Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – மாசு மருவற்ற‍ சருமத்திற்கு . . .

அழகான சருமத்தைப் பற்றி விவரிக்கும் போது ‘மாசு மரு’வற்ற சருமம் என்றுதான் சொல்கி றோம். மாசும் மருவும் சருமத்தின் பொலி வை மட்டுமின்றி, ஆரோக்கியத் தையும் கெடுக்கும் விஷயங்கள். மாசும் மருவும் ‘மாற்றான்’ பட இரட்டை யர்கள் மாதிரி என்றுகூட வைத்துக் கொள்ளலாம். ஒன்றிருந்தால், இன்னொன் றும் கட்டாயம் இருக்கும். மாசினால் உண்டா கக் கூடிய மருவைப் பற்றி அத்தனை தகவல்க ளையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ‘கேர் அண்ட் கியூர்’ அழகுக்கலை நிபுணரும் அரோ மா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். கூடவே மரு நீக்கும் சிகிச்சைகளையும் வராமல் தவிர்க்க ஆலோசனைக ளையும் கூட சொல்கிறார்.

மரு என்றால் என்ன?

மரு என்பது, சருமத்தைத் தாண்டிய ஒருவித வளர்ச்சி. முதலில் ‘ஃப்ரெக்கிள்’ எனப்படுகிற மச்சம் மாதிரியான சிறு புள்ளியாகத்தோன்று ம். இயல்பிலேயே சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் சுரப்பவர்களுக்கு மருக்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். சருமத்தில் கிரீம் போன்ற எதையும் தடவாமல் வெளியே செல் லும் போது, சுற்றுச்சூழலில் உள்ள தூசுகள், சருமத் துவாரங்களை அடைத்து, கரும்புள்ளி கள் தோன்றும். அதில் பாக்டீரியா தொற்றும் சேர்ந்து கொண்டு, சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸிலிருந்து மருவாக வெ ளிக் கிளம்பும். தோள்பட்டை, கழுத்து, கன்ன ங்கள், அக்குள், முதுகு, மார்பகங்கள், வயிறு, தொடை என மருக்க ள் எங்கு வேண்டு மானாலும் வரலாம். ஆனால், ஒரு இடத்தில், ஒரே ஒரு மரு வந்தாலும், அது சருமத்தின் பல இடங்களு க்கும் கட்டாயம் பரவும். 

ஏன் வருகிறது?

மருவுக்கான அடிப்படை காரணம் சுத்தமின் மை. சருமத்தை சரியாக சுத்தம் செய்யாமல், தேய்த்துக் குளிக்காவிட்டால் மரு வரும். தொற் றின் காரணமாகவும் வரும். சிலருக்கு கழுத்தில் அணிந்திருக்கிற தடிமனான சங்கி லி அழுத்துவதன் விளைவாக, அந்த இடத்தில் ரத்த ஓட்டம் இல்லாமல், மரு வரும். பெரும் பாலும் இந்த இடத்து மருக்கள் முடிச்சு, முடிச் சாக வரும். பரம்பரையாகவும் இந்தப் பிரச்னை தொடரலாம்.

என்ன சிகிச்சை?

மருவைச் சுற்றி குதிரை முடி கட்டுவது, நூல் கட்டுவது என்றெல் லாம் பலரும் சரியான விழிப்புணர் வின்றி தவறான சிகிச்சைகளை செய்கிறார்கள். மருவைச் சுற்றி இறுக்கமாக முடியையோ, நூலை யோ கட்டும் போது, அந்த இடத்தில் ரத்த ஓட்டமின்றி, அது உதிர லாம். ஆனால், அதன் மூலம் மேலோட்டமாக உள்ள மரு உதிருமே தவிர, மருவுக்குக் காரணமான வேர் அகலாமல், மறுபடி மறுபடி அது வந்து கொண்டுதான் இருக்கும். 

மருவை நீக்க மிகச்சிறந்த வழி ‘ஃபேஷியல் காட்டரைசேஷன்’. இந்த முறையில் பிரத் யேக கருவி கொண்டு, ஒவ்வொரு மருவாக சுட்டு அகற்ற வேண்டும். அதே நேரம் மருவு க்குப் பக்கத்தில் உள்ள சருமம் சிறிதும் பாதிக்கப் படக் கூடாது. அப்படி அகற்றியது ம், அதன் மேல் அல்ட்ராசானிக் மெஷினை காட்டி னால், மருவுக்குக் காரணமான தொற் று முற்றிலும் நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள் இந்த முறையில் மரு நீக்கம் செய்வதற்கு முன், மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

‘போடாஃபைலம்’ என்றொரு மருந்து கிடைக்கிறது. கள்ளிப்பாலில் இருந்து எடுக்கப்படுகிற இது மிக மிக ஜாக்கிர தையாக, பாதுகாப் பாகக் கையாளப்பட வேண் டியது. இதை மிகச்சரியாக மருவின் மீது மட்டும் வைத்தால், தொற்று நீங்கி, மரு மறையும். தப்பித் தவறி இந்த மருந்து கண்ணில் பட்டால், அது பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது.

அரோமாதெரபியில் மரு நீக்க மிக அருமையான எண்ணெய்கள் உள்ளன. மிர், சிடர்வுட், பெர்கமோ ட், லேவண்டர் ஆகிய 4 அரோமா எண்ணெய்க ளையும் சம அளவு எடுத்து, கிரேப் சீட் ஆயிலில் கலந்து, சருமத்தில் தடவி, அதன் மேல் அல்ட்ராசானிக் கொடுத்தா ல், மருவை உண்டாக்கும் இன்ஃபெக்ஷன் அழிந்து, மறுபடி வராமல் காக்கும். 10 வயதுக்கு மேலான யாருக்கும் இந்த சிகிச்சை யை கொடுக்கலாம். 

மருவா பருவா பாலுண்ணியா?

மருதான் என்பதை எல்லோராலும் பார்த்த உடனேயே கண்டு பிடிக்க முடியாது. சிலருக் கு அது வெள்ளை நிறத்தில் பரு மாதிரி வரும். சிலருக்கு பாலுண்ணி வரும். இன்னொரு வகை மருவானது எக்ஸ்ட்ரா சதை மாதிரியே வரும். அதனால், மருதானா என்பது தெரியா மல் எந்தவிதமான சுய மருத்துவத்திலும் இறங்க வேண்டாம். மரு நீக்கத்தில் நிபுணத் துவம் பெற்ற அழகுக்கலை நிபுணரிடமோ, சரும மருத்துவரிடமோ ஆலோசனை பெற்று, ஸ்கேன் மூலம், அந்த மருவின் தன்மையைக் கண்டறியலாம். அதைக் கிள்ளவோ, சொறிய வோ கூடாது. நகத்தில் தொற்று ஒட்டிக்கொ ண்டால், உடலெங்கும்பரவலாம், ஜாக்கிரதை ! 

ஏற்கனவே கூறியது போல, திடீரென உங்க ளுக்கு எங்கேயாவது மச்சம் மாதிரி கரும்பு ள்ளி தெரிந்தால், அதை அதிர்ஷ்ட மச்சம் என நினைக்க வேண்டாம். அது மருவுக்கு முந் தைய கரும்புள்ளியாகவும் இருக்கலாம் என்ப தால் உடனடி பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம். மருவானது கடுகு அளவிலிருந்து, அரைநெல்லி க்காய் அளவு வரை எப்படி வேண்டுமானாலும் வரலாம். 

வராமல் தடுக்க முடியுமா?

அக்குள் மற்றும் கழுத்துப் பகுதிகள் வியர்வை யும் அழுக்கும் அதிகம் சேரும் இடங்கள். அவற் றை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண் டும். அக்குள் பகுதியில் ரோமங்கள் இல்லாமல் வைத்திருக் க வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன் கழுத்து, அக்குள், தொடை மாதிரியான வியர்வை அதிகம் சுரக்கும் பகுதி களை நன்கு கழுவித் துடைத்துவிட்டு, ஆன்ட்டி ஃபங்கல் பவுடர் தடவிக் கொண்டு படுக்க லாம். பிரச்னை இருப்பவர்கள் ரோல் ஆன், பெர்ஃப்யூம், பாடி ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். வெ ளியே போகும்போது, முகம் மற்றும் கழுத்தில் சன் பிளாக் அல்லது ஃபவுன்டேஷன் தடவிக்கொண்டால், அது சுற் றுப்புற மாசுகளில் இருந்து சருமத்தைப் பாது காக்கும். 

வீட்டிலேயே என்ன செய்யலாம்?

கூடிய வரையில் மருக்களை வீட்டிலேயே சுய சிகிச்சையில் எடுக் காமல் இருப்பது பாதுகாப்பானது. மருத்துவரிடமோ, அழகுக் கலை நிபுணரிடமோ அகற்றிக் கொண்டு, பிறகு மறுபடி வராமல் தடுக்க வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 

சங்கை பால் விட்டு இழைக்கவும். அத்துடன் ஒரு ஜாதிக்காயையும் வைத்து இழைத்து, 5 துளிகள் லேவண்டர் ஆயில் கலந்து, மரு நீக்கிய இடத்தின் மேல் தடவி வந்தால், மறுபடி அது வராது. அரிப்பும் இருக்காது.

நன்றி=> குங்குமம் தோழி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: