Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எனக்கு நடிக்க விருப்பம் இல்லை!” – நடிகை கீர்த்த‍னா

புதிய பாதை மூலமாக தனக்கொரு புதிய பாதையை அமைத்துக் கொண்ட பார்த்தீபன் தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமாக கதா பாத்திரங்களை, ஏற்று நடித்தும்,  வசன ம் பேசுவதில் தனக்கொரு தனி பாணி யை அமைத்துக்கொண்டும், பல் திரைச் சித்திரங்களை இயக்கி, ,தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத் தை பிடித்துக்கொண்டார். புதிய பாதை திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த‍ நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகள் கீர்த்தனா உட் பட மூன்று குழந்தைகள் உள்ள‍ன ர்.  ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இவர் களுக்குள் ஏற்பட்ட‍ கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கு ஏற்ப  மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந் தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது சிற ந்த குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். தற்போது இவருக்கு சினிமா இயக்குனராவதுதான் தனது லட்சிய மாக கொண்டிருக்கிறார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:–

என் அப்பா பார்த்திபன் இயக்குனரா கவும், அம்மா சீதா நாயகியாக வும் இருந்ததால் சிறு வயதிலேயே சூட்டி ங் போய் சினிமா விஷயங் களை தெரிந்து கொண்டேன். 5–வது வகு ப்பு படிக்கும்போது மணி ரத்னம் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அவர் படத்தில் நடிக்க கேட்டார். அப் பாவும் சம்மதித்தார். இப்போது கதா நாயனாக உள்ள சித்தார்த் அப்போது மணிரத்னத்திடம் உதவி இய க்குனராக இருந் தார். அவர் என் வீட்டுக்கு வந்து எனக்கு நடிப்பு பயிற்சி அளித்தார். அதில் நடித்த தற்காக பாராட்டுகள் கிடைத்தன. அதன் பிறகு எனக்கு நடிக்க விரு ப்பம் இல்லை. இசை, நடனங்கள் கற்றேன். மணிரத்னத்திடம் உத வி இயக்குனராகவும் பணியாற் றினேன். அடுத்து டைரக்டராக முடிவு செய்துள்ளேன். விரைவி ல் நல்ல கதையொன்றுடன் டைர க்டராக அறிமுகமாக உள்ளேன். இவ்வாறு கீர்த்தனா கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: