Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: சிவப்பான மென்மையான உதடுகளுக்கு

உதடுகளை சரியாக பராமரிக்கா விட்டால் தோல் உரிந்தும் வறண் டும் காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடு களை  பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களு க்கு உதடுகளை வெதுவெது ப்பாக  மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் மென்மையாக  மாறும். உதடுக ளை கடிக்கும் பழக்கம் கொண்ட சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு வறண்டு நிறம் மாறி காணப்படும். எனவே  உதட்டை கடிக்கும் பழக்கத்தை தவி ர்க்க வேண்டும். 

லிப்ஸ்டிக் போடும்போது மிக கவ னம் தேவை. சக தோழிகள் உப யோகிக்கும் லிப்ஸ்டிக்கை பகிர்ந் து போடக்கூடாது. அவ்வாறு உப யோகித்தால் மற்ற  பெண்களிடம் இருந்து ஏதாவது தொற்று கிருமி கள் பரவும். தரமான லிப்ஸ்டிக் கை பயன்படுத்த வேண்டும். தர மில்லாத லிப்ஸ்டிக்கை பயன் படுத்தினால் உதடுகள் கருப்பாக மாறும். 

லிப்ஸ்டிக் போட பயன்படுத்தும் பிரஸ்ஷை உடனுக்குடன் சுத்தம் செய் ய வேண்டும். சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் தொற்று கிருமிகள் பரவ  வாய்ப்புள்ளது. இரவு தூங்க செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டும். லிப்ஸ்டிக்கை நீக்க தேங்காய்  எண்ணெயை உபயோகிக்க லாம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அவ்வாறு செய் தால் உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப்பிரஸால்  மட்டுமே லிப்ஸ்டிக் போடவேண்டும். லிப்ஸ்டிக் போடும் முன்பு உதட்டி ல் ஐஸ்கட்டியை ஒற்றி எடுத்தால் நீண்டநேரத்திற்கு அப்படியே இருக்கு ம்.  முட்டையின்வெள்ளை கருவை தனியாக எடுத்து அத்துடன் தேன் கல ந்து உதட்டில் தடவி வந்தால் அழகு பெறும். 

தினமும் நெய் அல்லது வெண்ணெ யை தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கி உதடுகள் வழவழப்பாக மாறும். முட்டை கருவின் வெள்ளை கரு வுடன்  அரை கரண்டி பாதாம் பவுடர் சிறிது பாலாடை சேர்த்து உதட்டில் தடவி வந்தால் வறண்ட உதடுகள் குணமாகும். இரண்டு டீஸ்பூன் ஆலிவ்  எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும் பன்னீரும் கலந்து உதட்டில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும் மென்மையா கவும் மாறும். 

கொத்தமல்லி சாற்றை உதட்டில் தின மும் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போட்ட து போலவே இயற்கையிலே சிவப்பு நிற மாக இருக்கும். லிப்ஸ் டிக்  உபயோகித்து பழக்கம் இல்லாதவர்கள் லிப் சால்வ் பயன்படுத்தலாம். அதே போல பல வண்ண நிறங்களில் உள்ள வாசலினையும் உபயோகிக்கலாம்.  லிப் ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவும் பழக்கம் பல பெண்களுக்கு உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். லிப் ஸ்டிக் மேல் தான்  லிப் கிளாஸ் தடவ வேண் டும். வைட்டமின் பி குறைபாடு உள்ளவர் களுக்கு உதட்டின் ஒரத்தில் புண்கள் வரும். அதற்கு மருத்து வரை அணுகி சிகிச்சை  எடுத்துக்கொண்டால் உதடு சரியாகிவிடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply