காதல் என்பது, காதல் ஆரம்பித்ததிலிருந்து மரணமடையும் வரை கூடிக் கொண்டே போக வேண்டுமே தவிர காலையில் முளைத்த காதல் மாலையில் அறுவடை செய்யும் காதலாக இருப்பதில் எந்தவிதமான பயனும் யாருக்கும இல்லை.
ஆகவே, காதலிக்கும் ஒவ்வொருவ ருக்கும், வயதில் முதிர்ந்தால் மட்டும் போதாது, கொஞ்சம் அறிவிலும் முதிர்ச்சியும், பக்குவமும் வேண்டும். அப்போது தான் அந்த காதல் ஆயுள் முழுக்க நீடிக்கும் என்பது ஆன் றோர் வாக்கு.
காதல் என்றால் தென்றலைப் போன்றது காதல் ஒரு வழிப்பாதை என்று பலமொழிகள் காதலைப் பற்றிக் கூறுகின்றன. விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது என்று இங்கு கூற விரும்புகி றோ ம்.
அதாவது விடலைப் பருவத்தில் (டீன் ஏஜ்) மட்டுமல்ல இருவரும் சேர்ந்து தனித்து வாழ தகுதி பெ றாத காதலும் அவர்களது வாழ்க்கையில் சூறாவளியாகத்தான் போய் விடும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படு கிறது என்றாலும். அது முதல் காதலாகவும். சொல்லப்படாத, பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும் தன் னிடம் மகிழ்ச்சியாக பேசும் தனக்கு பிடித்தவர் களாக இருக்கும் ஒருவரை காதலிப்பது அவர்க ளை தனது உயிரினும் மேலாக நினைப்பது போ ன்றவற்றில் ஈடுபடு வார்கள். இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார் கள்.
ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாக இன் னொருவரைப் பார்க்க நேர்ந்தால் அக் காதல் அவர் பின்னா டியே ஓடிவிடும். அது வரை இருந்த காதல் ஒத்துவராது என தனக் குள் முடிவு கட்டிவிட்டு அடுத்த காத லில் இறங்கி விடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டி தனக்கு பாடம் நடத்தும் ஆசிரி யை / ஆசிரியர் சினிமா நட்சத்திரம் விளையாட்டு வீரர்கள் என் அவ ர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அத ன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களை வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோ தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவரை காதலித்து அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்று திருமணம் வரை செ ல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். இவர்க ளை விட்டு விடு வோம்.
நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம்… ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்றுசொன்னா ல்… அது தவறு. மனம் காதலிக்கச் சொன்னா ல் அப்போது மூளை என்ன செய்து கொண்டி ருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவே காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்பு நமக்குள்ள வருமானம் படிப்பு மன உறுதி உடல் உறுதி போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழ லாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வே ண்டும் என்றால் அதற்கு வருமானம் வே ண்டும். திருமணம் செய்து கொள்வதற்கா க காதலிப்பவர்கள் தங்கள் காதல் காதலு க்குப் பிறகும் தொடர வேண்டு மானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உண ர வேண்டும்.
காதலிக்கவும் காதலிக்கப்படவும் அனைவருக்கும் உரிமை இருந்தாலு ம் காதலில் வெற்றி பெற பல தகுதிகள் வேண்டும் என்பதுதான் நிதர்சன மான உண்மை.
ஒவ்வொரு ஆணும் தன்னால், தனது துணையுடன் ஆயுள் முழுக் க வாழ்வதற்கான வருமானம், இருப்பிடம், தகுதிகள், சகிப்புத்தன் மை, பொறுமை விட்டுக்கொடுக் கும் தன்மை, புரிதல் போன்ற அனை த்தும் தன்னிடம் இருக்கின்றனவா என்ப தை சுயமாக சிந்தித்து அறியவேண்டும்.
அதே போல் ஒரு பெண்ணும், தான் காதலிக்கும் ஆணுடன் காலம் முழு க்க சந்தோஷமாக விட்டுக்கொடுத்து வாழும் மனப்பக்குவத்தையும், தீய குணங்கள் ஏதேனும் அவனிடம் இருந்தால், அதை நாசுக்காகவும், நாக ரீகமாக சொல்லும் திருத்தும் நற்கு ணம் இருக்கின்றனவா என்பதை ஒவ் வொரு பெண்ணும் சுயமாக சிந்தித்து அறிய வேண்டும்.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவ தைக்கண்கூடாகக் காண்கி றோம். எனவே படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்கவேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விட க்கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் கு றையும். அது காதலுக்கும் பொருந்தும்.
இணையம் ஒன்றில் கண்டெடுத்த இந்த இடுகைக்கு கூடுதலான வரிகளுடன் மெருகேற்றியது விதை2விருட்சம் இணையம்.