ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவ ரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.
பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இல க்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்ப தால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.
இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைக ளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொ ரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ் வேறான சேர்மானங்களை உருவாக்க லாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்க ளைக் கொண்டிருக்க முடியும்.
இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவா க்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
***********************************************
சி.சி.டி.வி கேமராக்களை, மிகச்சிறந்த முறையிலு ம் குறைந்த செலவிலும், பொருத்த AANINFOTECH என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தி ன் விலாசமும், தொடர்பு எண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்து அவர்களை தொடர்பு கொண்டு, நீங்கள் விரும்பும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்துங்கள்.