Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புறக்கணிக்க‍ப்பட்ட‍ புற்றுநோயாளியாக “நடிகை கனகா”, மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பரிதாபம்!

சிவாஜி, எம்.ஜி.ஆர். உட்பட பல முன்ன‍ணி நடிகர்களுடன் ஜோடி யாக நடித்து நடிப்புலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தும் 60-70களில் அன் றைய இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக திகழ்ந்தவருமான‌ நடிகை தேவிகா ஆவார். இவரது மகள்தான் கன கா, இவரும், கங்கை அமரனின் கரகாட் டக்காரன் திரைப்படத்தில் ராமராஜனுட ன் ஜோடியாக அறிமுகமாகி 90களில் அன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்

தமிழ் மலையாளம், கன்னடம் ஆகியமும் மொழிகளிலும் சுமார் 75படங்களுக்குமே ல் பல முன்ன‍ணி கதாநாயகர்களுட‌ன் ஜோடியாக நடித்தார். சிம்மராசி திரைப் படத்தில் சரத்குமார் குஷ்புவுடன் தமிழில் நடித்த‍ கடைசி படமாகும்.

நடிகைகனகா நடித்த‍ படங்களில் ரஜினி காந்த்துடன் அதிசய பிறவி, மம்முட்டியு டன் கிளிபேச்சு கேட்வா,  பிரபுடன் ராஜகுமாரன், பெரிய குடும்பம், விஜயகாந்த்துடன் கோவில் காளை போன்ற சில திரைப்படங்க ளில் அவரது நடிப்பு பாராட்ட‍ப்பட்ட‍து.

இவரது அம்மா தேவிகா உயிருட ன் இருக்கும்வரை இவர், இவரது வாழ்க்கை வசந்தம் வீசிக்கொண் டிருந்தது. ஆனால் தேவிகாவின் மரணத்திற்கு பிறகு சீராக போய்க் கொண்டிருந்த நடிகை கனகாவி ன் வாழ்க்கையில் புயல் வீசத் தொ டங்கியது. துடுப்பு இல்லாத படகாக தத்தளித்துக் கொண்டிருந்தா ர்.

நடிகை தேவிகா தனது மகளை வெளி உலகம் தெரியாமல், அப் பாவியாக வளர்த்துவிட்ட‍ கார ணத்தினால், அவரது மறைவுக்கு பிறகு நடிகை கனகாவால் தனது வாழ்க்கையை தனியாளாக எதி ர்கொள்ள தைரியமும் தன்னம்பி க்கையும் இல்லாமல் தடுமாறி னார். தனது தந்தையின் அரவண ப்புகூட கிடைக்க‍வில்லை கார ணம் இவரது அம்மா தேவிகாவு டன் ஏற்பட்ட‍ கருத்து வேறுபாட்டால், பிரிந்ததால், அதுவும் கிடை க்க‍ வில்லை. தேவிகாவின் இறப்பிற்கு பிறகும்கூட இவருக்கு ஆதரவாகவும் ஆறுதலாவும் இவர து தந்தை இல்லை.

பின் தனக்கு வாழ்க்கைத் துணை தேவை என் பதை உணர்ந்த நடி கை கனகா முத்துக்குமார் என்ற வெளிநாட்டு இன்ஜினீயரை பதிவுத் திரு மணம் செய்து கொண்டார். ஆனால் துரதிஷ் டம் அந்த வாழ்க்கையும் கனகாவுக்கு கனவாகவே போய்விட்ட‍து.

அவருக்கு யாரைப் பார்த்தாலும் வெறுப்புட னும் பயத்துடனும் எப்போதுமே அவருக்கு இருந்ததால், ஒரு மன நோயாளியாக மாறினார்.

த‌னது தந்தை தன்னை கொல்ல முயற்சிப் பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற் சிப்பதாகவும், காவல்துறையில் புகாரும் அதனை தொடர்ந்து  நீதிமன்றத்தில் வழக் கு தொடர்ந்தார். மேலும் தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று காவல்துறையில் புகாரும் செய்தா ர். பின் அவரது கணவரை ஆவி அமுதா தான் கடத்தி வைத்திருப்ப‍தாகவும், அவ ரை தன்னிடம் ஒப்படைக்க‍ மறுப்பதாகவு ம் புகாரும் செய்தார். அதற்கு உடனடியாக ஆவி அமுதா மறுப்பு தெரிவித்து, கனகா மீதே மான நஷ்ட வழக்கினை தொடர்ந்தா ர், அது இன்னும் நீதி மன்றத்தில் நிலுவை யில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு, எங்கோ  மாயமாக மறைந் து விட்டார். அவர் எங்கு சென்றார். எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே யாருகுகம் தெரி யாமலே மர்மமாகவே இருந் து வந்தது. தற்போது அவரைப் பற்றிய‌ அதி ர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகை கனகா கடுமையான புற்றுநோ யால் பாதிக்கப்பட்டிருப்ப‍ தாகவும், அவ ர் கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் உள்ள‍ ஒரு தனியார் மருத் துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு ஓராண்டு காலமாக தொடர்ச்சியாக‌ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரி யவந்துள்ள‍து. மேலும் இவருக்கு வந்த‌ புற்று நோய் குணப்படுத்த முடி யாத அளவுக்கு முற்றிவிட்டதால் கை விடப்பட்ட புற்றுநோயாளி என மருத்துவர்களால் சான்றளிக்க‍ப்பட் டுள்ள‍தாக ஒருசெய்தி கசிந்துள்ள‍து . மேலும் கைவிடப்பட்ட‍ புற்றுநோ யாளிகள் அவர்களது மரண காலம் வரை அவர்களை வைத்து பராமரிக்கும் மருத்துவனை க்கு மாற்றப்பட்டுவிட்டார். தற்போது அந்த மருத்துவமனையில் உள்ள‍ நடிகை கனகா , தனது மரணத்தை எதிர்பார்த்து புற்று நோயுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை கனகா, மருத்துவமனையில் சிகிச் சை பெற்றபோது அவரை பக்கத்தில் இரு ந்து பார்த்துக் கொள்ள கூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்கவில்லை என் று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்க ப்பட்டிருக்கும் மருத்துவ மனை நிர்வா கத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்று கனகா கூறி யிருக்கிறார். இதனால் மருத்துவ மனை நிர்வாகம் கனகாவை யாரும் சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார் கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: