நடிகை அஞ்சலி, “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, “ஆயுதம் செய்வோம்” என்ற திரைப்படத்தில் நடித்து பின் “அங்காடி தெரு “, “எங்கேயும் எப்போ தும்”, “கலகலப்பு” போன்ற படங்கள் வெற்றி யடையவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ் கிறார்.
புகழின் உச்சத்திலும் பண மழையில் நனைந்து கொண்டிருந்த அஞ்ச லிக்கு சோதனைக்காலம் வந்தது. சித்தியுடன் ஏற்பட்ட மனஸ் தாபம் கார ணமாக, சில நாட்கள் தலைமறைவாக இருந்த அஞ்சலி தற்போது ஆந்திராவில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனால் சென்னைக்கு வரு வதை தவிர்ப்பதுடன், தமிழ் படங்களில் நடிப்ப தையும் தவிர்த்து விடுகிறாராம். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்டு அணுகினால், ப்ளீஸ், இப்போது வேண் டாமே, இன்னும் கொஞ்சம் நாளாகட்டும் என்று ம் மறுத்து விடுகிறாராம்.