Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் சாகவில்லை, நான் உயிரோடுதான் இருக்கிறேன்!” – நடிகை கனகா

புற்றுநோய் பாதிப்பு காரணமாக நடிகை கனகா மரணம் அடைந்த தாகசெய்திகள் வெளியானநிலையில் அவர து சித்தப்பா, கனகா உயிரோடு இருப்பதாக கூறினார். அதனைத்தொடர்ந்து நடிகை கனகாவும், தனக்கு எந்த வியாதியும் இல்லை, தான் உயிரோடு இருப்ப தாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் பேட்டியளித்தார்.

 ‘‘கரகாட்டக்காரன்’’ படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மறைந்த நடிகை தேவிகாவின் மகளான இவர் தமிழில் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து ள்ளார். இதேபோல் மலையாளத்தில் உள்ள அத் தனை டாப் ஹீரோ க்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்துள் ளா ர்.

அம்மா தேவிகாவின் மரணத்திற்குபிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. கணவருடன் மனகசப்பு, ஆவி அமுதாவுடன் பிரச்னை என்று கனகா வாழ்வில் பிரச்னை கள் வலுத்தன.‌ மேலும் சொ த்துக்காக தன து தந்தையும் பிரச்னை செய்வதாக ஏற்கன வே செய்திகள் வெளியாகின. சமீபகாலமா க கனகா எங்கிருக்கிறார் என்ற தகவலே இருந்தாமல் இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனகா கடுமையா ன புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதா கவும், நோய் முற்றி ஆபாயகட்டத்தில் மர ணத்துடன் போராடி வரு வதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் இன்று(ஜூலை 30ம் தேதி) மதி யத்திற்கு மேல் அவர் மரணம் அடைந்துவிட் டதாக செய்திகள் வெளியாகின. இதனால் கோலிவுட் முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. ஆ னால் அதை உறுதிப்படு த்தமுடியாமல் இருந் தது. இந்த செய்தி வெளியான சில மணி நேர ங்களில் கனகாவின் சித்தப்பா, கனகா இறக்க வில்லை, அவருடன் உயிருடன் தான் இருக் கிறார் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து நடிகை கனகாவும் தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினார். சென்னை, ராஜா அண் ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கனகா , யாரோ தன்னை பற்றி தவறான தகவல்க ளை கொடுத்துவிட்டதாகவும், இப்போது உங்கள் முன் நான் உயிரோடுதான் இருக் கிறேன். தனக்கு எந்த வியாதியும் இல் லை, கேரளாவில் நான் சிகிச்சையும் பெற வில்லை ‌என்று தெளிவுபடுத்தியுள் ளார்.

கனகாவின் பேட்டியை தொடர்ந்து அவ ரை பற்றி பொய்யான செய்திகளுக்கு அவரே நேரில் தோன்றி முற் றுப் புள்ளி வைத்துள்ளார்.

— தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: