Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“இந்த” விபரீதத்துக்கு விடை கிடைக்குமா?

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சாதி-மதம் தொடர்பான மோதல்கள் வராமல் தடுப்பதிலும் தமிழக போலீ சார் அக்கறையுடன் செயல்பட்டு வரு கிறார்கள். பொதுவாகவே தமிழகத்தி ல் அனைத்து மதத்தினரும் வித்தியா சம் பார்க்காமல் சகோதரர்கள் போல வே பழகி வருகிறார்கள். என்றாலும், ஒரு சிலரின் தவறான நடவடிக்கைக ளால் சிறிய சம்பவங்கள் நடந்து விடு கின்றன.

சமீபத்தில் தருமபுரி அருகே இரு சமூ கத்தினரிடையே ஏற்பட்ட மோதல் அவ்வப்போது தோன்றும் கரும்புள் ளிகளில் ஒன்று. அதை துடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை யும் அரசு எடுத்து வருகிறது. சாதி, மதம் இரண்டும் உணர்ச்சிப்பூர்வமானவை. இது போன்ற பிரச்சினைகளை லாவகமா க தீர்த்து வைக்க வேண்டும். இல்லை யென்றால் விபரீ தம் ஏற்படும்.

ஆனால் சாதி, மதம் தொடர்பான சிறிய பிரச்சினைகளை கூட சிலர் பெரியதாக்கி ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபடுகி றார்கள். இதில் அரசியலும் புகுந்து விடுகிறது. இதனால் பேசி தீர்க்கக் கூடிய சிறிய விஷயமும் ஊதி பெரிதாக்கப்படுகிறது. தேவையில்லா மல் சாதி-மத விவகாரம் விஸ்வரூம் எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

தமிழக மக்கள் எந்த விஷயத்தையும் கூர் மையாக கவனித்து முடிவு செய்பவர்கள். எனவே, சிறிய விவகாரங்களை எல்லாம் பெரிதாக்குவது இல்லை. பெரும்பாலும் பொறுமையையே கடைபிடிக்கிறார்கள். இது பொறுக்காமல் தூண்டிவிடும் முயற்சி யில் ஈடுபடுகிறவர்கள் கடுமையாக தண்டி க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தருமபுரியில் பற்றி எரிந்த சாதித்தீ இப்போதுதான் அணைந்திருக்கிறது. அது மீண்டும் பற்றி விடக் கூடாது என்ற கவலை அனைவருக்கும் இருக்கிற து. இந்த நிலையில் புதிய விவகாரம் ஒன்று உருவாகி உள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 19-ந்தேதி சேலத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். 1-ந்தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் வெள்ளையப்பன் கொல்லப்பட் டார். அதற்கு முன்பு பா.ஜனதா மூத்த நிர்வாகி எம்.ஆர். காந்தி குமரி மாவட்டத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிர் தப்பினார்.

இது தீவிரவாதிகளின் சதிச்செயல் 1982 முதல் இன்று வரை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பலர் திட்டமிட்டு கொலை செய்ய ப்பட்டிருக்கிறார்கள். ஏராளமானோர் தாக் குதலுக்குள்ளாகி இருக்கிறார்கள். இதன் பின்னணி யை கண்டுபிடித்து அதற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வே ண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். அந்த கட்சியின் முக்கிய தலைவர்களும், இந்து முன்னணி தலைவர் ராமகோபால ன் போன்றவர்களும் இதே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. வினர் போராட்டம் நடத்தினார்கள். வடமாநில தலைவர்களும் கண்ட னம் தெரிவித்தார்கள். கடையடைப்பின் போது பஸ் உடைப்புகளும் நட ந்தது. நிலமை மோசமாகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்ததால் மேலும் பிரச்சனை கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட கட்சி – சமய நிர்வாகிகள் குறி வைத் து தாக்கப்படுவதன் பின்னணியில் உண்மை யாகவே தீவிரவாதிகளின் கைவரிசை இருக்கி றதா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ள நிலையி ல், தலைமறைவாக உள் ள 4 சதிகாரர்களின் புகைப்படங்களை தமிழக போலீஸ் வெளியிட் டு துப்புக்கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள் ளது.

தீவிரவாதிகளின் சதி திட்டம் மூலம் இந்த தாக் குதல்கள் நடந்து இருந் தால், சதிகார கும்பலின் ஆணி வேரை கண்டுபிடித்து வென்னீர் ஊற்ற வே ண்டியது அவசியம்.

இதுபற்றி உண்மைகளை அறிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு ள்ளது.

தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுவது உண் மையானால், ஆரம்ப கட்டத்திலேயே அது தடுக்கப்பட வேண்டியது அவ சியம். இல்லையென்றால் அதுபோ ன்ற விபரீதம் தமிழ்நாட்டில் நடை பெறவில்லை என்பது தெளிவாக்கப் பட வேண்டும்.

இதுவரை நடந்த குறிப்பிட்ட கொலைகள் மற்றும் கொடூர தாக்குதல்க ளுக்கு காரணம் என்ன என்பது தெளிவாக்கப்பட வேண்டும். உண்மை குற்றவாளிகள் யார் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் நீதி யின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான முழு முயற்சியில் சிறப்பு புலனாய்வு போலீசார் ஈடுபடுவார்கள் என்ற நம்பி க்கை உள்ளது.

தமிழ்நாட்டில் சமய பூசல்கள் இல் லை என்ற நிலமையை மாற்றும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அது தடுக்கப்பட வேண்டும். சதி திட் டம் என் று கூறுபவர்களும் வீண்பழி என்று மறுப்பவர்களும் தற்போது அமைதி காக்க வேண்டியது அவசிய ம்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக எழுப்பப்படும் விடை தெரியாத கேள்வி களுக்கு விடை கண்டுபிடித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை புலனாய்வு அதிகாரிகளுக்கு உண்டு. விடை கிடைக்குமா?

 மாலைமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: