திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலை வலி என்றால் கூட துடித்துப் போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்க ளை கண்டுகொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண் களின் புகார். இதன் காரண மாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப் பட்டு பிரச்சினைகளாக உருவெடுகின்றன. பெண்களின் எதிர்பார்ப்பு க
ள் என்ன என்பதை அலசும் கட்டுரை இது.
மனம் கவர்ந்தவரிடம் எதிர்பார் ப்பது
வெறும் உடல் ரீதியான உறவு மட் டுமே கணவரிடம் இருந்து பெண்க ள் எதிர்பார்ப்பதில்லை. அதையும் தாண்டி மனதளவில் ஆறுதலாக இருக்கும் ஆண்களையே பெண்க ள் விரும்புகின்றனர். பெண்களின் தேடுதல் மிகவும் பெரியது. அதை நிறைவேற்றும் ஆண்களை அவர்கள் பூஜிக்கின்றனர்.
பேசி புரிய வைக்கலாம்
பேச்சு என்பது இரு மனங்களுக்கி டையேயான இறுக்கத்தை தளர்த் தும் ஆயுதம். மனதில் பாரம் என்றால் இருவரும் பேசுங்கள். அதிக மாக பேசுவது ஆறுதலைத் தரும். இருவரு க்கிடையேயான நேசத் தை பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும்.
புறத்தோற்றத்தை ஒதுக்கித் தள்ளுங்கள்
மணமான புதிதில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் குழந்தை பெற் றவுடன் அவர்களின் உடல் குண்டா வது இயல்பு. இது அநேக ஆண்க ளால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது. மனைவி யின் புறத்தோற்றத்தை விமர்சனம் செய்யும் கணவர்கள் இன்றும் இருக்கின்றனர். இதனால் மனரீதி யான பிரச்சினைக்கு பெண்கள் ஆளாகின்றனர். அழகு என்பது உரு வத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும். பெண்களின் தன்ன ம்பிக்கையை அதிகரிக்கும் வகையி ல் நடந்து கொள்ளும் ஆண்க ளே நல்ல துணைவர்களாக இருக்க முடியும்.
சின்ன சின்ன ரொமன்ஸ்
தாம்பத்ய உறவு மட்டுமே மண வாழ்க்கைக்கு முக்கியமில்லை. சின்ன சின்ன ரொமன்ஸ்களையும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். பெண்கள் எதிர்பாராத நேரத்தில் அவ்வப்போது கொடுக்கும் முத்த ம். சமையலறையில் சத்தமின்றி செய்யும் சில்மிசங்கள். மனைவி யின் கைகளை பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என்பதை உணர்த்து ம் விதமாக காதோரம் கிசு கிசுப்பாக கூறும் ஐ லவ் யூ என்ற வார் த்தை என பெண்கள் எதிர் பார்ப்பது எத் தனையோ உண்டு. ஆனால் இவற்றை நிறைய ஆண்கள் செய்யத் தவறிவிடு கின்றனர்.
இனிய உறவின் உன்னதம்
ஆண்கள் அவசரக்காரர்கள். தங்களின் காரியம் முடிந்தவுடன் நிம் மதியாக ரெஸ்ட் எடுக்கப் போய்விடுவா ர்கள். ஆனால் பெண்களுக் கு எதையுமே ஆழ்ந்து அனுபவிக்க வே ண்டும். கணவருடனான நெருக்கத் தை அசை போடுவதில் பெண்களு க்கு அலாதி பிரியம் உண்டு. எனவே உறவின் போது மட்டுமல்லாது உறவிற்கு முன்பும், பின்பும் பக்குவ மாக நடந்து கொள்ள வேண்டும்.
இவற்றை கடைபிடிக்கும் ஆண்க ளை பெண்கள் ஆராதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
இது விதை 2 விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
நல்ல விசயங்கள்! நன்றி.