Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி கொடுத்த‍ திகில் சம்பவம்! – அவரது முழு பேட்டி – வீடியோ

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் – அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட்களுக்கும்முன்பாக நடிகை கனகா, புற்று நோயால் பாதிக்கப் பட்டிருப்ப‍தாகவும், அவர் ஆலப்புழையில் உள்ள‍ ஒரு மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்க‍ப்படிருப்ப தாகவும் செய்திகள் வந்தது. அதை விதை2விருட்சம் இணையத்தி லும் வெளியிட்டிருந்தோம். மேலும், நேற்று பிற்பகலில் நோயின் தீவிரம் காரணமாகவும் சிகிச்சை பலனின்றியும், அவர் இறந்து விட்டார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது.ஆனால்,  அவர், நேற்று மாலை செய்தி யாளர்கள் முன்னிலையில் தோன்றி, சிரித்துக் கொண்டே பேட்டி அளித்து அனைவரு க்கும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளார். அவரது பேட்டியில் தான் உயிருடன் இருப்ப‍தாகவும், தனக்கு எந்தவிதமான வியாதியும் இல்லை என்றுகூறி சிரித்தார். இதோ அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோ .

எது எப்ப‍டியோ, இத்தனை நாட்களாக நடிகை கனகா எங்கிருக்கி றார் என்ற மர்மம் இதன் மூலம் விலகி, அவர் வெளியுலகிற்கு வந்து ள்ளார். மீண்டும் அவரது வாழ்வில் முன்னேற்ற‍ங்களையும், நீண்ட ஆயுளையும் பெற்று வாழ, விதை2விருட்சம்  இணையம் சார்பாகவு ம், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: