சிம்புவும், ஹன்சிகாவும் தீவிரமாக காதலிப்பதாகவும், இவர்களின் காதலுக்கு சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் எதிர்க்காமல் அதரவு தெரிவித்திருப் பதாலும் அதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என கடந்த சில வாரங்களாகவே ஒரு பரபரப்பு நிலவிவருகிறது.
இது குறித்து கூட நடிகை ஹன்சிகா ஒரு வாரப் பத்திரிகையின் பேட்டியில், சிம்பு எனக்கு நண்பர் மட்டுமே என கூறியிருந்தார்.
ஆனால், தற்போது ட்விட்டர் மூலம் அவர் தெரிவித்திருப்பது என்ன வென்றால்,
ஆம். இப்போது நாங்கள் இருவரும், சந்தித்துக் கொள்கிறோம், பேசிக் கொள்கிறோம். அது எங்களது தனி ப்பட்ட வாழ்க்கை என்று தெரிவித் திருக்கிறார்கள்.
“எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்களைக் கேள்வி ப்படுகிறேன். அதை சரி செய்ய நினைக்கிறேன். ஆம்..நான் சிம்பு வை சந்திக்கிறேன். இனி, என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச மாட்டேன்,” என்று கூறியுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் சிம்பு,
“சில மீடியாக்கள், அவர்களது சத்தத் தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். எனது தனிப்பட்ட வாழ்ககை யைப் பற்றி தவறான செய்திகளை வெளியிடு வதை நிறுத்த வேண்டும்.
ஆம். நான் இப்போது ஹன்சிகாவு டன்தான் இருக்கிறேன். அவர் நல மாக இருக்கிறார். திருமணத்தை குடும்பத் தினர்தான் முடிவு செய்வார்கள். எங்கள் தனிப்பட்ட வாழ்க் கைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என நினைக்கிறோம்”, என்று கூறியுள் ளார். இதன் மூலம் மீடியாக்களில் வரும் வதந்திகளுக்கு அவர்கள் முற்று ப்புள்ளி வைத்து விட்டனர்.