Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மின்சராத்தை மிச்சப்படுத்த சில வழிகள்

இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய நல்ல ஆயுதமாக, நம் லேப்டாப் கம்ப்யூட்டர் உரு வெடுத் துள்ளது. ஆனால், இப் புகழ் மாலை எல்லாம், லேப் டாப்பின் பேட்டரி உயிர்த்துடிப் போடு, மின் சக்தியை வழங்கு ம் வரை தான். அனைத்து தகவ ல்களையும் வரிகளில் அமைத் து, பிரசன் டேஷன் ஸ்லைடு களை அமைக்க இருக்கையில், “லோ பவர்’ என்று ஓர் எச்சரிக்கை கொடுத்து, லேப்டாப் முட ங்கிவிடும்.

சுற்றிலும் எந்த இடத்திலும், மின் சக்தியை வழங்கும் ப்ளக் பாய்ண் ட் இருக்காது. அப்போதுதான், அடடா! ஏன் தான் இதனை வாங்கிப் பயன்படுத்தினோமோ என்று லேப்டாப் கம்ப்யூட்டரை வசைபாடத் தொடங்குவோ ம். ஆனால், பவர் மீண்டும் கிடைத்த வுடன், மீண்டும் அன்பும், பாராட்டும் நம் மனதில் அருவியாய்க்கொட்டும். சற்று முன் வந்த தலைவலி, காணாமல் போயி ருக்கும்.

இந்த தலைவலி வராமல் இருப்பதற்கான மருந்து எங்கே உள்ளது? லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரியை நன்கு பராமரித்து வந்தால், நிச்சயம் தலைவலி வராது. பேட்டரியை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் மடி க்கணனியின் மின்சராத்தை மிச்சப்படுத்த சில வழிகளை இங்கு காணலாம்.

1. மின் இணைப்பு தரவும்:

எப்போதெல்லாம் இயலுமோ, அப்போ தெல்லாம், லேப்டாப் கம்ப்யூட்டரை மின் சக்தி வழங்கும் ப்ளக் பாய்ண்ட்களில் செருகவும். எப் போதும் முழு மையான சார்ஜ் இருக்கும் வகையில், லேப்டாப்பின் பேட்டரிக்குத் தீனி போட்டு விட்டால், நம் கம்ப்யூட்டர் நம்மைக் கை விடாது.

உங்கள் பவர் சார்ஜர் போல இன்னொ ன்றினைக் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டால், ஒன்றை அலுவலகத்தி லும், மற்றொன்றை செல்லும் இடங் களிலும் பயன்படுத்தலாம். அடிக்கடி வீட்டில் நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்ட ரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அங்கு வைத்துப் பயன்படுத்தவும் ஒன்றினை உபரியாக வைத்திரு க்கவும்.

தொடர்ந்து மின்சக்தி வழங்கும் இணைப்பு களில் தொடர்பினை ஏற் படுத்தி வைத்தால், பேட்டரியின் வாழ்நாள் குறைந்துவிடும்; பேட்டரியின் வெப்ப நிலை அதிகமாகி வீணா கத் தொடங்கும் என்ற உண் மைக்கு மாறான எண்ணத்தினை நீங்கள் கொண்டிருந்தால், அத னை நீக்கிவிடுங்கள்.

இப்போது கிடைக்கும் பேட்டரிகள், குறிப்பாக லித்தியம் அயன் பேட்டரிகள். தாங்கள் முழு மையாக சார்ஜ் ஆனவுடன், மின்சக்தியைப் பெறுவதனைத் தாங்களாகவே நிறுத்திக் கொள்ளும் திறன் கொண் டவை. எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்திருப்பது, பேட்டரியின் திறனை அதிகப்ப டுத்தவே செய்திடும்.

2. திரையில் ஒளி அமைப்பை குறைத்திட:

லேப்டாப் கம்ப்யூட்டரின் திரையி ன் ஒளித்திறன் வெளிப்பாட் டை எப்போதும் குறைவாகவே வைத் திருக்க வேண்டும். இப்போது எல். இ.டி. பேக் லைட்ஸ் கொண்ட திரைகளே லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படுகி ன்றன. முன்பு சி.ஜி.எப்.எல். (CCFL cold cathode fluorescent tube) இருந்த இடத்தில் இவை இடம் பெற்றுள்ள ன.

இருப்பினும், லேப்டாப் திரையின் ஒளி வெளிப்பாடு, அதன் பேட்டரி யின் வாழ்நாள் நீட்டிப்பில் முக்கிய இடம் கொண்டுள்ளது. கம்ப்யூட்ட ர் பயன்படுத்தும் மின் சக்தியில் பெரும் அளவு திரையின் ஒளி வெளிப்பாட்டிற்குச் செலவாகக் கூடாது. எனவே ஒளி வெளிப்பாட் டினைக் குறைவாகவே வைத்து இயக்க வேண்டும்.

மேலும், லேப்டாப் கம்ப்யூட்டரை வை த்து பணிபுரியும் இடத்தினையும் சரியா கத் தேர்ந்தெடுக்க வேண்டும். அறையி ல் அதிகளவில் வெளிச்சம் கொடுக்கு ம் விளக்குகள் உள்ள இடத்தைக் காட்டி லும், குறைவான வெளிச்சம் உள்ள இடத்தில், லேப்டாப் கம்ப்யூட்டரை வை த்து இயக்குவதே நல்லது.

திரை ஒளி வெளிப்பாடு எடுத்துக்கொ ள்ளும் மின்சக்தியைக் குறைத்திட, விண்டோஸ் சிஸ்டம் வழங்கு ம், தானாக இயங்கும் பேக் லைட் கண்ட்ரோல் டூலைப் பயன்படுத்த லாம். இதற்குக் கண்ட்ரோல் பேனல் சென்று, Hardware and Sound > Power Options எனத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் ஆக்டிவ் பவர் பிளான் தேர்ந்தெ டுக்க, Change plan settings என்பதை த் தேர்ந்தெடுக்கவும். �Dim the display� மற்றும் �Turn off the display� என்ப தன் கீழ், 1 முதல் 3 நிமிடங்கள் என்ற கால வரையறையை அமைக்கவும்.

லேப்டாப் கம்ப்யூட்டர் பேட்டரி சக்தி யில் இயங்குகையில், திரை ஒளியை மட்டுப்படுத்தி அல்லது முழுவதுமாக நிறுத்தி பேட்டரியின் சக்தியைப் பாது காக்கும். Change advanced power settings என்பதில் கிளிக் செய்து, ஒளி வெளிப்பாட்டின் ஒளி எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம்.

3. தவறான அப்ளிகேஷனை கண்டறிய:

பேட்டரியின் சக்தியினை அதன் வாழ் நாளுக்குமுன்னரே, முடக்கிப் போடு வதில், தவறான இயக்கத்தைக் கொ ண்டிருக்கும் புரோகிராம்களாகும். இவை ப்ராசசரின் உழைப்புச்சுற்றினை த் தேவையற்ற அளவில் மிகுதியாக மேற்கொள்ளும். இதனால், அதற்கேற் ற வகையில் மின்சக்தி வீணாகச் செல வழியும்.

அதே போல, கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில், தேவையில் லாமல் இயங்கும் புரோகிராம்களும், கிராஷ் ஆகி நிற்கும் அப்ளிகேஷன்களு ம் மின் சக்தியினை வீணாக்கும். இணை ய பிரவுசர் அப்ளிகேஷன்கள் இந்த வகை யில் அடிக்கடி முடங்கிப் போய், மின் சக்தியினை வீணாக்கும். ஏனென்றால், பிரவுசர்களில் உள்ள அதி கமான ப்ளக் இன் புரோகிராம்கள் மற்று ம் பிரவுசரில் பதியப்பட்டிருக்கும் ஸ்கிரி ப்டிங் இஞ்சின் கள் இந்த வகையில் தொல்லை கொடுப்பதாக அமைகின்றன.

நவீன சி.பி.யு.க்கள், தானாகவே, தங்களின் செயல்பாட்டிற்கான க்ளா க் ஸ்பீடை, மிகக்குறைந்த அளவிற் கு மாற்றிக்கொள்ளும் திறன் படைத் தவையாக உள்ளன. ஆனால், அப்ளி கேஷன் புரோகிராம் எதுவும் செயல் படாமல் இருக்கும் நிலையிலேயே, இந்த செய ல்பாட்டினை சி.பி.யு.க்கள் மேற்கொள்ளும்.

வெட்டித்தனமான புரோகிராம்களை முடக்கி வைக்கவில்லை என் றால், அவை பேட்டரியின் திறனைத் தேவையற்ற வகையில் குறைப்பதனை த் தடுக்க இயலாது. லேப்டாப்பில் உள்ள வெப்பம் வெளியேற்றப் பயன் படும் சிறிய மின்விசிறிகள் திடீர்திடீர் எனத்தங்களின் வேகத்தினை அதிகப் படுத்தினால், அவை வீணாக இயங்கிக் கொண்டிருக் கும் புரோகிராம்களால் தான் எனக் கொ ள்ளலாம்.

இப்பிரச்னையைத் தீர்ப்பது மிக எளிது. Ctrl Alt Delete கீகளை ஒரு சேர அழுத்தவும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை இயக்கவும். இதில், தேவையின்றி, அதிக மின்சக்தி யையும், ப்ராசசரின் செயல் பாட்டு வேகத்தினையும் பயன்படுத்தும். இவ ற்றை அடையாளம் கண்டு நிறுத்த வேண்டும். பின்னர் நீக்க வேண்டும்.

ஒரு புரோகிராம் வழக்கமான முறை யில் நிறுத்தப்பட இயலவில்லை எனி ல், அதன்மீது ரைட் கிளிக்செய்து, கிடைக்கும் பட்டியலில், Kill Process என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். என்ன செய்தும், புரோகிராம்கள் மட்டுப்படவில்லை எனில், கம்ப்யூட்டர் சிஸ்டத்தினை ரீ ஸ்டார்ட் செய்வதே ஒரே வழி.

4. பின்னணியில் இயங்கும் புரோ கிராம்கள்:

பேட்டரி சக்தியில் இயங்குகையி ல், லேப்டாப் இயக்கத்தின் பின்னணி யில் செயல்படும் தேவையற்ற புரோ கிராம்களை நிறுத்தி விடலாம். குறிப்பாக கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கையில், பல புரோகிராம்கள் ப்ராசசரின் சக்தியைப் பயன்படுத்தி, இணைய தளங்களைத் தொடர்புகொண்டு, பெரிய அளவிலான அப்டேட் புரோகிராம்களை டவுண்லோட் செய்து கொண்டிருக்கும். இவை பேட்டரியின் சக்தியை வீணடிக்கும் என்பதால், இவற் றை நிறுத்தி விடலாம்.

5. தேவையற்ற சாதனங்கள்:

லேப்டாப் கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள, பயன்படுத்தாத சாதனங்க ளை நீக்கிவிடலாம். உள்ளாக இணை ந்த மோடம், வை -பி, புளுடூத் போன் றவை பயன்படுத்தப்படவில் லை எனில், செயல் பாட்டினை நிறுத்தி வைக்கலாம்.

மேலே தரப்பட்டுள்ள செயல்பா டுகளை நாம் மிக எளிதாக மேற் கொண்டு, பேட்டரியின் வாழ் நாளை அதிகரிக்கலாம். திடீ ரென பேட்டரியின் செயல் இழப் பால், நாம் லேப்டாப் கம்ப்யூட் டரில் மேற் கொள்ளும் பணிகள் பாதிக்கப்படாமல் இதன் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

******************************************

உங்களது வீட்டிலோ அல்ல‍து அலுவலகத்திலோ கண்காணிப்பு கேமரா பொருத்த‍ வேண்டுமா? உடனே கீழுள்ள‍ நிறுவனத்தை தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ள‍வும்.

AANINFOTECH

சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான தகவல்களுக்கு மேலுள்ள‍ வரியினையோ அல்ல‍து இந்த வரியினை சொடுக்குக (கிளிக் செய்க•)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: