Saturday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலைவனுக்கு தூது அனுப்பிய தலைவியாக, மதுமிதா

நவரச கேந்திரா நடன பள்ளி இயக்குனரும், பத்மஸ்ரீ கே.என் தண்டா யுத பாணி பிள்ளையின் சிஷ்யையு மான, சித்ரா சுப்ரமணியின் மாணவி செல்வி.மதுமிதா. காயத்ரி ரங்கராஜ னின் புதல்வியும், மேற்கு மாம்பலம் ராதாஸ்ரீதரின் பேத்தியுமான இவர், தன் பாட்டியை போல குரலிசையி லும், வீணை வாசிப்பிலும் தேர்ச்சி பெற்று வருகிறார்.

இவர், இசை, பரதக் கலையை தவிர, தாய்ச் எனும் சைனீஸ் யோகா, நீச்ச ல், சுடகு, சமையல், கிரிக்கெட்டிலும் வல்லவர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மதுமிதா, படிப்பிலும் முதன்மை இடத்தில் உள்ளார். தன் குரு சித்ரா சுப்ரமணியின், பல குழு நடனங்களில், முக்கிய கதாபா த்திரங்களிலும், தனிநபர் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடன மாடியுள்ளார்.

குரு சித்ரா சுப்ரமணி, தமிழ்நாடு இசைக் கல்லூரியில் பரதக் கலை ப்பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். நாட்டிய கலா சரஸ்வதி, நாட்டிய சூடாமணி உட்பட, பல பட்டங்களை பெற்றவர். மதுமிதாவின் அரங்கேற்றத்திற்கு, ஆசார்ய சூடாமணி ராதிகா சுரஜித் உட்பட, பலர் சிறப்பு விருந்தினர்க ளாக பங்கேற்றனர்.

இந்த நடன நிகழ்ச்சிக்கு, நடன அமைப்பு மற்றும் நட்டுவாங்கம் நாட்டிய கலா சரஸ்வதி சித்ரா சுப்ரமணி குரலிசையில், அனுஜா ராஜசிம்மன் மிருதங்கத்தில், கலை மாமணி தஞ்சை ஏ.நடராஜன், வயலினில் டி.சடகோபன், குழலில் சங்கர நாராயணன் ஆகியோர் பக்கபலமாக, பக்க வாத்ய கலைஞர்களாக அமர்ந்து சிறப்பித்தனர்.

“மோதக ப்ரியனுக்கு முதல் வணக்கம்’ என்று விநாயக பெருமானு க்கு, வந்தன பாடலுடன் நிகழ்ச்சியை துவக்கி, முதல் இசை வடிவ மாக புஷ்பாஞ்சலி நாட்டை ராகத்தில் அமைந்ததற்கு ஆடினார். ஆனந்த தாண்டவ கணபதி ஓம் என்று அழகாக, ஹம்சத்வனி ராக த்தில் அமைந்த பாடலுக்கு, கணபதியின் சிறப்புகளை விவரித்து போற்றியும் ஆடினார். அலாரிப்பு நடன வடிவத்திற்கு உடன் ஷண்மு கப்ரியா ராகத்தில் அமைந்த “முத்தைதரு’ பாடலுக்கு, நல்ல விறு விறுப்பாய் அமைந்த ஜதிகோர்வையுடன் அமைந்த பாடலுக்கு, மிக நேர்த்தியாக ஆடினார்.

ஜதீஸ்வரத்தை தொடர்ந்து, சப்தம் தண்டை முழங்க, சலங்கை குலுங்க, தமிழ் தாலாட்டு பாட்டில் குழந்தையாக என்றும் தவழ்ந்து வா முருகா என்று தமிழர்களின், அன்புக் கடவுள் முருகனை நெக் குருக, பாடும் பாடலுக்கு ஆடினார். அடுத்து, நடனமாடும் அனைவரு க்கும் சவாலாகவும், தங்களின் நடனத் திறமையை மதிப்பீடு செய்யு ம் வகையில் அமைந்துள்ள, ப்ரதான இசை நடன வடிவமான வர்ண த்தை ஆட துவங்கினார். அழகு கொஞ்சும், வலஜிராக அன்னமே அருகில் வா, அந்தரங்கம் பொங்க சொல்வேன் கேளடி என்று அன்னத்தை, தன் கைகளால் வருடி தலைவனுக்கு தூது அனுப்பிய தலைவியாக, மதுமிதா மாறி தன் குரு அமைத்திருந்த, தண்டாயுத பாணி பிள்ளையின், முத்திரை பதிக்கப்பட்ட மிக வித்யாசமான, ஜதி அமைப்பிற்கு ஆடி, ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார்.

திணை புலம் சென்று, காவல் புரியச் சென்ற வள்ளியை, கள்ளத் தன மாக காதல் கொள்ள சென்ற கதை காட்சிகளான கிழவனாய், அண் ணன் ஆனை முகனாய் நின்று, பயம் காட்டியது போன்ற காட்சிக ளை சிறப்பாக அபிநயித்தார். எத்தனை முறை கேட்டாலும், ஆடினா லும் மனம் புத்துயிர் பெறும் ஆண்டாளின் பாசுரங்கள், வாரணமா யிரம் பாடலுக்கு, குரு சித்ரா மதுமிதாவை அழகு ஆண்டாளாக்கி, பாசுரத்தின் துவக்கத்தில் ஜதியை கொடுத்து, ஆண்டாளை நட னமாட செய்து விட்டார். வெண்பட்டு உடுத்தி, அரக்கு நிற ஜரிகை சலசலக்க, ஆண்டாள் கொண்டையுடன் மதுமிதாவின் நடனம், மனதைக் கொள்ளை கொண்டது.

அடுத்து, ஸ்ரீநிவாச திருவேங்கடமுடையான் பாடலில், அரங்கனின் சிறப்பை சொல்லி நடனமாடினார். தீனசரண்யன் எனும் பெயர் கொ ண்டாய், ஓம் நமோ நாராயணா வரிகளில், நரசிம்மனாய் மாறி, ஹி ரண்யனின் வயிற்றை கிழித்து, காட்சி தந்ததை விளக்கி ஆடினார்.

ஹிந்தோள ராக தில்லானாவில், இடது பாதம் தூக்கி தாதை எனும் ஆடும் நடராஜ பெருமாளை வணங்கி, தன் நடனத்தை காணிக்கை யாக்கினார். அடுத்து, கே.என்.டி.,யின் மிக சிறப்பு வாய்ந்த குறத்தி நடனத்தில், குறவர் இனப் பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்டு, ஊசி மணியும், பாசி மணியும் குட்டை பாவாடை சட்டை சரசரக்க, கையில் பூக்கூடையுடன் குறி சொல்லும் கழியுடன் வந்த பாங்கு, அருமை. வாழிய செந்தமிழ் பாடலுடன், தன் நடனத்தை நிறைவு செய்தார்.

– ரசிகப்ரியா

Leave a Reply

%d bloggers like this: