Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்.

செக்ஸ்’ஏன் அவசியம் ?!

‘செக்ஸ்’ பற்றி வெளிப்படையாக பேசுவதும், விவாதிப்பதும் மிக தவறான ஒன்றாக பார்க்கப்படுகிற து,  நமது கலாச்சாரத்தில் இதற்கு நாம் கொடுக்கும் இடம் கிட்டத்தட் ட கடைசி, அதே நேரம் உலகிற்கு காமசூத்திரம் கொடுத்ததும் நாம் தான்! கஜூராகோ கோவில் சிற்ப ங்களாக கலை வடிவிலும் எழுத்து வடிவிலும் பேசிய நாம் தான், இத னை குழந்தை பெறுவதற்காகவும், அற்ப சந்தோசத்துக்காக என்று ஒது க்கியே வைத்து விட்டோம்.  இதன் மகத்துவம் புரிந்த முன்னோர்கள் சொல்வதை ஏற்காத நாம் சமீபத்திய அறிவிய லாளர்கள் இதன் அவசியம் குறித்து  சொல்லும் போது அப்படியா என்று புருவத்தை உயர்த்துகிறோம். மன இறுக்கம் , மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை இதன் மூலம் அதிக ரிக்கலாம் என்பது எவ்வளவு அருமை !

 உடல் எடை போட்டுவிட்டது, சுகர், பிரசர், அப்படி இப்படின்னு பிரச்சனை களில் இருந்து தம்பதிகள் நிறைவான உடலுறவின் மூலம்  தள்ளி இருக்கலாம் என்பது ஆச்சர்யம்தானே?! மன இறுக்கம் கலைய பட்டாலே உடல் தன் னால் அழகுபெற்று விடும்! (சிலர் கேட்கலாம், ஒருசிலர் கண்டபடி இதே நினைப் பாகவே அப்டி இப்டி  அலையுறாங்களே அவங்க ரொம்ப வே நல்லா இருப்பாங்களே என்று?!! தன் துணையை தவிர பிறருடனான உறவுகளில் சுகம், சந்தோசம் இருக் கலாம், ஆனால் மன இறுக்கம் குறைய நிச்சயம் வாய்ப்பே யில்லை மாறாக தவறு செய்கிறோ ம்(!) என்கிற குற்ற உணர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும்
 
பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லிய டார்வி ன்… 
 
“மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள்  உட் பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படு த்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடை வில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதி யில் மறந்தே போகும்”
 
உறுப்புகளுக்கு ஓரளவு மிதமான இயக்கம் இருந்தாக வேண்டியது அவசியம். முற்றி லும் தவிர்த்தால் உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம் . இதய த்தை மாரடைப்பு ஆபத்தில்  இருந்து பாதுகாப்பளிக்கிறது. வெளி நாடுகளில் இன்னும் ஆராய்ச்சி பண்ணிகொண் டே இருக்கிறார் கள், இதன் பயன்கள் வேறு என்னவெ ல்லாம் இருக் கிறது என்று !!
 
ஆனால் இதை பற்றி எல்லாம் அக் கறையில்லாமல் ஏனோதானோவென சம்பிர தாயத்துக்காக சலிப்பாக சென் று கொண்டிருக்கிறது இன்றைய இய ந்திர உலகில் தம்பதியரின் தனிப்பட்ட  அந்தரங்கம்.
பணம் , படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற் போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவா கரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்து கோரும்  தம்பதி யரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும்,அவர்களுக்குள்  நடக்கு ம்  பல பிரச்சனைகளுக்கும் அடிப்படை யாக, மூல காரணமாக இருப்பது செக்ஸ் என்பது…!!
.
பெண்களின் மனோநிலை

 
உடலுறவை பொறுத்தவரை தனது விருப்பத்தை நேரடியாக வெளிபடுத்த மாட்டாள். ஒரு சில பெண்கள் சுற்றி வளைத்து பேசி குறிப்பால் உணர்த்தலாம்…கேலியும் கிண்டலு மாக வெளியிடலாம். அவரவர் கணவனின் எண்ண வோட்டங்க ளை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவ ரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என் கிற எண்ணம் உண்டு. ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற் றொரு பெண் இவ்விசயத்தை விவரித்து பேசினால் அப்பெண் அனுபவ பட்டவள் என்று முடிவு பண்ணி விடுகிறாள்.  இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார் கள். 
 
இந்த விஷயத்தை பொறுத்தவரை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருப்பதைதான் ஆண் விரும்புகிறான். (எந்த காலமாக இருந் தாலு ம் !)
 
எனவே பொதுவாக பெண் இவ்விசயம் குறி த்து அதிகம் வெளிப்படையாக  பேசுவதை யும், ஆணுக்கு முன்னரே செயல்படுவதையு ம் தவிர்த்தல் நல்லதே. ஒரு சிலர் தனது  மனைவி செக்ஸ் பற்றி  வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்பு வார்கள். கண வன் மனமறிந்து பேசுவது முக்கியம். ஆண்களின் மனநிலை 

உறவை பற்றிய எண்ணம் தோன்றியதும் மனைவி உடனே  உடன் பட்டே ஆகவேண்டும் என்பதே பெரும்பாலான கணவர்களின் எதிர் பார்ப்பு.அதற்கு முன்  மனை வியின் உடலறிந்து, மனமறிந்து என்பதெல்லா ம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெண்களுக்கு மெதுவாகவே  உடல் கிளர் ந்தெழ தொடங்கும், ஆனா ல் ஆண் இதனை கவனிப் பது இல்லை. தான் இயங்கி திருப்தி  அடைந்தால் போது ம் பெண்ணுக்கு என்று  தனி யாக திருப்தி அடைதல் இல்லை என முடிவுசெய்து கொள்கிறார் கள், அவளது உணர்வுகளுக்கும் வடிகால் தேவை என்பதை மறந்து…! 

 

பத்து வருடங்கள் கழிந்த பின் 

 
தாம்பத்தியத்தில் அந்தரங்க  உறவு  என் பது மிக முக்கியம் என்றாலும் திரு மணம் முடிந்த பத்து ஆண்டுகள் கழிந் த தம்பதியினரின் இது குறித்த விருப் பங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின் றன. ஆணின் விருப்பம் ஒரு விதமா கவும் பெண்ணின் விருப்பம் வேறு ஒன்றாகவும் இருக்கின்றன.
 
உதாரணமாக 
 
திருமணம் முடிந்த புதிதில் நகைச் சுவை யாக பேசக்கூடிய கணவனை மிக விரும்புவாள்  மனைவி.. ஆனால் 10 வருடம் கழிந்த பின் அதே மனைவி கணவனின் நகைச்சுவை பேச்சை அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், நம்மி டம் பேசுவதை போலத்தானே பிற பெண் களிடமும் பேசுவார், அது அவ்வளவு நல்லதில்லையே என்ற மனோபாவ ம் ஒருகாரணம், மற்றொன்று ‘இருக்கிற சூழ்நிலை தெரியாம அது என்ன எதுக்கெடுத்தாலும் தத்துபித்துனு உளறிட்டு ?!!’ என்பது…
 
இது போல் முதல் பத்து வருட ங்க ளில் பிடித்தவை எல்லாம், அடு த்து தொடரும் காலங்க ளில் பிடிக்காமல் வெறுப் பிற்கு இடமாகிவிடுகின்ற ன! அது போன்றே அந்தர ங்க விசயத்திலும் மாற்ற ம் ஏற்படுகிறது, மற்றவை அவ்வளவாக பெரிய பாதி ப்புகளை ஏற்படுத்தாது, ஆனால் உடலுறவு விஷய ம் அப்படி அல்ல…இதில் தவறினால் சமயங்களில் குடும்பத்தில் மிக பெரிய பாதிப்புகளை யும், பிரிவுகளையும் ஏற்படுத்திவிட கூடும்.
 
அப்படி என்ன இதில் இருக்கிறது ? என்ன என்ன பாதிப்பு ஏற்படும் ? இது என்ன அவ்வளவு முக்கிய மா ? இது போன்ற கேள்விகளு க்கான பதில்களை தொடர்ந்து பார்க்கலா ம்…..
 
பெண்களின் விருப்பமின்மை ?!  பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும்  இல்லாம ல் இரவில்  மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்பு வதில்லை . ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ் வித உணர்ச்சி யும் இருக்காது ‘என்னவும் செய் துவிட்டுபோ’ என்கிற விரக்தி மட்டுமே இரு க்கும்…இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்பு களில் கடினத்தன்மையும், வலியும் ஏற் படக் கூடும்.

 
பொதுவாக முப்பத்தைந்து அத ற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு  உறவின் மேல் விரு ப்பமின்மை தோன்றும்…இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துகொள்ளலாம்…
 
*இவர்களில் பலரும் கருத்தடை சாத னம்பொருத்தியோ, குடும்ப கட்டுப்பா டு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப் பார்கள். இருந்தும் ஆணுறை அணிய செய்து உறவு கொள்ள சொல் வார்கள்.
 
* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.
 
* தலைவலி, வயிறு வலி போ ன்ற வெளியேதெரியாத காரண ங்கள்.
 
* தூக்கம் வருகிறது, பசங்க தூங் கல, டயர்டா இருக்கு…
 
நேரடியாக உறவு பிடிக்கவில் லை என்று சொல்லதயங்குவா ர்கள். அப்படி சொல்லிவிட்டா ல் கணவன் தன்னை வெறுத்து விடு வானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!
கணவனின் புரிதலின்மை 
.
மனைவி உறவின் மேல் விருப்ப ம் இல்லை என்பதுபோல் காட்டிக் கொ ண்டால் அதுபோல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவிமீது அன்பைவாரி பொழி பவர்களும் உறவுக்கு ‘ரெட்சிக்னல் ‘ என்றதும் எரிமலையாய் பொங்கி விடுவார் கள். எதற்காக மறுக்கிறா ள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்க கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில் லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவை பற்றிய ஒரு  உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.
 
உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவ து, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ‘ உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கி றது, அதுதான் என்னை நிராகரி க்கிற’ என்று சிறிதும் யோசிக் காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார் கள்.
 
இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாக குறைந்து போகும் என்பதை தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை. உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்து விட கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?

 
இத்தகைய விஷயத்தை வெகு  சாதா ரணமாக எடுத்துகொள்ளாமல் கவன மாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. 
 
ஒரு உண்மை தெரியுமா??

படுக்கை அறையில் ஆணைவிட பெ ண்ணே அதிக இன்பத்தை பெறுகிறா ள். உடலுறவின்மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம்விரும்பவே செய்வா ள். அப்படிபட்ட பெண் உறவை தவிர் க்கிறாள் என்றால், எதனால் என்று புரிந்து கொள்வது ஒரு கணவனின் கடமை…அந்த காரணத்தை அறிந்து சரிசெய்து கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக  முக்கியம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: