தான் காலூன்ற பிறரது காலை வாரி விடும் நடிகை ஸ்ருதிஹாசன் முயற் சியில் மிகவும் தீவிரமாக இறங்கியுள் ளதாக தெரிகிறது. நடிகை தமன்னா வின் வாய்ப்புகளை தட்டிப்பறித்து, அந்த திரைப்படத்தில்தான் நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் விஜயகாந்த் நடித் து ஹிட்டான ரமணா படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் விஜய காந்த் வேடத்தில் அக்சய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க தமன்னாவை தேர்வு செய்தனர். இதனால் அவர் மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் திடீரென தமன்னாவை நீக்கி விட்டு சுருதி ஹாசனை ஒப்பந்தம் செய்து விட் டனர். இதற்கு காரணம் சுருதி ஹாசனின் தொடர் வற்புறுத்தல் என்றே கூறப்படுகிறது.
சுருதிஹாசன் நடித்து சமீபத்தில் ரிலீ சானடி டே, ராமையா வஸ்தா வையா ஆகிய இரு படங்களும் வெற்றிகரமாக ஓடின. இதை யடுத்து அக்சய் குமார் ஜோடியாகும் வாய்ப்பை தட்டி பறித்துள் ளார். இந்த படம்மூலம் இந்தி பட உலகில் வலுவாக காலூன்ற திட்டமிட்டுள் ளார்.