Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மங்கையருக்கு, வற்றாத அழகை வாரி வழங்கும் மல்லிகை மலர்!

மலர்களிலேயே அழகான மலர் மல்லிகைதான். தன் கொள்ளை அழகை நமக்கும் அள்ளித்தரும் குணம் கொ ண்ட மல்லிகையை கொடை வள்ளல் என்றே அழைக்கலாம்! வாசம் தரும் மல்லிகைப் பூ, வற்றாத வனப்பை வாரிவழங்குவது எப்படி யென்று பார்ப்போமா..

சிலருக்கு கன்னங்களில் கருமையும், மூக்கி ன் மேல் கரும்புள்ளிகளும் தோன்றி, முக அழகைக் குலைக்கும்.

ஒருகப் உலர்ந்த மல்லிகைப்பூவுடன், 4 லவங்கத்தைச்சேர்த்து அரை த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ் பூன் சந்தனப்பொடி சேர்த்து இவை கலக்கும் அளவுக்கு சுடு தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். முகம், மூக்கு, கன்னப் பகுதிகளில் இந்த பேஸ்ட்டால் ‘பேக்’ போடுங்கள். சிறி துநேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். கருமையும், கரும் புள்ளியும் காணாமல் போ வதுடன்.. பருக்களும் நீங்கிவிடும்.

சற்றுமுன் மலர்ந்த மலர் போல உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டு மா?

ஓட்ஸ் பவுடர் – அரை கப், பச்சைக் கற்பூரம் – 2 சிட்டிகை, மல்லிகைப் பூ சாறு – அரை கப் (ஃப்ரெஷ் மல்லி கைப் பூவை தண்ணீர் சேர்க்காம ல் மிக்ஸி யில் அரைத்து வடிகட்ட வும்).. இவை கலக்கும் அளவுக்கு வெந்நீரைக் கல ந்து, முகத்தில் பூசி 15நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் ஒளி வீசி மினு மினுக்கு ம்.

ஒரு டீஸ்பூன் அரைத்த சந்தனத்துடன் மல்லிகைச் சாறு கலந்து பூசி வந்தால்.. வெயிலால் ஏற்படும் கருமை நீங்கும். பெண்கள் சிறிது கஸ்தூரி மஞ்சளையும் கலந்து கொள்ளலாம்.

தோலின் மேற்புறம் உள்ள இறந்த செல்களை அகற்றி, புத்துணர்ச்சி தருவதிலும் மல்லிகை க்கு நிகர் மல்லிகைதான்.

உலர்ந்த மல்லிகை – ஒரு கப், சர்க்கரை – 2 டீஸ் பூன், தோல் சீவிய ஆப்பிள்-4 துண்டுகள்.. இவற் றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளு ங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேயுங்கள். பின்னர், ஒரு கைப்பிடி மல்லிகை ப் பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வை த்து ஆற வைத்த தண்ணீரால் முகத்தைக் கழு வினால்.. இறந்த செல்கள் பறந்து, இரட்டிப்பு பளபளப்பு முகத்தை ஆட்சி செய்யும்.

அடிப்படையில் குளிர்ச்சியைத் தரும் தாவரமான மல்லிகையில் கண் மையும் செய்யலாம்.

ஒரு விளக்கில் விளக்கெண்ணெ யை ஊற்றி, விளக்கின் பின்னால் இருக்கும் (கரி படியக்கூடிய பகுதி) ஸ்டாண்ட் பகுதியில் அரைத்த சந் தனத்தை தடவுங்கள். பிறகு விளக் கை ஏற்றி, ஸ்டாண்ட் பகுதியில் கரி படிந்ததும் அந்தக் கரியை வழி த்து, அதில் மல்லிகைப் பூ சாறு 5 (அ) 6 சொட்டுக்கள் கலந்து கொள்ளுங்கள். இந்த மையால் கிடைக்கும் குளிர்ச்சி, பார்வை யைப் பிரகாசமாக்கும்!

பிசுக்கு, பொடுகு, நுனி பிளவு போன்ற ‘தலை’ யாய பிரச்னைக்கும் தீர்வுதருகிறது மல்லிகை.

உதிரி மல்லிகையை வாங்கி வெயிலில் உலர் த்தி, அரைத்து வைத் துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் 2 டீஸ்பூனுடன், 2 டீஸ்பூன் வெந்தயத் தூள் கலந்து வாரம் இருமுறை தேய்த்துக் குளி யுங்கள். மேற்கண்ட பிரச்னைகளைக் களைவதுடன், கூந்தலை மிருதுவாக்கி.. செழிப் பாக வளரவும் செய்கிறது இந்த மல்லிகை பவுடர்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்ப வர்கள்.. கால் கிலோ நல்லெண்ணெயைக் காய் ச்சி, அதில் 2 கப் ஃப்ரெஷ் மல்லிகைப் பூவைபோ ட்டு வையுங்கள். இந்த எண்ணெயைத் தலைக் குத் தேய்த்துக் குளிப்பதால்.. தலை குளிர்ச்சியா க இருப்பதோடு, கூந்தலும் மண மணக்கும்.

உச்சிமுதல் உள்ளங்கால் வரை உற்சாகமூட்டும் மல்லிகைத் தைலமும், குளியல் பவுடரும் தயா ரிப்பது எப்படி தெரியுமா?

தைலம் தயாரிக்க..

20 கிராம் உலர்ந்த மல்லிகைப் பூவுடன், மனோ ரஞ்சிதம், ரோஜா, மகிழம்பூ, ஆவாரம் பூ.. இவற் றை தலா 10 கிராம் கலந்து அரை கிலோ தேங் காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சுங்கள். வடி கட்ட வேண்டாம். அடிதங்கும் பூவிதழ்களை விட்டு விட்டு, மேலோட்டமாக எண்ணெயை மட்டும் ஊற்றி, உடலில் தடவி கால்மணி நேரம் ஊறவிடுங்கள். மல்லிகை, தோலில் உள்ள சுரு க்கங்களைப்போக்கும். ரோஜா, மகிழம்பூ, மனோ ரஞ்சிதம், ஆவாரம் பூ.. இவையெல் லாம் உடலுக்கு பொன்னிறத்தையும் புத்துணர்ச்சியை யும் கொடுக் கும்.

குளியல் பவுடர் தயாரிக்க..

உலர்ந்த மல்லிகைப் பூ 100 கிராம், புங்கங் காய் தோல்-50 கிராம், ஓமம்-10 கிராம், தவனம், ரோஜா இதழ், மரிக் கொழுந்து ஆகிய வை தலா 50 கிராம் சேர்த்து பவுடராக்கு ங்கள்.

வாரம் இரு முறை இப்படி குளிப்பதால் குளிர்ச்சியும் வாசனையும் சேர்ந்து குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்கும்.

மல்லிகைப் பூவின் மணமே மருந்துதான் என் பது சித்த ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட் ட நிஜம். மனக்கலக்கம் நீங்கி நிம்மதி பிறக்கச் செய்யும்சக்தி மல்லிகையின் மணத்துக்குண்டு .

தாய்ப்பால்

குழந்தைகள் சரியாக தாய்ப்பால் குடிக்கவில் லையெனில் தாய்மார் களுக்கு மார்பில் பால் கட்டிவிடும். மல்லிகைப் பூவை மார்பில் வைத் து கச்சைக் கட்டிக் கொண்டால்.. பால் கட்டியது கரையும். (இப்படிச் செய்யும்போது குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது.)

அடிபட்டு வீங்கிய இடத்தில் மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மல்லிகைப் பூ இலையை வாயில் போட்டு மெல் வதால் வாய்ப்புண் நீங்கும்.

காதில் ஏற்படும் வலி, குத்தல், சீழ் போன்ற வற்றுக்கு மல்லி கை இலை எண்ணெயை 2 சொட்டு விட்டால் சரியாகிவிடும்.

கால்ஆணியால் அவதிப்படுபவர்கள் மல்லி கை இலையின் சாறெடுத்து காலில் தடவி வந்தால் வலி குறைந்து குணமாகும்.

மல்லிகை இலையை நெய்யில் வறுத்து, ஒரு துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொ டுத் தால் தொண்டை புண், எரிச்சல் உடனடி யாக நீங்கும்.

இது விதை 2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல !

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: