Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களே! நீங்கள் உங்கள் மனைவிக்கு துரோகம் செய்தால், உங்களுக்கு மரணம் நிச்ச‍யம் (இது மருத்துவ உண்மை)

திருமண உறவைத் தாண்டி பிற பெண்களுடன் கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஹூஸ்டனில் உள்ள பெய்லர் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜிலின் லெவின் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாரடை ப்பு ஏற்பட்ட 5,559 நோயாளிகளிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் 0.6 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவின் போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணம டைந்துள்ளனர். 93 சதவிகிதம் பேர் கள்ளத்தனமான உறவில் ஈடு பட்டபோது அவர்களுக்கு மாரடைப்பு ஏற் பட்டுள்ளது. இதில் பெரும் பாலானோர் இள வயதினர். தவிர உறவின் போது அதிகம் உணவு உட்கொண்டது, மது அருந்தியது போ ன்ற காரணங்களினால் உறவில் ஈடுபட்ட தனால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம டைந் துள்ளனர்.

குற்ற உணர்ச்சி

மனைவிக்குத் தெரியாமல் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மனரீதியாக குற்ற உணர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் எப்போ தும் பதட்டத்துடன் காணப்படுவர். மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஏற்படும் அதிக பதட்டமும், ஆர்வமும் அவர்க ளுக்கு மாரடை ப்பை ஏற்படுத்துகிற து என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் குடித்து விட்டு உறவில் ஈடு படுபவர்களை அதிக அளவில் மார டைப்பு தாக்கும் என்று ம் அந்த ஆய்வு கூறுகிறது.

கள்ள உறவு மரணங்கள்

இதேபோல் இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வித்தியாசமான ஒரு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மனைவியைத் தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத் துக்கொள்பவர்களுக்கு என்ன பாதிப் புகள் ஏற்படுகிறது என்று ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அதில் மாரடைப்பு ஏற் படும் வாய்ப்பு கள்ளதொடர்பு வைத்திரு ப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது சில நேரங்களில் மரணங்கள் நேரி டுவது உண்டு. அதிலும் மற்ற வர்களை விட 3 மடங்கு அதிகமாக கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர் களுக்கு அதிகமாக மரணங்கள் நிகழ்வ தாக ஆய் வில் தெரிந்துள்ள து.

செக்ஸ் ஒரு மருந்து

அதேசமயம் மாரடைப்பு வந்தவர்கள் சில வாரங்கள் கழித்து தங்களின் மனைவி யுடன் பாதுகாப்பான உறவில் ஈடுபடலாம் என்றும் கூறியு ள்ளனர். செக்ஸ் என்பது மன அழுத்தம் போக்கும் மருந்தாக செயல்படு கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அரை மணி நேரம் உற வில் ஈடுபட்டால் 630கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர் கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவின் ஹார்ட் அசோசியே சன் இதழில் வெளியி டப்பட்டுள்ளது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: