Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சர்ச்சையை கிளப்பிய சொர்ணமால்யா! – போர்கொடி தூக்கும் மகளிர் அமைப்புகள்

சென்னையில் நடந்த மகளிர்கல்லூரி நாட்டிய விழா ஒன்றில் நடிகை சொர்ண மால்யா பங்கேற்றார்.  அப் போது அவர் பேசுகையில், தேவ தாசி கள், கடவுளின் மனைவியர் என்ற முறையில் புனிதர் களாக திகழ்ந் தனர். தேவதாசி முறையை அரசியல் லாபம் கருதியே ஒழித்த னர். தேவ தாசி தொழில் என்பது கடவுளுக்கான அர்ப்பணிப்பு. தேவ தாசிகள் அத னை மன முன்வந்து செய்தனர். நாட்டியத்தில் ஈடுபாடு உள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன் வந்து தேவதாசிகளானார்கள் என்று கூறினார்.

சொர்ண மால்யாவின் இந்த‌ பேச்சு சர்ச்சை யையும் கடுமையான எதிர்ப்பையையும் கிளப்பியுள்ளது.

ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவியும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மகளிர் நிர்வாக குழு செயலா ளருமான கல்பனா இதுகுறித்து வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பழைய காலங்களில் தேவதாசிகளை ஜமீன் தார்களும் உயர்சாதியினரும் தங்கள் இச்சைக்கு பயன்படுத்தி அடிமைப்படுத்தி வைத்து இருந்தனர். பெண்கள் உரிமைக்கு எதிரான அடிமைத்தனமாகவே அது கருதப் பட்டது. எனவே தான் பெண்கள் நலனில் அக்கறை கொண்டோரின் முய ற்சியால் தேவதாசிகள் முறை ஒழிக்கப்பட்டது. தேவதாசிகள் தொழிலுக் கு வக்காலத்து வாங்குவது போல் சொர்ணமால்யா இப்போது பேசுவது கண்டிக் கத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

One Comment

  • சுந்தர்

    ஒரு தேவதாசி இன்னொரு தேவதாசிக்கு வக்காலத்து வாங்குவது தப்பாக தெரியவில்லையே. இதை போய் பெரிதாக எடுத்துக் கொள்ளலாமா?

Leave a Reply