கூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத் தை அப்டேட் செய்து புதிய பதி ப்பாக 4.3 வெளியிட்டிருக்கிற து. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியா ன சுந்தர் பிச்சை இரண்டு நாட் களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் அறிவித்தார். சரி ஆண்ட்ரா ய்ட் 4.3 பதிப்பில் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போம்.
1. Restricted Profiles –
ஒரே மொபைல் அல்லது டேப்ளட்டில் (Tablet PC) பல பயனர்களை (Users) உருவாக்கலாம். இதன்மூலம் அவர்களுக்கு என ஒதுக்கப் பட்ட தகவல்கள், பயன்பாடுகளை (Apps) மட்டுமே பார்க்கவும் பயன் படுத்த வும் முடியும். உங்கள் மொபைலை அல்லது டேப்ளட்டை குழந்தைக் குக் கொடுக்கிறீர்கள் எனில் என்ன பார்க்க வேண்டும் என நாம் கட்டுப் படுத்தலாம்.
2. Bluetooth Smart –
இந்த வசதி குறைவான மின்சக்தியில் அதிக நேரம் மற்ற புளுடூத் சாதனங் களோடு இணைந்திருக்க வழி செய் கிறது. மேலும் தொழி ல்நுட்பத்தில் புதிய வரவுகளான Smart Watch களுட னும் இணைய முடியும்.
3. Open GL ES 3.0 –
இந்தத் தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டில் உயர்தரமான 2D மற்றும் 3D கிராபிக்ஸ் வசதியினை அளிக்கிறது. எனவே நீங்கள் High Performance விளையாட்டுகளை விளையாட முடியும்.
4. Dial-pad auto complete –
குறிப்பிட்ட நபருக்கு டயல் செய் யும்போது தானாகவே முழு மொ பைல் நம்பரும் வருகிற மாதிரி யான வசதி
5. இயங்குதளம் முன்பை விட விரைவாக இயங்கும்படி மேம்படுத்த ப்பட்டுள்ளது.
6. மேலும் ஹிந்தி, அரபிக் உட்பட சில மொழிகளுக்கான ஆதரவு.
ஆண்ட்ராய்டுபுள்ளிவிவரங்கள் சாதனை கள்
• Google Play வில் உள்ள Apps களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டிய து.
• மொத்தம் 70 மில்லியன் டேப்ள்ட்களில் ஆண்ட்ராய்ட் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.
• Google Play விலிருந்து 50 மில்லியன் Apps டவுன்லொடு செய்திரு க்கிறார்கள். கடந்த வருடம் மட்டும் 20 மில்லியன் டவுன்லோடு கள்.
• உலகில் வாங்கப்படும் 2 டேப் ளட்களில் ஒன்று ஆண்ட்ராய்டு
• ஆண்ட்ராய்ட் டேப்ளட்களில் Nexus Tablet கள் மட்டும் 10 சதவீதம்.
• டெவலப்பர்களுக்கான வருமானம் 2.5 மடங்கு அதிகரிப்பு.
இதிலிருந்து ஆப்பிள் iOS ஐ விட ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் வளர்ச்சி அதிகரிப்பதை அறியலாம். ஆண்ட் ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குதளம் புதிய Nexus 7 Tablet இல் தானாக வே வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலு ம் மற்ற Nexus 4, Nexus 7, Nexus 10 போன்றவை க்கு அப்டேட் மூலம் கிடைக்கும். சோனியும் தனது Xperia Z, ZL, ZR, SP, Z Tablet போன்றவை க்கு அப்டேட் அறிவித்துள்ளது.
Reblogged this on Samsung Galaxy and commented:
Don’t forget Max Battery Booster: https://play.google.com/store/apps/details?id=com.faygroup.maxbatterybooster