கஜினி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படு த்திய நடிகை அசினையும் நடிகர் சூர்யாவையும் சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற திரைப்படத்தி ல் மீண்டும் நடிக்க வைக்க கவுதம் மேனன் முயன்றார் ஆனால் அத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களுக்காக நின்றுபோனது.
அதனால், கவுதம்மேனன் அடுத்ததாக இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தில் சூர்யா, அசின் ஆகி ய இருவரையும் நடிக்க வைப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இச்செய்தி முற்றி லும் உண்மை! தற்போது இந்தி திரைப் படங்களில் நடித்து வரும் நடிகை அசின், இது சூர்யா, கவுதம் மேனன் கூட்டணி யில் உருவாகும் படம் என்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அசின் இப் படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியு ள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலை வர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப
தாவது:–
ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் இலங்கை செல்ல திரை யுலக சங்கங்கள் தடை விதித்தன. அதை மீறி அசின் இந்தி பட ப்பிடிப்புக் காக இலங்கை சென்றார். எனவே அவரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று தொடர் ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அதையும் மீறி கவுதம்மேனன் தனது படத்தில் அசினை நடிக்க வைப்பது கண்டிக்கதக்கது. இதை அனும திக்க முடியாது தமிழர்கள் உணர்வுகளு க்கு எதிராக கவுதம்மேனன், செயல் படக்கூடாது அசினை நடிக்க வைத் தால் படப்பிடிப்பை நடத்தவிட மாட் டோம். போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட் டு உள்ளது.
தனது திரைப்படத்தில் அசின் நடிப்பத ற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அடுத்ததாக கவுதம் மேனன் என்ன செய்யப் போகிறார். இந்த எதிர்ப்பை யும் மீறி தனது திரைப் படத்தில் அசினை நடிக்க வைக்கப்போகிறாரா ?, அல்லது தனது முடிவை மாற்றிக்கொண்டு அசினுக் கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்கப்போகிறாரா? என்பதை சினிமா வட்டாரம் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொ ண்டிருக்கிறது.