள் இருக்கலாம். அதற்காக நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் கண்களைக் கசக்கவே கூடாது.

ஆடி அசைந்து ஒடுதல், நீச்சலடித் தல், ‘டை £சி’ போன்ற உடலுக்கு க் கடினமான வேலைகளைத் தவிர் க்க வேண்டும். எனினும், எளிய வீட்டு வேலைகள் செய்வது, சிறிது தூரம் நடப்பது, சற்று உயரமுள் ள படியேறுதல் முதலான எளிய வேலைகளைச் செய்தால் பரவா யில்லை. ஆனால் அவற்றையும் மிகுந்த கவனத்துடன் செய்யவும்.

குனிவதையும், பெரும் எடையுள்ள பொருட்களை எடுப்பதையும், தூக்கிச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். கீழே தரையிலுள்ள எதையாவது எடுக்க வேண்டியி டருந்தால் உங்கள் முதுகை நிமி ர்த்தி வைத்தவாறே செய்யலாம்.

கண்களின் மீது அதிக அழுத்தம் உண்டாவதைத் தடுக்க, தலை யை க் கீழே தவிழ்ப்பதைத் தவிர்க்கவும்.

உங்கள் முழு காலணியை (ஷ§) அணிய, கீழே குனிவதைத் தவிர் த்தல் வேண்டும். ஒரு இருக்கையில் அமர்ந்து, உங்கள் காலை மே லே தூக்கி வைத்துக்கொண்டு கால ணியை அணிய வேண்டும். அல்லது பிறர் யாரையாவது, காலணி அணிய உதவுமாறு செய்ய லாம்.

உங்கள் கண்களில் கவனக் குறைவாக வோ, வேடிக்கையாகவோ குத்திவிட க்கூடுமாகையால் சிறுகுழந்தைகள் அருகில் செல்வதையோ, அவர்களை த் துக்கிச்செல்வதையோ தவித்தல் வே ண் டும்.

முதல் சில வாரங்கள் வரை, உங்களுடைய முகம், தலை முடி இவ ற்றை கழுவும் போது சோப்பு, ஷாம்பு, தண்ணீர் உங்கள் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். முடிதிருத்தகத்தில் உங்கள் தலை முடியைக் கழுவிக்கொள்ள லாம். மாற்று வழியாக, ஒரு ஷா ம்பு பேஸினை வாங்கி வைத்துக்கொள் ள, முடிதிருத்தகத்தில் செய் வதைப் போல தலையை லேசாக பின்பிறம் சாயத்து வைததுக் கொன்டு தலை முடியை கழுவிவிடச் சொல்லலா ம்.

அறுவை மருத்துவம் முடிந்த 6 வாரங்கள் வரை உந்து வண்டி ஒட்டுதவைத் தவிர்க்க வேண்டும்.

உங்களுடைய வழக்கமான உணவை நீங்கள் உண்ணத் தொடங்க லாம். மலச்சிக்கலைத்தவிர்க்கவும், குடல் அசைப்பதில் சோர்வை யும் தடுக்க, நிறைய காய்கறிகளையும், நார் பொ ருட்களடங்கிய உணவுப் பொருட்க ளையும் உண்ணவும்.

எழுதித் தரப்பட்ட அனைத்து மருந்துகளையும் பயன்படுத்த வேண்டு ம். மருத்துவர் கூறிய வண்ணும் சொட்டு மருந்துகளைக்கண்ணில் போட்டுக் கொள்ள வேண்டும்.

மருத்துவர்களால் எழுதித்தரப்பட்ட கண் சொட்டு மருந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் ?

அறுவை மருத்துவத்திற்குப் பிறகு, தொற்று நோய்களைத் தவிர்க்க, கண் சொட்டு மரு ந்துகளைப் பயன்படுத்தும்போது கீழ்க்கண் ட வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

a)உங்கள் கைகளைச்சோப் போட்டுச் கழுவ வேண்டும்.

b)    உங்கள் தலையை பின்புறம் சாய்த்துக்கொள்ளவும்.

c)    கண்ணின் கீழ் இமையையை மெல்ல கீழே இழுங்கள்.

d)    மருந்து புட்டியிலிருந்து ஒரு துளி மருந் தைக் கண்ணில் விட வும். புட்டியின் நுனி உங்கள் கண்களைத் தொடாமற் பார்த்து க்கொ ள்ளுங்கள்.

e) சில வினாடி நேரம் கண்களை மூடிக்கொ ள்ளுங்கள்.

f) வேறொரு மருத்தினைப் பயன்படுத்த வே ண்டிருப்பின், ஐந்து நிமி டங்கள் காத்திருந்த பின்னர் அடுத்த சொட்டு மருந்தை விட்டுக் கொள்ளவும்.

g) சொட்டு மருந்துவின் கழுத்துநுனியை உங்கள் கைவிரலால் தொட க்ககூடாது.

அறுவை மருத்துவத்திற்குப்பின்னர் எவற்றைக்கவனிக்க வேண்டு ம் ?

பொதுவாக விழிப்படல் மருத்துவம் மிகவும் பாதுகாப்பான செயல் முறையாகும். பெரும் பாலான நோயாளிகள் நல்ல பார்வையைப் பெற்று நல மடைகிறார்கள். எனினும் சில சமயங்களில் தொற்று நோய் உண்டாகி, அதன் விளைவாககள் கண் பார்வை மங் கலாகக் கூடும். தொற்றுநோயின் அபாய அடையாளங்களாவன:-

a.    கண்ணில் வலியும் சிகப்புத்தன்மையும் அதி கரித்தல்.

b.    கண்ணிலிருந்து நீர்ப்பெருக்கு

c.    திடீரென்று கண்பார்வை மங்குதல்

d.    கண்ணில் வீக்கம்.

மேற்கண்ட அறிகுறிகளில் எதையாவது நீங் கள் காண நேரிட்டால் உங்கள் கண் மருத்து வரை உடனே கலந்து பேசுங்கள். உங்கள் கண் முழுமையாக குணமடைந்து விட்டால், தேவையெனில் சிறப்புக் கண்ணாடிகள் எழுதி த்தரப்படலாம்.

அடிக்கடி வினவப்படும் வினாக்கள்:-

1. உள்ளே அமர்த்தப்படும் லென்ஸ் எவ்வளவு காலம் இருக்கும் ?

முதன்முதல் லென்ஸ் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமர்த்தப் பட்டது. அந்த நோயாளி இப்போது ம் நலமுடன் உள்ளார்.

2. யார் வேண்டுமானாலும் இந்த லென்யை அமர்த்திச் கொள்ளலா மா  ?

இந்த அமர்த்துதல் பாதுகாப்பான தாகையால் இதை யாரேனும் அம ர்த்திக் கொள்ளலாம். ஒரு வேளை லென்ஸ் அமர்த்துதல் உங்களு க்கு பொருந்தாது என்றால், கண்மருத்துவ வல்லுநர் உங்களுக்கு அறிவுரை கூறுவார்.

3. விழிப்படலம் மீண்டும் வளரக்கூடுமா ?

காலமானாலும் அமர்த்தப்பட்ட செயற் கை லென்ஸ் மங்கலாகாது. கண் களில் நன்கு அமர்ந்தப்பட்ட லென்ஸின் பின்புற மென்தோல் பொதியுறை காலப் போக்கில் மங்கக்கூடும். அறுவை மரு த்துவத்தி ற்குப்பின்னர் பார்வை தெளி வாக இருந்து பின்னர் காலம் செல்லச் செல்ல மீண்டும் மங்கலாகத் தொடங்னால் இப்படியாவதை உரை லாம். (லென்ஸின் மெல்தோல் பொதியுறை மங்கலாவதைக் கண் மருத்துவ மனையில், கண்மருத்துவர் ‘லேஸர்’ கிரணங்களைப் பயன்படத்தி, வலியில்லாமல் குணப் படுத்த முடியும்).

4. அறுவை மருத்துவத்தில் என்ன தவறு ஏற்படக் கூடும் ?

பெரும்பாலானவர்களுக்கு விழிப்பட ல அகற்று அறுவை மருத்துவம் எளிய தும், பாதுகாப்பனதாகும். என்றாலும் மற்ற எல்லா அறுவை மருத் துவத்திலும் உள்ளதைப் போலவே இதிலும் சிக்கல்கள் எழ சிறிது வாய்ப்பு உண்டு, இரண்டு முக்கிய சிக்கல்களாவன:

a. வலியைப் போக்கப் பயன் படுத் திய மருந்துகளால் உண்டாகும் நுட்ப ஊறுணர்வு (அலர்ஜி) இந்த வகை மருந்துகளால் சிலருக்கு நுட்ப ஊறு ணர்வும் (அலர்ஜியும்), குமட்டல், வாந்தி, மூச்சு விடுவ தில் சிக்கல், சூடுகட்டிகள், மூக்கும் உதடுகளும் வீங்கிப்போதல், பெரும்பாலும் வலிப்பு நோயும் போன்ற பக்க விளைவுகளும் உண் டாகக்கூடும்.

b. அறுவை மருத்துவச் சிக்கல்கள் எந்த அறுவை மருத்துவமாகட் டும், அதில் தொற்று நோய்கள் உண்டா கக்கூடிய வாய்ப்புகள் எப் போதும் உண்டு. தீவிர தொற்று நோய் ஏற்பட்டால் கண் குருடாகக் கூடும். விழி வெண்படலத்தி லும், விழித்திரையிலும் ரத்தக்கசிவு ம், சேதமும், பிறசிக்கல்களும் ஏற்பட்டு, கண் பார்வையைக் குறை க்கச்கூடும். இவற்றி க்கு மேலும் அறுவை மருத்துவம் செய்ய வேண்டியிருக்கும்.

5. இந்த விழிப்படல் அறுவை மருத்துவ த்திற்கு யார் பொருத்தமற்ற வர் ?

நீரழிவுநோய், குணப்படுத்தப்படாத அதிக இரத்த அழுத்தம், கடுமை யான இதய நோய் முதலிய நோய்கள் வரையில் இந்த அறுவை மருத்துவம் செய்துகொள்ள வயது ஒரு தடையே அல்ல. சிறு குழந்தை முதல் 90 வயது முதியவர் வரையி லும் எவருக்கும் விழிப்படல அறுவை மருத்துவம் செய்யப் படலாம். அறுவை மருத்துவத்திற்கு முன் னர் மேற்கள்ட நோய்கள் ஏதேனும் இருப் பின் அவற் றைச் கட்டுப்படுத்த உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

6. அறுவை மருத்துவத்திற்குப்பின்னர், நான், இறால், நண்டு முத லான கடல் உணவு வகைகளை உண்ணலாமா ?

ஏற்கனவே உங்களுக்கு இவ்வகை உணவுகளில் ‘அலர்ஜி’ இல்லை யென்றால், அறுவை மருத்துவதற்குப்பின்னர் இவற்றை உண்ண எந்தத் தடையுமில்லை.

வசீகரிக்கும் கண்களுக்கு

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணி னியில்  பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப் பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடு க்காமல் கண்கள் பணியா ற்றிக்கொண்டிரு க்கின்றன. இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களு க்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்க ளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டு ம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவ ர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக் காக..

கண் எரிச்சலைப் போக்க

கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இத னைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவ தோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.

தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக் கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெ யை ஊற்றி அதனை மோதிர விரலால் தொ ட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போ க்கும்.

புத்துணர்ச்சி பெற

வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறித ளவு பன்னீரில் பஞ்சை நனை த்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதி யில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண் டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.

வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக் கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

கருவளையம் போக்க

வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலை யை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.

கண்கள் குளிர்ச்சி பெற

உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்க ளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக் கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

வசீகர கண்கள்

கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின் மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன் மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.

ப்ளீச் வேண்டாமே

முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படு த்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன் படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டு மெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷே டோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன் று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம். பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரி ல் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறிய தாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள் ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாக வும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த்தியாகவும், சிறிய கண்கள் உடையவர்கள் மெல்லியதாகவும் போடவேண்டும்.

(பல இணையங்களில் இருந்து தொகுத்த‍து விதை2விருட்சம் )

7 Comments

  • Thulasi

    என் கண்களில் உள்ள கரு விழியானது நிலை இல்லாமல் ஆடுகிறது

  • San lee

    என்னால் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை கண்ணில் நீர் வடிந்துகொண்டே இருக்கிறது. கண் விழியினுல் கட்டி போண்று ஒன்று உள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: