Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எனக்கு இது, ஒரு சுகமான அனுபவத்தை கொடுத்த‍து!” – நடிகை லட்சுமி மேனன்

‘ஜிகர்தண்டா’. என்ற திரைப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகி யோர் நடிக்கின்றனர். இப்படத் தை பீட்சா வெற்றிப்படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் தான் இப்படத்தையு ம் இயக்கி வருகிறார். இப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத் தில் லட்சுமி மேனன் ரோட்டோரத்தில் இட்லி சுட்டு, விற்பவராக வருகிறாராம்.

கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். தற்போது ஜிகர்தண்டா என்ற இந்த படத்தில் இட்லி கடை நட த்தும் பெண்ணாக நடிக்கிறார்.. இது குறித்து லட்சுமி மேனன் கூறும் போது, நான் இப்படத்தி ல் இட்லி விற்பவராக வருகிறேன். என்னுடைய கதா பாத்திரம் சிறப் பாக அமைவதற்கு படப்பிடிப்புக்கு செல்லும்முன் மதுரை நகரின் பல் வேறு இடங்களில் நடத்தப்படும் இட்லி கடைகளுக்கு நேரில் சென் று நேரில் அங்கு எந்த முறையில் இட்லி தயாரிக்கிறார்கள். அந்த கடை எப்படி நடத்தப்படுகிறது. கஸ்டமர்கள் என்னவெல்லாம் கேட்பா ர்கள் அதற்கு எப்படி பதில் சொல்ல வே ண்டும் என்று கடையின் ஒரு ஓரத் தில் அமர்ந்து கவனமாக கவனித்து அவர்களின் விற்பனை முறையை தெரிந்து கொண்டேன். இதுபோன்று யதார்த்த மான கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது . இந்த படத்தில் ஒரு குத்து பாடலு க்கு நடனமாடி யிருக்கிறேன். இந்த பாடலை மதுரையிலேயே படமாக்கினர். எனக்கு இது ஒரு புதுமை யான, சுகமான அனுபவத்தை கொடுத்த‍து. இது ஒரு சஸ்பென்ஸ் திரில் லர் படமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: