Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

35 வயதிற்கு மேலுள்ள‍ பெண்கள் கருத்தரிக்க சில குறிப்புக்கள்!

இன்றைய காலத்தில் பெண்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள் கின்றனர். ஆனால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வா று நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதா கிவிடுகிறது. இவ்வாறு 35 வயதா னப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்ப தில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலு க்கு ஆபத்தை விளைவி க்கும் அளவில் இருக்கிறது. ஆகவே எப்போதும் குழந் தை பெற்றுக் கொள் வதை மட்டும் எக்காலத்திலும் தள்ளி வைக்கக்கூடா து.

ஆனால் 35 வயதிற்கு மேல் கர்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சிலவற்றை பின்பற்றினால் போதும். இதனால் எளிதில் கருத் தரிப்ப தோடு, நல்ல ஆரோக்கிய மான குழந்தையை யும் பெற்றெடு க்கலாம். அதிலும் சரியான மருத் துவரின் ஆலோசனை மற்றும் உடல் ஆரோக்கிய பராமரிப்புக்க ளின் மூலம், வயதானாலும் பிரச் சனையின்றி குழந்தை பெற்றெடு க்க முடியும்.

ஆரோக்கியமான டயட்

எப்போதும் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண் டும். அதிலும் இறைச்சி, மீன், பால் பொ ருட்கள் போன்றவற்றை உணவில் சேர் ப்பதன் மூலம், கருமுட்டையின் உற்பத் தியை அதிகரி க்கலாம். மேலும் தினமு ம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதி லாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

போலிக் ஆசிட்

குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிகும் முன், குறைந்தது மூன்று மாதத்திற்கு போலிக் ஆசிட் மாத்திரை கள் அல்லது உணவுகளை அதிகம் சே ர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குழந் தையின் வளர்ச்சிக்கு, இது மிகவும் இன்றியமையாதது. அது மட்டுமல்லா மல், இந்த போலிக் ஆசிட் குழந்தை யின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கி யமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்து க் கொள்ளும் முன், மருத்துவரை அணுக வேண்டும்.

சரியான நேரத்தில் முயற்சிக்கவும்

குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், அதற்கு முதலில் சரி யான நேரத்தில் முயற்சிக்க வேண் டும். அதற்கு ஓவுலேசன் கால் குலே ட்டரைப் பயன்படுத்தினால், எப்போ து உறவு கொண்டால், கர்பமாகக் கூடும் என்பதை சொல்லும். அந்த காலத்தில் உறவு கொண்டால், எளி தில் கருத்தரிக்கலாம்.

உணர்ச்சிகளை கவனிக்கவும்

பொதுவாக 35 வயதிற்கு மேல், மன அழுத்தமானது அதிகம் இரு க்கும். ஆகவே குழந்தை பெற ஆசைப்பட்டால், அத்தகைய மன அழு த்தத்தைக் குறைக்கும் செயல் களான யோகா, தியானம் போன்றவற் றை மேற்கொண்டு, மன அழுத்தத்தைக் குறை த்து, மனதை அமைதியாக வைத்துக் கொ ள்ள வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் கூட ஒரு வகையில் கரு உருவாவதற்கு தடையாக இருக்கும்.

வாழ்க்கை துணையையும் கவனிக்கவும்

கருத்தரிக்க வேண்டுமெனில், அப்போது வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு வயதானால், விந்த ணுவின் உற்பத்தியானது குறைந் துவிடும். எனவே ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை நிறுத்து மாறு அறிவுறுத்த வேண்டும். மேலு ம் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டு ம். இதனால் விந்தணுவின் உற்பத் தியானது அதிகரித்து, எளிதில் கரு த்தரிக்க உதவியாக இருக்கும்.

மருத்துவ ஆலோசனை

35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக் கும் முன், முதலில் மருத்து வரைச்செ ன்று அவர்களிடம் உடல் முழுவதும் பரி சோதனை செய்து கொள்வதோடு, கருத் தரிக்க வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்காக என்னவெ ல்லாம் செய்ய வேண்டும் என்பதை கேட் டறிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.

நேர்மறை எண்ணங்களைக் கொள் ளவும்

35 வயதானப் பின்பு தாய்மை அடைய நினைக்கும் போது, முதலில் மனதில் தைரியம் மற்றும் நம்பிக்கையை வள ர்த்துக்கொண்டு, எதிர்மறை எண்ண ங்களைக் கைவிட்டு, நேர்மறை எண்ணங்களுடன் உறவில் ஈடுபட வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: