Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விடாமல் துரத்தும் த்ரிஷா – உற்சாகத்தில் சமந்தா

விடாமல் துரத்தும் த்ரிஷா 

விண்ணைத்தாண்டி வருவாயா” படம்மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவ ரி கொடுத்தவர் கெளதம் மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களையும் வாரிக்கொண்டார். ஆனால் அதன் பிறகு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந் ததால் த்ரிஷாவின் மார்க்கெட் தள்ளாட் டம் கண்டுள்ளது.

இந்த நிலையில், பூலோகம், என் றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். என்ற போதும், அப்படங்களின் மீது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை யாம். அதனால் மீண்டும் சூர்யாவைக்கொண்டு கெளதம்மேனன் துருவநட்சத்திரம் என் றொரு படம் எடுககி றார் என்றதும் அவரை விடாமல் பிடித்தார். ஆனால் அட்வான்ஸ் கைமாறும் நேரத்தில், சூர்யாவுக்கும், அவரு க்குமி டையே கதை விசயத்தில் விவகாரம் ஏற்பட்டதால், இப்போது அப்படம் டிராப் செய்யப்பட்டு விட்ட தாக கூறப்படுகிறது.

அதேசமயம், சரத்குமாரை நாயகனாக வைத்து ஒரு ஆக்சன் பட த்தை கெளதம்மேனன் இயக்கு கிறார் என்ற செய்தியும் இப்போது உறுதிப்படுத் தப்பட்டள்ளது. மீண்டும் சிம்புவை வைத்து கவுதம் ஒருபடம் இயக்க போவதாக வும் தவகல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த படங்களிலாவது புகுந்து விடலாம் என்று கெளதமை விடாமல் துரத்தி வருகிறாராம் த்ரி ஷா. இதுவும் அவரது சொந்த படம் என்பதால், த்ரிஷாவுக்கு அந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உற்சாகத்தில் சமந்தா 

நான் ஈ படத்திற்கு பிறகு தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சமந் தா, இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது உறுதி யாகி உள்ளதால் உச்சக்கட்ட சந்தோசத் தில் இருக்கிறார்.

தற்போது தெலுங்கிலும் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் சமந்தா வை சில கோலிவுட் இயக்குனர்கள் இரண் டாம் தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர அழைத்தபோது, ஏற்கனவே மணிரத்ன த்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி வெளியேறிய நான், அடுத்து மீண்டும் தமிழில் முன்னணி ஹீரோக் களின் படவாய்ப்பு என்றால் மட்டுமே வருவேன் என்று அந்த படங்களை ஏற்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில்தான், லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா வுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் இதற்காக தான் இத்தனை நாளும் காத்திருந் தேன் என்பது போல் உடனே அப்படத்தில் கமிட்டானார் சமந்தா.

ஆனால், கெளதம்மேனனின் படத்தில் ஏற்பட்ட கதை குழப்பம் போன்று லிங்குசாமி இயக்கும் படத்தின் கதையும், சீமான் இயக்கயிருக்கும் பகலவன் படத்தில் கதை என்று சர்ச்சைகள் எழுந்ததால், அந்த படம் உடனடியாக தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியானது.

ஆனால், இப்போது அப்படத்தை ஆகஸ்ட் 21ந்தேதி அன்று கண்டிப்பாக தொடங்க யிருப்பதாக லிங்குசாமி தரப்பு செய்தி வெளி யாகியுள்ளது. இதையடுத்து உற்சாகமடை ந்துள்ள சமந்தா, சூர்யாவுடன் நடிக்க வேண் டும் என்பதற்காக ஏற்கனவே அதே தேதி யில் இன்னொரு தெலுங்கு படததில் நடிக்க கால்சீட் கொடுத்திருந்த போதும் அந்த படா திபதியிடம் பேசி சரி கட்டி, சூர்யவுடன நடி க்கும் நாளுக்காக உச்ச கட்ட சந்தோசத்தில் காத்திருக்கிறாராம்.

Leave a Reply