Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – கருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு சில குறிப்புகள்

வறண்ட, வளமில்லாத நிலத்திலும் கூட கொத்துக் கொத்தாக வளர்ந்து நிற்கும் ஆவாரம் செடி களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் இந்த ஆவாரம் பூவுக்கு அப்படியரு சக்தி! உயிரையே காக்கக் கூடிய இந்தப் பூக்களுக்கு… மேனி எழில் எம்மாத்திரம்? உடலுக் குப் பொன் நிறத்தைக் கொடுத்து நல்ல மினுமினுப்பை ஏற்படுத்தும் ஆவாரம் பூ, வழுக்கைத் தலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிறது. அத்தகைய ஆவாரம் பூக்கள்… அள்ளி, அள்ளித் தரும் அசத்தல் பலன்களை சொல் லிச் சொல்லிமாளாது. அதனா லேயே இதை, ‘பொன் ஆவாரம் பூ’ என்று உயர்ந்த இடத்தில் வைத்து அழைக்கி றார்கள்.

ஆவாரம் பூக்களின் பலன்க ளில் குறிப்பி ட்ட சிலவற்றை இங்கே பார்ப்போமா?!

சிலருக்குப் பரம்பரையாக வழுக்கை வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட் டவர்கள், தலையில் முடி கொட்ட ஆரம்பித்ததுமே.. 100 கிராம் ஃபிரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்கு ங்கள். இதை அடுப்பில் வைத்து நீர் பதம் போகும் வரை காய்ச்சுங்கள். இதனுடன் கால் கிலோ தேங்காய் எண்ணெய் கல ந்து கொள்ளுங்கள். இதை முன் நெற்றியில் தினமும் நன்றாகத் தடவி வந்தால், முடி உதிர்வது ஒரே மாதத்தில் நிற்பதோடு, வழுக் கை ஏற்படாமலும் தடுக்கும்.

நெற்றியில் வரி, சுருக்கங்கள், தலைக்கு டை அடிப்பதால் ஏற்படும் கருமை திட்டுக்கள் இவை யெல்லாம் அழகைக் கெடுத்துவிடும். இதற்கு 100 கிராம் ஃப்ரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்கி, ஓசை வரும் வரை காய்ச்சி, 100 கிராம் பாதாம் ஆயிலைக் கலந்து கொள் ளுங்கள். இந்த எண்ணெயை கருமை படர்ந்த இடங்களில் குளிப்பதற்கு முன்பு தடவி வர , ஓரிரு வாரத்தில் கருமை காணாமல் போய் வரி, சுருக்கம் ஆகியவையும் மறைந்து விடும்.

முகம், கைகளில் பனிக்காலத்தில் ஏற் படும் வறட்சி காரணமாக உண்டாகும் மங்கு,தேமல் போன்றவற்றை போக்கி அழகைக் கூட்டுகிறது ஆவாரம் பூ.

ஃபிரெஷ் ஆவாரம் பூ – 100 கிராம், வெள்ளரி விதை – 50 கிராம், கசகசா- 50 கிராம் இந்த மூன்றையு ம் அரைத் துக்கொள்ளுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அள வுக்கு பால் சேர்த் து, மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் வாரம் இரு முறை பேக் போடுங்கள். காய்ந்த தும் கழுவினால் ஒரே மாதத்தில் அத்தனையு ம் மறைந்து, உடலின் ஒரிஜினல் நிறம் பளபளக்கும்.

உடம்பில் தேவையில்லாத இடங்களில் முடி வளரும் போது, கருப்பான தோற்றம் ஏற்படும். இதற்கு லேசர் ட்ரீட்மென்ட் செய்து கொள்ளும்போது தோல் தடித்து மேலும் கருப்பாகி விடும். இத்தகைய பிரச்னைக்கும் வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக் கும் கோரைக் கிழங்கு-250 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ-100 கிராம், பூலான்கிழங்கு-100 கிராம் ஆகியவற் றை மெஷினில் கொடுத் து அரைத்துக்கொள்ளுங்கள். தினமு ம் இந்தப் பவுடரை தேய்த்துக் குளிக்கு ம்போது தேவையில்லாத முடி உதிர் ந்து சரும ம் பளிச் சென மின்னும்.

கருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு இணையே இல்லை. உங் கள் கூந்தலும் அப்படி மாறுவத ற்கு… பிடியுங்கள் ஐடியா வை!

ஆவாரம் பூ-100 கிராம், வெந்தயம்-100 கிராம், பயத்தம்பருப்பு – அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரை த்துக் கொள் ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர.. கருகரு வென கூந்தல் கண் சிமிட்டும்.

கொத்துக் கொத்தாக முடிகொட்டுகிறதே என்று கவலையா..? அதற்கும் இருக்கி றது ஆவாரம் பூ வைத்தியம்!

ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தட வை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டு ங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் விட்டுக் கொள்ளுங்கள். உடம்பு பொன்நிறமாவதுடன், புத்து ணர்ச்சியும் கிடைக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: