Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமழிசை ஆழ்வார்

திருநட்சத்திரம்: தை – 8 – மகம் (ஜன.22) 
 
திருமழிசை வைணமும்  சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி.  திருமழிசை என்னும் இந்த திருத்தலம். மிகவும் புகழ் பெற்று விளங்கிய இந்தத் தலத்தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்கா வது ஆழ்வாரும்,  சான்றோர்களில் மிகச் சிறந்தவர் எனப் போற்றப்ப டுபவருமான  திருமழிசை ஆழ்வார் தோன்றினார். அவரது அவதாரம் குறித்த கதை இதோ…

தொண்டை நாட்டில் மகிமை பொருந்திய திருமழிசைத் திருத் தலத்தில்,  முனிவருக்கும், இவ ரது பத்தினி கனகாங்கிக்கும் 12 திங்கள் கருவில் உருவாகி,  சித் தாத்ரி ஆண்டு,  தைத்திங்கள் தேய் பிறை கிருஷ்ணபட்சம் பொருந்திய பிரத மை திதியின் ஞாயிற்றுக் கிழமை அன்று மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆழி அம் சமாய் உடலில் எந்த உறுப்புகளுமே இல்லாத ஒரு சதைப் பிண்டம் பிறந்தது. மலையத்தனை வருத்தத்தை மனதில் கொண்டவர்களாய் அந்தப் பிண்டத்தை அருகில் இருந்த புதரில் வீசி எறிந்துவிட்டுச் சென் று விட்டார்கள் அந்தத் தம்பதியர்.திருமாலும்  திருமகளும் அங்கு தோன்றி அந்தப் பிண் டத்துக்கு உயிர் கொடுத்து ஒரு அழகிய ஆண் குழந்தை யாக மாற்றினார்கள். அவர் கள் மறைந்ததைப் பார்த்த குழந்தை அவர்கள் மீண்டும் தன் முன் தோன்ற வேண்டும் என்று பிடிவாதமாய் அழுதது. அங்கு வந்த திருவாளன் என்ற வய தான வேளாளன் அக்குழந்தையைத் மகிழ் வுடன் எடுத்துச் சென் று தன் மனைவி பங்கஜ வல்லியிடம் கொடுத்து வளர்க்கச் சொன் னான்.

திருமாலின் அருள் பெற்ற அந்தக் குழந்தை, பால் எதுவும் குடிக்கா மல் சிறுநீர் கூடக் கழிக் காமல் அழுது கொண்டி ருந்ததைக் கேள்விப்பட் ட, அந்த ஊரில் சான் றோனான ஒரு முதியவ ர் வந்து பாலைக் கொடுக்க குழந்தை குடித்தது. அதில் இருந்த மீதிப் பாலைக் குடித்த ஆழ்வாரின் வளர்ப்புப் பெற்றோர்கள் வாலிபம் திரு ம்பி இளையவர்களாக மாறி கணிகண்ணன் என்ற குழந்தையை பெற்றார்கள். இந்தக் கணி கண்ணன்தான் திருமழிசை ஆழ்வாரின் பிரதான சீடர் ஆவார்.

திருமழிசை ஆழ்வார் அஷ்டாங்க யோகம் செய்து இறைவனை அடையும் பொருட்டு சீக்கியம், பௌத்தம் என ஏழுக்கும் அதிகமான மதங்களில் சேர்ந்தார். சைவ மதத்தில் சிவவாக்கியம் என்ற பெய ருடன் சிவவாக்கியர் திருஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார்.

பிறகு திருமயிலை வந்து பேயாழ்வாரைச் சந்தித்தார். அவர் நாராயணின் திருமந்திர த்தை இவருக்கு முறைப்படி உபதேசித்து இவரை ஸ்ரீவைஷ்ணவராக்கினார். அதன் பின் திருமழிசைக்கு வந்து அங்கிருந்த கஜேந்திரசரஸ் என்ற குளத்தின் கரையில் அமர்ந்து இறைவனின் அருளால் பல்வகை யோகங்கள் கைவரப் பெற்றார்.

திருவரங்கம்,  அன்பில்,  திருப்பேர் நகர்,  கும்பகோணம்,  கவித்தலம்,  திருக்கோட் டியூர்,  திருக்கூடல்,  திருக்குறுங்குடி,  திரு ப்பாடகம், திருவூரகம்,  திருவெஃகா,  திரு வள்ளூர்,  திருவேங்கடம்,  திருப்பாற்கடல்,  துவாரகை,  பரமதம் ஆகியவை இவ ரால் பாடல் பெற்ற தளங்களாகும்.  

திருமாலின் கரத்திலுள்ள சக்கரத்தின் அம்சமாக திருமழிசை ஆழ் வார் வணங்கப்படுகிறார். இவரது பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந் தத்தில் முதல் திருமொழியில் நான்முகன் அந்தாதி என்ற பெயரில் விளங்குகின்றன.
 
காண்க: 
திருமழிசை  ஆழ்வார்
திருமழிசை  ஆழ்வார் தரிசனம் 
திருமழிசை (தினமலர்)

திருவெஃகா

நான்முகன்  அந்தாதி
திருமழிசை   ஆழ்வார் (தேசிகன்)
திருமழிசை  பிரான் திருநட்சத்திரம் (ஒளி-ஒலி)
திருமழிசை  ஆழ்வார்  (தமிழ்வு)
இது விதை2விருட்சம் இணையயத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: