Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிரவுக்கு முன் சில முன் யோசனைகள்

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண் களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒருநாள். அந்த நாளைப் பட படப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்…..

*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப் பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங் கள் விரும்புகிற இடத்தை அவர்களிடம் தெரிவி யுங்கள்.

* மனித உடலைப் பற்றிய, செக்ஸ் (உடலுறவு) பற்றிய புத்தகங்க ளைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்க ளுக்கு விளக்கம் கேட் கலாம்.

*முதலிரவு தினத்தன்று மாத விடாய் வராமலிருக்க மருத்து வரைக் கல ந்தா லோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

*அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலா வும் சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.

*முடிந்தால் இன்னொரு முறை குளியு ங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றிவிட்டு, புதி தாக அதே சமயம் ரொம் பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.

* உடலை உறுத்தாத உடையை அணி ந்து கொள்ளுங்கள்.

* நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்ட தும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.

* காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட்தடவிக் கொள்ளுங்க ள்.

* உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தட விக் கொள்ளுங்கள்.

* கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தை த் தவிர்க்கவும்.

* படுக்கை விரிப்பை இருமுறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்க ளோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

* முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவ ரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரி டம் தெரிவியுங்கள்.

* முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்று அவசியமில் லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொ ருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புக ளைப் பற்றிப் பேச அந்த இரவை உப யோகப்படுத்திக் கொள்ளலாம்.

* அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரை களையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீ ர்கள். ஒவ் வொருவரது அனுபவம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

* உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியு ங்கள்.

*முதல்முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்கலாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிக மாக்கத்தான் செய்யும்.

* வலியையும், வறட்சியையும் குறை க்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலா ம்.

* உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங் களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமை யலாம். போகப் போக அது சரியாகி விடும்.

நன்றி சுலாக்சி 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: