Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“பெரிய இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த நான், அருள்நிதியுடன் ஜோடியாக நடிப்ப‍தா?” – நடிகை தன்ஷிகா

நடிகை தன்ஷிகா, பேராண்மையில் அறிமுகமாகி, வசந்த பாலனின் அரவான் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் பாலாவின் இயக்கத் தில் பரதேசி திரைப்படத்தில் இரு கதா நாயகி களில் ஒருவராக நடித்தார். தற்போது யா யா படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்பு தேவன்  இய க்கத்தில் உருவாகிவரும் “ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்” என்ற திரைப்படத்தில் தன்ஷிகாவை நடிக்க வைக் க‍ அணுகியுள்ள‍னர். ஆனால்  தன்ஷிகாவோ, அட்வான்ஸுடன் வந்தவர்களை  பார்த்து, “ஜனநாதன், வசந்த பாலன், பாலா போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ள நான், அருள்நிதியுடன் ஜோடி யாக நடிப்ப‍தா? அவர் போன்ற வளரும் நடி கருடன் என்னால் நடிக்க முடியாது,” என்று கூறி மறுத்து திருப்பி அனுப்பி விட்டாராம்.

அதன்பின்ன‍ர் தன்ஷிகா நடிக்க மறுத்த அதே வேடத்தில் நடிக்க‍ பிந்து மாதவியிடம் கேட்டார்க ளாம் அதற்கு பிந்து மாதவி, மறுப்பேதும் சொல் லாமல், கதையை மட்டும் கேட்டுவிட்டு நடிக்க‍ ஒப்புக் கொண்டு, தற்போது நடித்தும் வருகிறா ராம்.

Leave a Reply

%d bloggers like this: