Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: அழகான கன்னங்களுக்கு . . .

பெண்களின் முக அழகை மேம்படுத்தி காட்டுவது அவர்களின் கன்னங்கள்தான். ஆனால் இன்றைய கால க்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலா கத் உள்ளது.

பருக்கள் வராமல் தடுக்க சில வழிகள்:

பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத்தொல்லை, ஹார் மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிகளவு எண்ணெய் பயன் படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிப்படையான பயன்பாடுகளைப் பொருத்த வரையில் தலைய ணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொரு வரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படு த்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகையப் பொருட்க ளை இன்னொருவர் பயன்படுத்தும்போது அவரு க்கும் இது பரவக் கூடும். முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உண வுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையா ன உணவுகளை உண்ண வேண்டும். பழங் கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவி ல் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் முறையா ன சிகிச்சை எடுத்து அத னைக்கட்டுப்படுத்த வேண்டும்.

அவ்வப்போது வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்ப டுத்த வேண்டும்.

இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பா லானவர்களுக்கு வருகிற பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

கரும் புள்ளிகளை மறைய:

வேப்பிலை கிருமி நாசினியாக செயல்ப டுகிறது. கொழுந்து வேப்பிலையை தண் ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இட த்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்.

முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிகளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாத தாக இருக்கிறது. அது போல எலுமிச்சைச் சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:

முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற் படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு வடு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்ற வை இதில் குறிப்பிடத்தக்கவை.

தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச் சைக் கொடுத்தால் நிரந்தர மாக மாற்றிவிடலாம். இல்லா விட்டா ல் பிளாஸ்டிக் சர்ஜரிமூலம் தான் இதனை க் குணப்படுத்த வேண்டும்.

அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இரு ந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

இயற்கை அழகு சிகிச்கை:

ஐம்பது சதவீத அளவிலான பெண்க ளுக்கு அதிகமான அளவு தொந் தரவு தந்துகொண்டிருப்பது முகத்தில் வளரு ம் ரோமங்கள்தான். இதற்கும் பாரம் பரியம் ஒரு முக்கியக் காரணம் ஹார் மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போ ன்றவை களை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைத் தேய்துக் குளிப்பாட்டினால் தேவையற்ற ரோம ங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்து விடலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: