புதிதாக திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், ஒரு குழந்தை பெற்ற தம்பதிகளாக இருந்தாலும் தற்போது குழந்தைப்பேறைத் தள்ளிப்போடுவ தற்கான கருத்தடை சாதனங்கள் பல வந்துவிட்ட ன.
காப்பர் டி, மாத்திரைகள், ஆணுறை, பெண் உறை, ஊசி போன்று ஏராளமான சாதனங்க ள் கருத்தடைக்காக பயன்படுத்தப்பட்டு வரு கிறது. இதில் ஒவ்வொருவரும் அவரது உடல் ஏற்றுக்கொள்ளும் ஒரு கருத்தடை முறையை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
அதே சமயம், கருத்தடை சாதனத்தை நிறுத்திவிட்டு குழந்தைப்பே றுக்கு தயாராகும் தம்பதிகள், தாம் பயன்படுத்தும் கருத்தடை சாதனத்தை கருத்தரிப்பதற்கு எத்தனை மாதங்களுக்கு முன் பாக நிறுத்திவிட வேண்டும் என் பதை அறிந்திருக்க வேண்டும்.
நீங்கள் கருத்தடை மாத்திரைக ளை எடுத்துக் கொண்டிருந்தால் நீங்கள் கருவுற முயற்சி மேற் கொள்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அதை நிறுத்திவிடு வது நல்லது.
இந்த 3 மாத காலங்களில் நீங்கள் கருத்தரிக்காமல் இருக்க ஆணுறை அல்லது விந்தணுக்களைக் கொல்லு ம் ஜெல்லிகளை உடைய பெண் உறை போன்றவை தான் சிறந்த கருத்தடை சாதனமாக இருக்கு ம்.. இந்த மூன்று மாத காலத்தில் உங்கள் கருப்பையில் கருத்தடை மாத்திரைக ளால் ஏற்பட்ட மாற்றங்கள் சரிசெய்யப்பட்டு, கருப்பை சீரான நிலையை அடைய உதுவும்.
மேலும், இந்த மூன்று மாத இடைவெ ளியில் உங்கள் ஹார்மோன் சுரக்கும் முறைகள் இயல்பு நிலைக்குத் திரும் பவும் உதவுகிறது. அதே சமயம் உங்க ள் மாதவிலக்கு சரியாக இருக்கிறதா, என்ப தை யும் தெரிந்து கொள்ளலாம்.
ஊசியும் கருத்தரிப்பதற்கு முன்பே நிறுத்திவிட வேண்டும். நிறுத்தி 3 மாத காலத்திற்குள் கருத்தரிப்பதை நிச்சயமாக தவிர்க்க வே ண்டியது அவசியம்.
அதே சமயம், காப்பர் டியைப் பயன்படுத்தி வந்தால் மாதவிலக்கின்முடிவில் அதை அகற்றி விடுங்கள். அதன்பிறகு நீங்கள் கருத்தரிப் பதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது. இதே நிலை தான் ஆணு றை, அணுக்களைக் கொல்லும் ஜெல்லிக ளைப் பயன்படுத்துவது போன்ற கருத்தடை சாதனங்களைப் பயன் படுத்தினால், அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தியதும் கருத்தரி ப்பது நிகழலாம். இவற்றால் கருத்தரிப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்ப டாது.
எதுவாக இருந்தாலும், மருத்து வரின் ஆலோசனையுடன் செய ல்பட வேண்டும். சில கருத்தடை சாதனங்களை 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தவேக் கூடாது. அப்படிப்பட்ட சாதனங்களை 2 ஆண்டு கழித்து உடனடியாக மருத்துவரிடம் சென்று நீக்கிக் கொ ள்வது நல்லது. நீங்களாக தள்ளிப் போடுவது உடலை பாதிக்கும்.
நன்றி – சுலாக்ஸி