Thursday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எனது தோழிகளுக்கு மட்டுமே தெரியும் எனது சுயரூபம்!” – நடிகை சமந்தா

தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும்நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தனது கல்லூரி நினைவுகளை தற்போது வெளியிட் டுள்ளார்.

இதுகுறித்து நடிகை சமந்தா, கல்லூரியில் படித்த போது நான் அடங்காத சுட்டிப் பெண் ணாக இருப்பேன். பேராசிரியர் களைப் பொருத்த வரையில் நான் அமைதியான பெண் நன் கு படிக்கிற பெண்ணாகத் தான் தெரியும். ஆனால் எனது தோழிகளுக்கு மட்டுமே தெரியும் எனது சுயரூபம். நான் வகுப்பில் செய்யும் கேலி, கிண்டல், ரவுடித்தனம் இதற்கெல்லாம் எனது தோழிகள் தான் திட்டு வாங்கு வார்கள். இதனால் வெளியே வந்ததும் என் மேல் கோபமாக இருக்கும் தோழி களை, பின்பு கெஞ்சி சமாதா னம் செய்து விடுவேன். கல்லூரியை கட் அடித்து விட்டும், சுவர் ஏறி குதித்தும் அடிக்கடி சினிமாவு க்கு போய் உள்ளேன்.

ஒரு தடவை சுவர் ஏறும் போது வாட்ச் மேன் பிடித்து பேராசிரியரிடம் நிறுத்தி விட்டார். அவர் என்னை அமைதியான பெ ண்ணுன்னு நினைச்சேன், ஆனால் நீயா இப்படி என்று கண்டித்து நிறைய அறிவு ரை கூறி, அதற்கான தண்டனையும் கொ டுத்து, எனது பெற்றோருக்கும் தெரியப்படுத்தினார். எனது பெற்றோ ர் என்னை கண்டித்த்தாலும், பேராசிரி யரிடம் எனக்கிருந்த நல்ல‍ பெயரை நானே கெடுத்துக்கொண்டதாலும் அன்றுமுதல் அடாவடித் தனங்களை மூட்டை கட்டி பரணையில் போட்டுவிட்டு அமைதியா ன பெண்ணாக மாற ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply