Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிலிம்ஃபேர் விருதுகள் 2013: சிறந்த நடிகர் தனுஷ் , சிறந்த நடிகை சமந்தா!

தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் முக்கியத்துவம் வாய் ந்த ஒன்று பிலிம்ஃபேர் விருதுவிழா. ஐடி யா 60வது பிலிம்பேர் விருது விழா ஹைத ராபாத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவி ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த கலைஞர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ் விழாவில் விருது வாங்கிய கலைஞர்கள் பின்வருமாறு:
சிறந்த நடிகருக்கான விருது 3 படத்திற் காக தனுஷுக்கு கிடைத்தது. மேலும் 3 படத்தில் வந்த கொலவெறி பாடலுக்காக தனுஷு க்கு சிறந்த பாடகருக்கான விருதும் கிடைத்தது. சிறந்த நடிகைக் கான விருது “நீ தானே என் பொன்வசந்தம்” படத்திற்காக சமந்தாவுக்கு கிடைத்தது. மேலும் தெலு ங்கிலும் சிறந்த நடிகைக்கான விருதை ஈகா படத்திற்காக சமந்தா பெற்றார். சிறந் த படத்திற்கான விருதை வழக்கு எண் 18/9 பெற்றது. வழக்கு எண் 18/9 படத்தி ற்காக சிறந்த இயக்குனருக்கான விருது பாலாஜி சக்திவேலுக்கு கிடைத்தது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை கும்கி படத்திற்காக தம்பி ராமையா பெற் றார். நீர்பறவை படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை சரண்யா பொன்வண்ணன் பெற்றார். கும்கி படத்தி ற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமை ப் பாளருக்கான விருது கிடைத்தது. கும்கி படத்தில் வரும் சொல்லி ட்டாலே பாடலை எழுதிய யுக பாரதி க்கு சிறந்த பாடல் ஆசிரியர் விருது கிடைத்தது. நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் வரும் சற்று முன்பு பாடலை பாடிய என்.எஸ்.கே. ரம்யா சிறந்த பின்னணி பாடகிக்கான விரு தை பெற்றார். சிறந்த புது முக நடிக ருக்கான விருது ஒரு கல் ஒரு கண் ணாடி படத்திற்காக உதயநிதி ஸ்டா லினுக்கு கிடைத்துள்ளது. சுந்தரபாண்டியன் படம் மூலம் லக்ஷ்மி மேனனுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருது கிடைத்தது.

thanks to dinakaran

Leave a Reply