Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போ ராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக் காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடை ப் பேச்சாளர். சிறந்த பத்ரிகை யாளர். 1913-இல் ‘ஞானபாநு’ இதழை நடத்திய வர்.

விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருட னும் மகாகவி பாரதி யாருடனும் நெருங்கிப் பழகிய வர். ‘வீரமுரசு’ எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக் கல் மாவட்டம் வத்தலகுண் டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந் தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாக லட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணிய ம். இவருக்கு ஞானாம் பாள், தைலா ம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோ தரரும் இருந்தனர்.

இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திரு வனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட் சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.

தூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்யத்தொடங்கினார். 1904-1905-ல் நடந்த ரஷிய- ஜப்பானியப் போரில் பெரிய நாடான ரஷியா வை ஜப்பான் தோற் கடித்தது. இது உலகெங்கும் பிரி ட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906-ல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார்.

நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் ‘வந்தே மாதரம்’ எனும் முழக்க ங்கள் எழுந்தன. அப்போது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொ டங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கு ம் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதே ச கீதங்களால்’ இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.

சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளு க்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு. சுதந்திர போராட்ட த்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடை க்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்ட போ து தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இத னால், ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலே ய அரசு இவருக்கு தடை விதித்தது.

உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதி லும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடை பய ணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார். இந்நி லையில், 15.5.1915-ல் எலும்புருக்கி நோயால் சிவாவின் மனைவி இறந் தார். இதன்பின்னர், சற்றும் சளைக்காமல் முன்பைவிட அதிக எண்ணி க்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திர தீயை வளர்த்தார்.

முதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியா க சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார். ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.

தனது நண்பர் சின்னமுத்து முதலி யார் மற்றும் நண்பர்கள் உதவியு டன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டி னார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படு த்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பி னர்களும் காலையில் எழுந்து மகா கவிபாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் செ ன்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர். மற்ற நேர ங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழு வதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர்.

பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையா ன தொகையைதிரட்ட சிவா முயன்ற போது, தொழுநோய் இருப்பதை கார ணம் காட்டி பஸ், ரயிலில் செல்லக் கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது.

இருப்பினும், கால்நடையாகவும், கட் டைவண்டியிலும் ஊர், ஊராக பயண ம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டி னார். 22.7.1925-ல் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்ப ர்களுடன் மிக உற்சாகமாக பேசி க்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வய தில் இயற்கை எய்தினார்.

நன்றி மாலைமலர்

Leave a Reply