Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பல் துலக்க சரியான ‘பிரஷ்யை’ தேர்வு செய்வது எப்படி?

பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் டூத் பிரஷ்கள் கடை களில் விற்கப்படுகின்றன. பெரியவர் களுக்கென்றும் சிறியவர்களுக் கென்றும் தனித்தனி அம்சங்களுடன் பிரஷ்கள் உள்ளன.

கடின ரகம், நடுத்தர ரகம், மென் ரகம் என்றும் குச்சங்களின் வளையும் தன்மை யை வைத்து வகைப்படுத்தி பிரஷ்கள் விற்கப்படுகின்றன.

பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு விளம்பரம் செய்யும்போது மக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது.

பொதுவாக கடின முனைகள் கொ ண்ட பிரஷ்கள் தேய்ந்து ஈறுகளை வலுவிழக்கச் செய்கின்றன. அத னால் வேர்கள் வெளிப்பட்டு பற் கூச்சத்தை உண்டாக்கும்.

ஆகவே, அதை தவிர்த்துமென்மையான அல்லது நடுத்தர வகை பிரஷ்களைப் பயன்படுத்துவது நல்லது. பற்களின் சுத்த த்திற்கு தேய்ப்பதில் தரும் அழுத்தம் முக் கியம் அல்ல. தேய்க்கு ம் முறையே முக்கியம்.

பிரஷ்ஷின் முனைப் பகுதி வாய்க்குள் எளிதில் அடங்கும் அளவு டையதாக இரண்டு பல் அகலத் திற்குக் குச்சங்கள் கொண்டதாய் இருத்தல்அவசியம்.

குழந்தைகளுக்கெனில், மேற்க ண்ட அம்சங்களுடன் மிகச் சிறிய முனைகள்கொண்ட பிரஷ் போது மானது.

சீரான உயரம் கொண்டதும், 1அல்லது 1.25”நீளம், 5/16” -3/8” அக லம் கொண்டதும், 2-4 வரிசைகளைக் கொண்டதும் ஒவ்வொரு கற்றையிலும் 80}86 முனைகள் உள்ளதுமான பிரஷ் சிறந்ததா கும்.

லேசான வளைவைக் கொண்ட முனை யுள்ள பிரஷ்கள் கடைசி பல் அல்லது ஞானப்பற்களுக்குப் பின்னாலும் சென் றடையும் என்பதால் அவை சிறந்தவை யே.

பிரஷ் முனைகள் தேய்ந்து கற்றை யிலிருந்து விலகி நிற்கும் போ தோ அல்லது நான்கு மாதத்துக்கு ஒரு முறையோ மாற்றுதல் அவசியம்.

பற்களின் வடிவத்திற்கும், அமைப் பிற்கும் ஏற்ற பிரஷ்ஷை தேர்ந்தெ டுக்க முடியாத நிலையில் உங்கள் பல் மருத்துவ நிபுணரிடம் ஆலோச னை பெறுங்கள்.

– இன்று ஒரு தகவல்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: