Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனித்த பயணத்துக்குத் ஜெயலலிதா தயார் !

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி. மு.க. தனித்துப்போட்டியிடுவது என்ற தனது முடிவில்  உறுதியாக நிலை கொண்டுவிட்டார் ஜெயலலிதா!
 
”நாம் யாரையும் சார்ந்திருக்க முடியா து. வேறு எத்தனையோ கட்சிகள் அப் படி இருக்கலாம். அவர்கள் தேசியக் கட்சியைச்சார்ந்து இருக்கலாம். சில பெண்கள் இளம் வயதில் அப்பாவைச் சார்ந்திருப்பார்கள். வளர்ந்ததும்   கண வனைச் சார்ந்திருப்பார்கள். வயதானதும் பிள்ளைகளைச் சார்ந்திரு ப்பார்கள். என்னைப் போன்ற பெண்களும் உள்ளனர். நான் யாரையு ம் சார்ந்து இல்லை. நல்லது, கெட்டதை நானே முடிவு செய்து கொள்கிறேன்.  
 
தேசிய அரசியலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகள் உள்ள ன. சில கட்சி கள்காங்கிரஸோடும் சில கட்சிகள் பாரதிய ஜனதா வோடும் கூட்டு சேர்கின்றன. ஆனால், அ.தி. மு.க. தனித்தே நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுவிட்டது. நம் எதிர்கா லத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நாம், வரும் தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸைச் சார்ந்திருக்க முடியாது. தமிழகத்தி ன் உரிமையைப் பெற 40 தொகு திகளிலும் வெற்றி பெற்று மத்தி யில் அதிகாரத்தை நாம் உருவா க்கிக்கொள்ள முடியும்” – இப்படி அ.தி.மு.க. பொதுக் குழுவில் கடந் த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெய லலிதா பேசினார். இப்படி தைரிய மாகச் சொல்லி விட்டாரே தவிர, அறிவிப்புக்குப்பிறகு தான் அவரு க்குத் தயக்கம் அதிகம் ஏற்பட்டது.
 
ஜெயலலிதாவின் இந்த அறிவிப் பைப் பார்த்து அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவர் கருணாநிதி. அந்தக் காலகட்டத்தில் அவருடன் காங் கிரஸ் நெருக்கமாக இருந்தது. கருணாநிதியை விஜயகாந்தும் நெருங்கிக்கொண்டிருந்தார். தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகி ய மூன்றும் இணைந் தால், அது பலமான கூட்டணியாக அமையும்,
தனித்து நிற்கும் ஜெயலலிதா வை வீழ்த்தலாம் என்பது அவர து நினைப்பாக இருந்தது. இந்த நிலையில், ‘நாம் தப்புக்கணக் கு போட்டு விட்டோமோ’ என்று கூட ஜெயலலிதா நினைத்தார். அதனால் தான் மதுவிலக்கு நடைப்பயணத்தில்  இருந்த வைகோவை, வலிய வழி மறித் து எதுவுமே தெரியாதவராக, ‘எதுக்காக நடைப் பயணம்?’ என்று கேட்டார். ‘மீண்டும் ஜெயலலிதா கூட்டணி அமைக்கலாம் ’  என்று ஒருபுறம் பேச்சு கிளம்பிய நிலை யில், மறுபுறம்   கருணாநிதியும் பலவீனம் அடைய ஆரம்பித்தார்.
 
ஈழத் தமிழர் பிரச்னை, தி.மு.க- வுக்கும் காங்கிரஸுக்குமான ஐக்கியத்தைக் குலைத்தது. நேர ம் கெட்ட நேரத்தில் காங்கிர ஸைக் கழற்றிவிட்டு, டெசோவு க்கு உயிரூட்ட வேண்டிய நிலை க்கு கருணா நிதி தள்ளப்பட்டார். விஜயகாந்துடன் மட்டும் அணி சேரலாம் என்று கருணாநிதி நினைத்திருந்தார். மாநிலங்களவைத் தேர்தலில் விஜய காந்த் தனது மச்சானை எம்.பி. ஆக்கத் துடிக்க, கருணாநிதி தனது மகளை எம்.பி. ஆக்க நினைக்க. அங்கும் நேரடி யாக மோதும் சூழல் . இதனை காங்கி ரஸ் பயன்படுத்திக் கொண்டு கருணா நிதியுடன் மீண்டும் ஒட்டிக்கொண்டது.
‘நாங்கள் கூட்டணி சேரவில்லை’ என் று இப்போதைக்கு கருணாநிதி சமாளி த்தாலும், அவருக்கு வேறு  வழியே இல்லை, காங்கிர ஸுடன் சேர்வதைத் தவிர! இப்படிப்பட்ட நிலையில் தனது ஐந்தாவ து வேட்பாளரை வெற்றி பெற வைக்க வாய்ப்பு இல்லாமல் போனதா ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த இடத்தைக் கொடுத்து,  அவர் களது நன்மதி ப்பை ஜெயலலிதா வாங்கிக் கொண்டார். இந்திய கம் யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததைவைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்த லில் கம்யூனிஸ்ட்களை தனது அணியில் ஜெயலலிதா சேர்த் துக் கொள்வார் என்று சிலர் நினைக் கிறார் கள். ”இல் லை. அவர்களோடு நட்பு பாராட்ட மட்டுமே ஜெயலலிதா நினைக் கிறார். தேர்தல் கூட்டணி வை க்க மாட்டார். தேர்தலுக்குப் பிறகு நடக்க இருக்கும் அரசிய ல் காய் நகர்த்தல்களுக்கு கம்யூனி ஸ்ட்கள் பயன்படுவார்கள் என்பத ற் காகத்தான் ஒரு ராஜ்யசபாவை டி.ராஜா வுக்கு விட்டுக் கொடுத்தார்” என்று சொல்லப்படுகிறது. வைகோ வை நடைப் பயணத்தில் வலிய ப்போய் பார் த்தவர் ஜெயலலிதா. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங் குவது சம்பந்தமாக வைகோ விடுத்த ஓர் அறிக்கைக்கு வேளா ண்துறை அமைச்சர் தாமோ தரர் விட்ட அறிக்கையில், வைகோ வை மிகக் கடுமையாக விமர் சித்தார். பொதுவாக அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அறிக்கை விடு ம் அதிகாரம் எல்லாம் வழங்கப் படவில்லை. அதுவும் இன்னொரு கட் சித் தலைவருக்கு எதிராக, அதுவும் கூட்டணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் வை கோவு க்கு எதிராக தாமோதரன் மிக மோச மான வார்த்தைகளைப் பயன்படுத்தி னார் என்றால், ஜெய லலிதா அதன் மூலமாக ஏதோ சொல்ல விரும்புகி றார் என்று அர்த்தம். மேலும், அவரது அணியுடன் கைகோத்து நின்ற மனித நேய மக்கள் கட்சியும் புதிய தமிழகமு ம் கனிமொழியை ஆதரிக்கும் வாய்ப் பாக தி.மு.க. பக்கம் தாவியது பற்றிய எந்த வருத்தமும் ஜெய லி தாவின் செயல்பாட்டில் இல்லை. அவரே வழியனுப்பியது போல நடந்துகொண்டார். மொத்தத் தில், ‘யாரும் இல்லாமல், தனித் துப் போட்டி !’ என்ற இறுதி முடிவை அவர் எடுத்து விட்டுத்தான் இப்படிச் செயல் படுவ தாகச் சொல்லப்படுகிறது .
 
ஜெயலலிதா இரண்டு முடிவுகளை எடுத்து வைத்திருந்தார். ஒன்று தேசி ய அளவில் அமையும் பாரதிய ஜனதா அணியில் சேர்வது அல்லது கம்யூனி ஸ்ட்கள் அமைக்கும் மாற்று அணியில் பங்கேற்பது. பாரதிய ஜனதா அணியில் சேர்ந்தால், தமிழகத்தில் சிறுபான்மையி னர் வாக்குக ளை இழக்க வேண்டிவரும். மேலும், அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் மிகவும் சொற் பம். கம்யூனிஸ்ட்கள் நம்மோடு சேர்ந்தால் கூடுதல் பிரசார பலம் கிடைக்குமே தவிர, மற்றபடி அவர்கள்தான் இரண்டு தொகுதிக ளில் நம்மால் ஜெயிப்பார்கள் என்பது ஜெய லலி தாவின் எண் ணம். ‘தனித்து நிற்பதன் மூலமாக அ.தி.முக-வுக்கு என்ன செல்வாக் கு இருக்கிறது என்பதையாவது நாம் தெரிந் துகொள்ளலாமே?’ என்று சொல்ல ஆரம்பித் துள்ளார் ஜெயலலிதா. கடந்த இரண்டு வார ங்களாக அவருடைய எண்ணவோட்டம் இப்படி த்தான் இருப்பதாகச்சொல்கிறார்கள். அதனால்தான் கொடநாடு சென்ற ஜெய லலிதா, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட் டங்களை வகுக்க ஆரம்பித்து விட்டார். 40 தொகுதிகளுக்குமான அ.தி.மு .க. வேட்பாளர் யார் என்பதை இறுதிப்படுத்தத் தொடங்கிவி ட்டார். இந்த முறை வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்மீது எந் தப் புகாரும் எழக் கூடாது என்று நினைக்கி றார். மாவட்டச் செயலா ளர்கள் மீது இது வரை வந்த புகார்களை அமைச்சர் கே.பி. முனுசா மியும், அமைச்சர்கள் மீதான புகா ர்களை அமைச்சர் நத்தம் விஸ்வ நாத னும், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பற்றிய புகார்களை அமைச்ச ர் வைத்தியலிங்கமும் விசாரிக்க உத்தர விட்டுள்ளார் ஜெயலலிதா. இந்த மூவரை யும் கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம். இவர்கள் அ.தி.மு.க. பிரமுகர் களில் மிக ச் சரியான ஆட்களை அடையாளம் காட்டு வார்கள் என் றும், அந்தப் பட்டியலை வை த்து வேட்பாளரை ஜெயலலிதா முடிவு செய்வாராம். ஜெயலலிதா தயாரிக்கும் வேட்பாளர்கள் பற்றி அதன் பிறகு உளவுத் துறையும் விசாரிக்குமாம். இத்தனை அக் னிப்பரீட்சை களையும் தாண்டி வருபவ ரைத்தான் தேர்தல் களத்தில் நிறுத்த வே ண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ண ம்!  
 
‘கருணாநிதி கஜானாவை காலியாக வைத்துச் சென்றார். அந்த நிலமையிலேயே நம்மால் இவ்வளவு சாதனை செய்ய முடிந்துள் ளது. இச்சாதனைகளைப் பிரசாரம் செய்யவேண்டும். நல்ல வேட்பா ளரை நிறுத்த வேண்டும். மற்றபடி வேறு யார் தயவும் தேவை இல் லை’ என்பதை எதிர் வரும் நாடாளு மன்றத் தேர்தலுக்கான ஃபார் முலா வாக ஜெயலலிதா நம்புகிறார். ஆனால், இது ஜெயிக்கும் ஃபார் முலாவா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.
 
மேலும், அதிகப்படியான எம்.பி-க்கள் பெறவேண்டும் என்பதைவிட, பிரதமர்  ஆசையும் கடைக்கோடியில் இருப்பதால், கயிற்றின் மீது நடக்கும் சாகசத்துக்குத் தயாராகிவிட்டார் ஜெயலலிதா!  
 
ப.திருமாவேலன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: