Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.எஸ்.எக்ஸெல் – சில எளிய குறிப்புகள்

எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்: தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்பமாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்ற த்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம் மை மற்றவர்கள் பாராட்டா விட்டாலும், நம் மன திற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போ ம்.

எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனை வரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட் டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிக மான இடத்தை எடுத்திருக்காது. இதனா ல் டேட்டா உள்ள செல்களில் அதிக மான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத் தினைத்தரும்.

இந்த பிரச்னையைத் தீர்க்க எக் ஸெல் இரண்டு வழிகளைத் தரு கிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்க வும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய் தால் மெனு ஒன்று கிடை க்கும்.இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெ ண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட் டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோ ணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத் திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாம ல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.

எக்ஸெல் பிட்ஸ்:

தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.

Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்மு லாக்கள் காட்டப்படும்.

ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl + Shft + Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கைவரிசை யின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப் படுகை யில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+ Shift + End) கீகள் அழுத்தப் படுகை யில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசி யாகப் பயன்படுத்தப் பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.

எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல் + வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ப தில்லை. ஒரு செல்லில் உள்ள தக வல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல் லில் அவற்றை பேஸ்ட் செய்திட வே ண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லு ங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: