Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், இளமையுடன் இருக்க நமது பாரம்பரிய அழகு சாதனங்கள்

இந்தியாவில் கிடைக்கும் பாரம்பரிய மூலி கைப்பொருட்கள் அழகை அதிகரித்து இள மையை தக்கவைக்கும் என்று சித்தர்களும், அறிவியல் அறிஞர்களும் நிரூபித்துள்ளனர். நம் நாட்டில் கிடைக்கு ம், வேம்பும் துளசியும், மஞ்சளும்தான் இன்றைக்கும் பெரும்பாலா ன அழகு சாதனப்பொருட்களில் இடம்பெறுகின் றன. அவற்றை பயன்படுத்தி இயற்கையான முறையில் அழகுபடுத்தலாம் என்பதை தெரிந் துகொள்ளலாம்.

இயற்கையின் கொடை வேம்பு
.
இந்தியா முழுவதும் வேப்பமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி இதில் உள்ளதால் இயற்கை மருத்து வர் என்றே அழைப்படுகிறது. அழகு சாதன கிரீம்களி லும், பருவை போக்கும் கிரீம்களிலும் பயன் படுத்தப்படுகிறது. வேப்ப எண்ணெய் முகத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் மிகச்சிறந்த பொரு ளாக திகழ்கிறது.
.
தெய்வீக மூலிகை துளசி
.
பெரும்பாலான வீடுகளின் கொல்லைப்புறங்களி ல் துளசிச்செடியை வைத்திருப்பார்கள். இது இய ற்கையான அழகு சாதனப் பொருளாகவும் பயன் படுகிறது. சில துளசி இலைகளை பறித்து அதனு டன் சில துளிகள் பால்விட்டு அரைத்து முகத்தில் பரு உள்ள இடங்களில் அப்ளை செய்தால் பரு இருந்த இடம் காணாமல் போய்விடும் வடுக்களு ம் மறைந்து விடும்.
.
மஞ்சளும், சந்தனமும்
.
மஞ்சள் இந்திய சமையலில் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அது மிகச்சிறந்த அழகுசாதனப் பொ ருளாகவும் பயன்படுகிறது. மண நாளில் பெண்ணின் கண்ணக் கது ப்பிலும், கைகளிலும் தோளிலும் மஞ்சளை பூசி குளிக்க வைப்பார் க ள். இதனால் பெண்ணின் முகம் மெருகேறும்.
.
அதேபோல் கண்ணிற்கு கீழே ஏற்ப டும் கருவளையத்தையும், சுருக் கத்தையும் மஞ்சள் போக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். ஒரு சிட்டிகை மஞ்சளுடன் சில துளிகள் பால் சேர்த்து கண்ணின் கருவளை யம் உள்ள பகுதிகளில் பூசினால் கரு வளையத்திற்கு பை சொல்லிவிடலா ம்.
.
முகத்தில் சந்தனம் பூசுவதன் மூல ம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது அலர்ஜி, தோல் நோய்களைப் போ க்கும் அருமருந்தாக செயல்படுகி றது.
.
குங்குமப்பூவும் தேனும்
.
குங்குமப்பூ சிறந்த அழகு சாதனப்பொருளாகத் திகழ்கிறது. சருமத் தின் நிறத்தையே மாற்றும் சர்வ வல்லமை படைத்தது. சருமத்தில் பாக்டீ ரியா நோய் தாக்குதல் இருந்தாலும் இதனை போக்கிவிடும்.
.
தேன் சருமத்தின் அழகை தக்கவைக்கும். இது இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும் பேஸ் பேக் போடுவதில் பயன்படுகிறது. பாலுட ன் தேன் கலந்து பேக் போடுவதன்மூலம் சருமம் பொலிவுறும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென் ஸ் சரும அழகை பாதுகாக்கிறது. அழகு சாதன ப்பொருட்களில் தேன் கண்டிப்பாக இடம் பெற்றிரு க்கும்.
.
சிகைக்காய், நெல்லிக்காய்
.
கூந்தல் அழகை பராமரிப்பதி ல் சிகைக்காய்க்கு முக்கிய பங்குண்டு. இதில் உள்ள இய ற்கை பொ ருட்கள் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பாதுகா க்கிறது.
.
நெல்லிக்காய் இயற்கை மரு ந்துப் பொருளாகப் பயன்படுகி றது. இதில் உள்ள வைட்ட மின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக்காய், சிகை க்காய், வேப்பிலை கலந்த பொடி கூந்தல் வளர்ச்சிக்கும், அழகிற்கு ம் சிறந்த பொருளாக உள்ள து.
.
முல்தானி மெட்டி
.
பூமியில் கிடைக்கும் இயற்கை கிளன் சர் முல்தானி மெட்டி. சிறந்த ஸ்கிரப்ப ராக பயன்படுகிறது. சருமத்தை பாது காக்க தக்காளி சாறுடன் முல்தானி மெட்டியை கலந்து பேஸ்பேக் ஆக போ டலாம். இந்திய உணவுப்பொருளில் தயிர் தினசரி பயன்படுகிறது. இது இளமையை தக்கவைக்கும் இய ற்கை அழகு சாதனப் பொருளாகும்.
கடலைமாவு இந்திய சமையலறை யில் கிடைக்கும் முக்கிய பொருள். இது பாரம்பரியமாக குளியல்பொரு ளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ள து. இன்றைக்கும் பெரும்பாலானோ ர் சரும பாதுகாப்பிற்காக கடலை மாவினை பயன்படுத்துகின்றனர்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply