Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கான சில எளிய அழகு குறிப்புகள்

தலை முடி வளர்ச்சிக்கு

• தேங்காய் எண்ணெய் வெதுவெதுப் பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிட ம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோ டு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

பொடுகு தொல்லை ஒழியவும் முடி உதிர்தவது நிற்கவும்

• எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் சுத்தமாக பொடுகின்றி இருக்கு ம். மேலும் கூந்தல் உதிர்தலும் தடை படும்.

தேவையில்லாத இடங்களில் வளர்ந்த முடிகளை நீக்குவதற்கு

• கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய் வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற் கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இத னை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக் கும். முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட் டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோள மாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும்

மிருதுவான சருமத்திற்கு

* முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண் ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத் து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக் கும்.

 * ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித் து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இரு க்கும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச் சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலை களை காய வைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.

* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண் டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மா வை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

* அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தட வினால் சருமத்தில் உள்ள எண் ணைப் பசை குறையும்.

* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற் றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊற விட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண் ட சருமம் காணா மல் போய்விடும்.

*சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, பதிலாக தேங்காய் எண் ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவி னால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துட ன், சுருக்கமின்றி இருக்கும்.

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?

* நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம். வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய் த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமி ச்சை வெள்ளரிக் காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்.

முகப்பொலிவிற்கு

* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீ ரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வே ண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவு டன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையு டன் முடியும் எளிதில் வரும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத் தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தி ல் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவி னால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத் தை நன்றாகப் பிசை ந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழு வினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத் தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இள மையுடனும் இருக்கும்.

* ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத் திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமி டம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மரு ந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.

உதடு உலர்ந்து விட்டதா?

* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து கா லை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விட வேண் டும். இரவில் வெண்ணையை சிறிதளவு ம் உதட் டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கி விடவும். இப்படிச் செய்து வந்தா ல் உதடு பழைய பொலிவுக்கு வந்துவிடும்.

கண்ணில் கருவளையம் மறைய…

* சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ் வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளை யம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அல்ல‍து  வெள்ளரிக்காயை கண்க ளில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோ ர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.

காது அழகை பராமரிப்பது எப்படி?

* உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழு த்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடை வில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்தி ற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலா ம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரி யாது.

பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெற‌

முகத்தை தினமும் 4 முதல் 5 முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத் தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

•முகத்தில் உள்ள பருக்களைபோக்குவதற்கு வாரம் ஒரு முறை பெண்கள் ஆவிப்பிடித்தால், பருக்க ள் வராமல் தடுக்கலாம்.

•  முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்க மாம் பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட் ரா பெர்ரி போன்றவை மிகவும் சிறந்த பழங்கள். கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, இந்த பழங்களை கொ ண்டு  மாஸ்க் போட்டு வந்தால் முகம் பொலி வுறும்.

விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: