Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இது நியாயந்தானா? சிந்தியுங்கள்!

தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் – பல்வகைப்பட்ட நூல் களை. பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், பல்வகை ப் புராண நூல்கள் – வால்மீகி இராமா யணம், இதர இராமாயணங்கள் – பாகவத ம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் – இலக்கியங்கள் முதற் கொண்டு பலவற்றைப் படிப்பதோடு– அடிக் கோடிட்டு, அதனைப் பற்றிய ஆய்வினையும், கட்டுரைகளாக வும், சீரிய விமர்சனங்களாகவும் கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைக ளை க்கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிடமுடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்!

1930-களிலும் அதற்கு முன்னரும் அவர்தம் பகுத்தறிவு நூற்பதிப்பு கழகத்திலும் சரி, குடிஅரசுப் பதிப்பகத்திலும் சரி, தான் எழுதிய ஒப்பற்ற சுயசிந்தனை நூல்களான பெண் ஏன் அடிமை ஆனாள்? பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம் உரைத் தொகுப்பு நூலான தத்துவ விளக்கம் – இராமாயண பாத்திரங்கள் – இராமாயண குறிப்புகள், கடவுள், மதம் பற்றிய பல்வேறு ஆய்வுகள் ஒருபுறம். பெண் ஏன் அடிமையானாள்? மறுபுறம்!

இன்னொருபுறம் வெளிநாட்டுச் சிந்தனையாளர்களான அமெரிக்க இங்க ர்சால், கருத்துரைத் தொகுப்புகள், பெர்ட்ராண்ட் ரசல், லெனின் கருத்து கள், லெனினும் மதமும் பெர்னாட்ஷாவின் உபதேசம், இன்னும் பலப் பல; அக்காலத் தில் அந்த ஆங்கில நூல்களை அனுமதி பெற்று தமிழில் மொழி பெயர்த்து மலிவு விலைக்கு, நாலணா, எட்டணா (அதா வது கால் ரூபாய், அரை ரூபாய்) விலை யில் வெளியிட்டுப் பரப்பினார்கள் என்ப து எவராலும் நினைக்க முடியாதது அல்லவா?

தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தம் என்பது மொழி வளர்ச்சிக்கு எவ்வ ளவு தேவையான ஒன்று!

பல்வேறு தமிழ் மொழி அறிஞர்கள், பன்மொழிப் புலவர்கள் செய்யாத தை – பெரியார் அவர்கள் கல்லூரி, பல்கலைக் கழகத்திற்கே செல்லாத படிப்பற்றவர் என்று கூறப்பட்ட தந்தை பெரியார் கொணர்ந்த எழுத்துப் புரட்சிதான் – இன்றைய கணினி புரட்சி யுகத்தில் மிகவும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக் கியமாக உதவக் கூடியதாகி உள்ளதே!

247 எழுத்துகளைச் சுருக்கி, தமிழை, ஆங்கிலம்போல் 26 எழுத்துகளாகக் குறுக்க இயலாவிட்டாலும், 32, 34-க்குள் நிறுத்தினால் தமிழ்மொழி எளிதில் உலகம் முழுவதும் பரவிடுமே என்று காட்டியதோடு, அதை, எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது, தனது விடுதலை நாளேட்டில் குடி அரசு ஏட்டில் 1935 முதலே பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலை நாளேட்டிற்கு லை என்பது – முந்தைய ல என்ற யானைக் கொம்பு போன்று போடாமல், லை என்று எழுதலாம். கை என்பதுபோல என்று காட்டி, இதனால் எழுத்துகள் எண் ணிக்கை குறையும்; எளிதில் எழுதிப் படிக்க ஏதுவாகும் என்றார்.

புலவர்கள், பண்டிதர்கள் இதை எதிர்த் தார்கள்; ஆகா! பழைமையை மாற்றினால் மொழி – இலக்கணம் என்னாவது என்றார்கள்.

அப்படியா ஓலைச் சுவடியையா இப்போது நாம் பயன்படுத்துகின்றோம் ? அச்சிட்ட காகிதத்தைத்தானே தேடுகி றோம் என்றார் பெரியார்!

அறிவு, வளர்ச்சியை நோக்கித்தான் செல்லவேண்டுமே தவிர, பழைமை என்பதற்காக தீவட்டியையும், அகல் விளக்கையும் இன்று பயன்படுத் திட முடியுமா? என்று பொறிதட்டக் கேள்வி போட்டு சிந்திக்க வைத்தா ர்கள்.

அவர் நடத்திய ஏடுகளில் இந்த எழுத்துச் சீர்திருத்தம் இடம்பெறுவதில் பிடிவாதமாக இருந்தார்கள்.

விளைவு, பெரியாரே வெற்றி கண்டார்! 1977 இல் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல மைச்சராக வந்தபொழுது, பெரியார் நூற் றாண்டு விழாவை அரசு ஓராண்டு முழு வதும் கொண்டாடிய விழாவாக அமைத் த போது, (அரசாணை 449 நாள்:19.10.1978) இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை அரசு ஆணையாகவே வெளியிட்டார்.

இதன் காரணமாக, சிங்கப்பூர் நாட் டின் அரசு, இந்தத் தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்தை ஏற்றுப் பின்பற்றி வருகிறது.

அதனையொட்டியே மலேசிய அரசும் இந்தத் தமிழ் எழுத்துச் சீர்திருத்த த்தை வெற்றியோடு பின்பற்றி வருகிறது!

தந்தை பெரியார் அவர்கள் எந்தச் செயலையும் அதன் வேர்மூலம் என்னவென்றே ஆய்வு செய்து மற்றவர்க ளோடு விவாதம் செய்வார் கள்.

கைவல்ய சாமியார் என்று அழைக் கப்பட்ட (உண்மைப் பெயர் பொன்னு சாமி) சுயசிந்தனையும், சீரிய ஆய்வாளருமான கைவல்யம் அவர்களை குடிஅரசு தனது படை வீர எழுத்துத் தளபதிகளில் முக்கியமாக வைத்தி ருந்தாரே!

சிந்தனைச் சிற்பி, ம.சிங்காரவேல ரின் பொதுவுடைமைச் சித்தாந்தங் கள், அறிவியல் மனப்பான்மையைப் பரப்பு தல், மூட நம்பிக்கைகளைச் சாடுதல் பற்றிய கட்டுரைகளைப் பதிப்பித்த தோடு, அவற்றைச் சிறு வெளியீடுகளாக வெளியிட்டுப் பரப்பி, புத்தகங் களை அறிவாயுதங் களாக ஆக்கி மகிழ்ந்த பகுத்தறிவுப் பாசறை பதிப் பாளர் புத்தகராக திகழ்ந்தார்களே!

இந்த வெளிச்சத்தை மறைத்துத் தான் இன்னும் பெரியார் அவர்களை சிலர் குறுகிய சிமிழுக்குள் அடைத்து மகிழ்கின்றனர்!

இது நியாயந்தானா? சிந்தியுங்கள்!

24.4.13 – புத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! -2 (பெரியார் தளம்)

———————- கி.வீரமணி- அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் பகுதி-”விடுதலை” 24-4-2013

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: