Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு- ஃபேஷியலில் சில வகைகள்

பழங்கள் ஃபேஷியல்:

ப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம் இவற்றை தலா இரண்டுதுண்டுகள் எடுத்து கூழாக்கி,  இந்த விழுதை முகத்தில் மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.  பழங் களின் தோலை வீணாக் காமல் இதேபோல் ஃபேக் போடலாம். பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சி டென்ட் மற்றும் ஈரப்பதம், சத்துக்க ளை சருமம் கிரகித்துக்கொள்ளும்.  கிர்ணி , தர்பூசணி, சப் போட்டா, மாதுளை, மாம் பழம், திராட்சை என எல்லாப்பழங்களிலும் இதேபோல், மாஸ்க் போட்டுக் கொள்ளலா ம். ஒரு பழத்தில் மட்டுமே செய்யும்போது, சிறிது தேன் கலந்து நன்றாக மசித்து பயன் படுத்தலாம்.

காய்கறி ஃபேஷியல்:

காரட், உருளைக்கிழங்கு, வெள்ள ரி, தக்காளி, பூசணி இவற்றை சிறு துண்டுகள் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.  இந்தக் கலவையு டன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு பதினைந்து நிமி டங்கள் கழித்துக் கழுவுங்கள். முகம் சோர்வு இல்லாமல் புத்து ணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, மேடு பள்ளத்தைச் சரிசெய்யும்.  தோலுக்கு அதிக ஊட்டச் சத்தையும் நிற த்தையும் கொடுக்கும்.

மூலிகை ஃபேஷியல்:

முல்தானிமட்டி, பயத்தமாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனத் தூள் இவற்றை சிறிது எடுத்து தேங்காய்ப் பால் விட்டு கலந்து முகத்துக்கு பேக் போடுங் கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெ துப் பான நீரில் முகத்தைக்கழுவுங்கள். பிறகு கற்றாழை ஜெல்லில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறுவிட்டுக் கலந்து முகத் தில் பூசிக் கழுவுங் கள். இப்படி தினமும் செய்துகொள்ளலாம்.  குளிர்கால பாதிப் பிலிருந்து முகத்தை பாதுகாக்கும். சந்த னத்தூள் முகத்தில் இருக்கும் அழு க்கை போக்கும். கஸ்தூரி மஞ்சள், முல்தானி மட்டி முகத்தை பொலிவாக்கும்.  தேங் காய்ப்பால் சேர்ப்பதால் சருமத்தின் மிரு துத் தன்மை கூடும். முகத்தில் பருக்கள் இருந்தால், கொஞ்சம் வேப்பந்தளிரை அரைத்துச்சேர்த்து பேக் போட லாம்.    

இளநீர் ஃபேஷியல்:

சிலருக்கு 30 வயதிலேயே முகத்தில் சருமம் உலர்ந்து சுருங்கி வயோதிகத் தோற் றத்தைத் தந்துவிடும். அவர் கள், இளநீர் ஃபேஷியல் செய்து கொள்வது நல்ல பலனைத் தரும். இளநீரை பருத்தி பஞ்சில் தொட்டு முகத்தின் எல்லாப் பக்க மும் நன்றாக துடையுங்க ள். சருமத்தைச் சுத்தமாக்கி விடும். கடலைமாவு, மைதா மாவு இவற்றுடன் அரைத்த சந்தன ம், தேன், இளநீர் கலந்து முகத்தில் பேக் போ ட்டு 15 நிமிடம் கழித்துக்கழுவுங்கள்.  வெளி ப்புறத் தூசுகளால் அழுக்கு படிந்து களையி ழந்து, மங்கி போன முகம் அழகாக ஜொலி க்கும்.

நட்ஸ் ஃபேஷியல்:

பாதாம், முந்திரி, உலர் திராட்சை, வால்நட் இவற்றை தலா இரண்டு எடு த்து, அரைத்து இதனுடன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தட வுங்கள்.  புரதச் சத்து சருமத்தை பஞ்சு போல் மிருதுவாக்கும். அன்று பூத்த மலராக முகம் பளபளக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: