Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திவாலாகிப்போன அமெரிக்காவின் மிகபெரிய நகரம் – உலகையே அதிரவைத்த செய்தி இது!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் மிகப்பெரிய நகரம் டெட்ராட். 1960களிலும் 1970களிலும் அமெரிக்காவின் இரண்டாவது பணக்கார நகரம் இது. உலக கார்க ளின் தலைநகரமும்கூட. ஆனால், டெட்ராடை திவாலான நகரமாக அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் மனு செய்திருக்கிறார் அம்மாநில கவர்னர் ரிக் ஸ்னைடெர்.
 
இந்த நகரத்தில் இருந்த முன்னணி நிறுவன மான ஜெனரல் மோட்டா ர்ஸுக்கு நிதிப்பிரச் னை வந்தபோது அமெரிக்க அரசு உதவியது. அன்றைய அரசு, ‘எது ஜெனரல் மோட்டார்ஸு க்கு நல்லதோ அது அமெரிக்கா வுக்கும் நல்லது’ என்றது. அந்தளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரத்து க்குப் பலம் சேர்த்த இந்நகரம் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. வாழும் மனிதர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தில் இருந்து எழுபதாயிரமா கக் குறைந் திருக்கிறது. எழுபத்தெட்டாயி ரம் தொழிற்சாலைகள் மூடிக்கி டக்கின்றன.டெட்ராடை, திவால் நகரமாக மாநில கவர்னர் அறி விக்க வேண்டிய தன் காரணம், நகர நிர்வாகத்தின் கடன் சுமை 1800 கோடி டாலர் அளவுக்கு மூழ்கி இருப்பது தான். அமெரி க்க அரசியலமைப்பில் உள்ளா ட்சி நிர்வாகங்கள் மிக வலிமை யானவை. பெரிய தொழில் நகர ங்களில் வசூலிக்கப்படும் வரிகளிலிரு ந்தே அந்த நகரச் செலவுகள், மக்களின் சமூகப் பாதுகாப்பு, நலிந்தோர், சீனியர் சிட்டிசன் ஓய்வு ஊதியம்… போன்றவற்றை உள்ளாட்சி நிர்வா கம் செய்யும். தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இன்று டெட்ராட் நகருக்கு வரிவருமானம் இல்லை. எனவே, நிர்வாகத்தால் சம்பளம், ஓய்வு ஊதியம் எதுவும் கொடுக்க முடியவில்லை. அவ் வகையில் கொடுக்க வேண்டியது மட்டுமே 900 கோடி டாலர். மாநகராட்சிக்குச் சொந்த மான சொத்துகளை விற்க வேண்டுமானா ல் அந்த மாநகரம் திவால் என்று அறிவிக் கப்பட வேண்டும் என்பது அமெரிக்கச் சட்ட ம். அரசின் சொத்துகளை விற்று மேற்கண் ட செலவின ங்களைச் சமாளிக்க அனும திக்க வேண்டும் என மனு செய்திருந்தார் கவர்னர். அதில்ஒருடாலருக்கு ஒரு சென்ட் வீதம் கடன்காரர்களுக்கு (நூறில் ஒரு பங்கு) திருப்பியளிக்க வேண்டும் என் பது ஹைலைட் குறிப்பு. ஆனால், மிச்சிகன் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மேரி, ‘இந்த மனு சட்ட விரோதமானது. இது ஓய்வூதியர்களை மிரட்டும் நடவடிக்கை’ என்று சொல்லி மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார். மாநில நிர்வாகம், மேல் கோர்ட்டுக்கு முறையீடு செய்திருக்கி றது. அமெரிக்க வரலாற்றில் ஒரு மாநிலம் இப்படிக் கேட்பது இது தான் முதல் முறை.

ஏன் தொழிற்சாலைகள் மூடப்பட்டன? 

காரணம், 1994லும் 2004லும் அமெரிக்க அரசு வெளியிட்ட புதிய தொழிற் கொள்கைகள். அக்கொள்கை வட-அமெரிக்காவில் இயங்கு ம் எந்தத் தொழில் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை அண்டை நாடுகளில் தயாரித்து, அமெரிக்கத் தயாரிப் பு என்று சொல்லி உலகெங்கும் விற்கலாம் என்றது. மெக்ஸிக்கோ போ ன்ற நாடுகளில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கிளைகளைத் தொடங்கின. காரணம், அங்கு த யாரிப்புச் செலவுகள் மிகக் குறை வு. மெ ல்ல முழு உற்பத்தியை அங்கே மாற்றின. இதை அரசா ங்கம் தடுக்க வில்லை. இன்று அமெரிக்காவில் ஓடும் கார்களில் எழுபது சதவிகிதம் மெக்ஸிக்கோ வில் தயாராகி ரயிலில் அமெரிக் காவுக்கு வந்தவை என்கிறது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை. 
 
‘நகரத்தின் நிதிப் பிரச்னையைப் புரிந்து கொண்டு மக்கள், நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். சிக்கல்கள் சரியானவுடன் டெட்ராட் நகரை மீண்டும் எழுப்ப அரசு முடிந்தளவு உதவி செய்யும்’ என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று.
 
– ஆதித்யா

One Comment

Leave a Reply to vivekanandhan Cancel reply